நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, November 15, 2011

பெட்ரோல் விலை குறைகிறது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நிலவரத் துக்கு ஏற்ப இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை இந்திய எண்ணை நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அதன்படி கடந்த 3-ந் தேதி பெட்ரோல் விலை ரூ.1.80 உயர்த்தப்பட்டது.

இந்த விலை உயர்வுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலை சுமார் ரூ.10 உயர்ந்து விட்டது. சென்னையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.63-க்கு விற்றது. தற்போது அது ரூ.73 ஆக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலையைத் தொடர்ந்து டீசல், சமையல் கியாஸ், விலையும் உயரலாம் என்று கூறப்பட்டதால் மக்களிடம் அதிருப்தி அதிகரித்தது. இந்த நிலையில் கச்சா எண்ணை விலை குறைந்தது. கடந்த மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணை 125 டாலராக இருந்தது.

தற்போது அது 115 டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. கச்சா எண்ணை விலை குறைவால் பெட்ரோல் விலையை குறைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுத்திரிகரிப்பு வரி உள்பட எல்லா செலவினங்களும் குறைந்துள்ளதால், எண்ணை நிறுவனங்கள், பெட்ரோல் விலையை குறைக்க சம்மதித்துள்ளன.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1 வரை குறைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் லிட்ட ருக்கு ரூ.2 வரை குறைக்க எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. எண்ணை நிறுவனங் களின் ஆலோசனை கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் விலை குறைப்பு முடிவு எடுக்கப்படும்.

 நாளை இரவு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 17-ந் தேதி முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வரும். 2010-ம் ஆண்டு ஜுன் மாதத்துக்கு பிறகு பெட்ரோல் விலை குறைய இருப்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற கூட்டம் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

இந்த கூட்டத்தில் பெட்ரோல் விலை உயர்வு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கு முன்னதாக பெட்ரோல் விலையை குறைத்து எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல் விலை குறைப்பு மூலம் கூட்டணி கட்சியான திரிணாமூல் காங்கிரசின் மிரட்டலை புறக்கணிக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது

2G ஊழல் வழக்கில் திடீர் திருப்பம்

நாட்டையே உலுக்கிய 2G அலைவரிசை ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம்கோடி நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படும் அறிக்கையில் கட்டாயப்படுத்தி கையெழுத்தி வாங்கியதாக மத்திய தணிக்கைத் துறையின் தொலைத் தொடர்பு பிரிவுக்கான முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சிங் கூறியுள்ளார். சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருந்ததைப் போல 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ரூ.2645 கோடி அளவுக்கே நஷ்டம் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்

மத்திய கணக்குத் தணிக்கைக்கான இயக்குநராக இருந்த ஆர்.பி.சிங் பதவியில் இருந்தபோதுதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட இழப்பு குறித்த அறிக்கை வெளியாகி நாட்டையே உலுக்கியது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் திமுக கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டதோடு மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் திகார் சிறைசெல்வதற்கும் காரணமாக அமைந்தது.

2G அலைவரிசை ஒதுக்கீட்டில் தவறான முறையை கையாண்டதால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை கூறியதாக அறிக்கையை வெளியிட்டவர் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய்.ஆனால்,ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த அறிக்கையைத் தயாரித்த ஆர்.பி.சிங் நஷ்டம் ரூ. 2,645 கோடி தான் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து கூட்டு நாடாளுமன்றக் குழு அவரை நேரில் வந்து வாக்குமூலம் அளிக்க அழைப்பு விடுத்ததையடுத்து இன்று நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் சிங். அவரிடம் கூட்டு நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவர் கூறியதாவது:

தொடக்கத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் வருவாய் குறித்த கணக்கெடுப்புக்கெல்லாம் திட்டமிடப்படவில்லை. பின்னர்தான் அதை சேர்த்தனர். ஏலம் தொடர்பாக டிராய் எந்தவிதமான முடிவையும் எடுத்திருக்கவில்லை. மத்திய அமைச்சரவையும் அதே முடிவில்தான் இருந்தது.எனவே ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.அப்படி இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று உத்தேசமாக கணக்கிடவும் முடியாது.

என்னைப் பொறுத்தவரை ரூ.2645 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்று உறுதியாகக் கருதுகிறேன். இந்த நிலையிலிருந்து எந்தவிதமான மாற்றமும் இல்லை. மேலும் சிஏஜியின் முந்தைய அறிக்கையில் என்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகவும் சிங் கூறியதால் இவ்விவாகாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

'புளூ பிலிம்ஸ்' என் அரிய பொக்கிஷம்

புளூ பிலிம்ஸ் தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம்: 'சர்ச்சை மன்னன்' ராம் கோபால் வர்மா

சர்ச்சையின் மறுபெயர் தான் இயக்குனர் ராம் கோபால் வர்மாவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

நாங்கள் ஒன்றும் சும்மா அப்படி சொல்லவில்லை. காரணம் இருக்கு. பாட்ஷா படத்தில் ரஜினி நின்றால், நடந்தால், சிரித்தால், பேசினால் அழகு என்று பாடுவார் நக்மா. அதற்கு மாறாக இயக்குனர் ராம் கோபால் வர்மா நின்றால், பேசினால், படம் எடுத்தால் சர்ச்சை தான்.

அண்மையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது நீங்கள் எதை விலைமதிக்கமுடியாத பொக்கிஷம் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, சற்றும் யோசிக்காமல் உடனே என்னுடைய புளூ பிலிம்ஸ் கலெக்ஷன் தான் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

என்ன தான் சினிமாத் துறையே அவரை சகட்டுமேனிக்கு விமர்சித்தாலும் மனுஷன் மசிவதாக இல்லை. நீங்கள் பேசுவதைப் பேசுங்கள், நான் இப்படித் தான் இருப்பேன் என்கிறார்.

நான் மற்றவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. எனக்கு படம் எடுக்க ரொம்பப் பிடிக்கும். அதை மக்கள் சில நேரம் ஜிரணித்தாகத் தான் வேண்டும். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் இசையைக் கேட்டுக் கொண்டும், படம் இயக்கிக் கொண்டும், அழகான பெண்ணைப் பார்த்துக் கொண்டும் கழிக்க விரும்புகிறேன் என்றார்.

பிறர் என்னை விமர்சிப்பதை நான் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறது தான் அவர்களுக்கு கடுப்பாக உள்ளது என்று மேலும் தெரிவித்தார்