நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, October 22, 2011

தொழிலதிபரைத்தான் திருமணம் செய்வேன்: சமீரா ரெட்டி

எக்காரணம் கொண்டும் ஒரு நடிகரை திருமணம் செய்ய மாட்டேன். மிகப்பெரிய தொழில் அதிபரைத்தான் மணப்பேன் என்று நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார். பாலிவுட்டில் கோலோச்சி விட்டு, தெலுங்கு, தமிழில் கால் பதித்திருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. நீச்சல் உடையில் தொடங்கி, பட்டுப்புடவை வரை விதவிதமான காஸ்ட்யூம் அணிந்து திரையில் தோன்றி ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வரும் இந்த ஆறடி உயர நடிகை வாரணம் ஆயிரம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பெயரிடப்படாத தமிழ் படமொன்றில் நடித்து வரும் சமீரா அளித்துள்ள பேட்டியில்,

திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில், நான் ஒருபோதும் நடிகரை காதலிக்க மாட்டேன். நடிகரை திருமணம் செய்யப்போவதும் இல்லை. மிகப்பெரிய தொழில் அதிபரைத்தான் மணப்பேன். எனது தந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதால் எனக்கு தொழில் பற்றிய விஷயங்கள் அனைத்தும் அத்துபடி. இதனால் கணவருக்கு தொழிலில் உறுதுணையாக இருக்க முடியும் என்று நம்புகிறேன், என்றார் சமீரா ரெட்டி. விவரமான பொண்ணுதான்!

பிஜேபியும் ஊழல் கட்சிதான் - அத்வானி ஒப்புதல்

பா.ஜ.க., மூத்த  தலைவர் எல்.கே. அத்வானி ஊழலை ஒழிப்பதாகவும்,  வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு  வர வேண்டும் என்றும் கூறி ரத யாத்திரை நடத்தி வருகிறார்.

அவர் இம்மாதம் 11ஆம் தேதியன்று பீகாரில் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த ஊரான சிதாப்தியாரா வில் இந்த யாத் திரையைத் தொடங்கி னார். பீகார் முதல் அமைச்சரும், அய்க்கிய ஜனதாதளத்தின் மூத்த தலைவருமான நிதிஷ்குமார் கொடியசைத்து யாத்திரையை தொடங்கி வைத்தார்.

பா.ஜ.க., பொதுச் செய லாளர் அனந்தகுமார், செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்த யாத்திரை அடுத்த மாதம் 20ஆம் தேதியன்று டில்லியில் நிறை வடைகிறது. டில்லியில் பொதுக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி களைச் சேர்ந்த தலை வர்கள் உரையாற்று கிறார்களாம்.

நாகபுரியில் நேற்று முன்தினம்  ரதயாத்திரை நடந்தது. ரூ.500 லஞ்சம்

பொதுக் கூட்டத் தில் எல்.கே. அத்வானி பேசினார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். மத்தியப் பிரதேசத்தில் அத்வானியின் நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க வந்திருந்த செய்தியாளர்களுக்கு கவரில் வைத்து ரூ.500 கொடுத்ததாக புகார் கூறப்பட்டது.

இந்நிலையில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை யில் உள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா விவ காரம் குறித்து செய்தி யாளர்கள் சரமாரியாக கேள்விக்கணை தொடுத்தனர். அதற்கு அத்வானி பதில் அளித் தார்.

அவர் கூறியதாவது:

பி.ஜே.பி.யின் ஊழல்

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, நாங்கள் விடுத்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அவர் அதைப் புறக் கணித்தார். அதனால் தான் அவருக்கு அந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக சுரங்கத் தொழில் நடத் தப்படுகிறது என்பது தொடர்பாக லோக் ஆயுக்தா அறிக்கை வெளிவந்தவுடன் மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள் என்று எடியூரப்பா விடம் நாங்கள் கண் டிப்புடன் கூறினோம்.

ஆனால் அவர் அதன் படி நடக்கத் தவறி விட்டார். இதனால் தான் இந்த இக்கட் டான நிலை ஏற்பட் டுள்ளது. ஊழல் பிடி யிலிருந்து பி.ஜே.பி.யும் தப்பவில்லை இதை ஒரு பாடமாக எடுத்துக்  கொள்ள வேண்டும். இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழ இடம் கொடுக்கக் கூடாது என்பதில் ஒவ்வொருவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அத் வானி கூறினார்.

நீதிபதி சிங்வி விசாரிப்பார் உச்சநீதிமன்றம் அறிவிப்பு

பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத் தண் டனை வழக்கு விசார ணையை உச்சநீதிமன்றத் தின் 3 பேர் கொண்ட `பெஞ்ச்' விசாரிக்க மறுத்து விட்டது. வக்கீலின் கோரிக் கையை ஏற்று நீதிபதி கள், ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதி பதி சிங்வி விசாரிப்பார் என அறிவித்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண் டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை சென்னை உயர்நீதிமன் றம் 8 வாரத்துக்கு ரத்து செய்து உத்தரவிட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை டில்லி உச்சநீதிமன்றத் துக்கு மாற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி யின் ஒரு அமைப்பின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசா ரணை நீதிபதி சிங்வி முன்னிலையில் நடந்து வந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடப்ப தாக இருந்தது. ஆனால் இந்த மனுவை ஏற்கனவே விசாரித்து வந்த நீதிபதி சிங்வி விடுமுறையில் இருந்ததால், இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், டத்து, சி.கே.பிர சாத் ஆகிய மூவர் அமர் வின் முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது.

நீதிமன்றம் தொடங் கியவுடன் வக்கீல் ராம் ஜெத்மலானி எழுந்து, `இதுபற்றிய விசாரணை, ஏற்கனவே நீதிபதி சிங்வி அமர்வில் நடத்தப்பட்டு விட்டது. வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு உள்ளன. அதுபற்றித்தான் முடிவு செய்து இருக்கும் தீர்ப்பை, தமிழ்நாடு அரசு தங்கள் தரப்பு பதிலை எழுத்து மூலமாக தருவ தற்கு அவகாசம் கேட் டதால், தற்பொழுது அறிவிக்கவில்லை என்று கூறி நீதிபதி சிங்வி தெரி வித்துள்ளார்' என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி கபீர், `அப்படியா னால், இந்த அமர்வு நீதி மன்றம் இந்த வழக்கு விசா ரணையை எடுத்துக் கொள்ளாது' என்று கூறிவிட்டார். எனவே, இந்த வழக்கு, மீண்டும் நீதிபதி சிங்வி அமர்வுக்கே செல்லும் வாய்ப்பு இருக்கிறது. வழக்கு விசாரணை முடிந்ததும் செய்தியா ளர்களிடம் ராம் ஜெத் மலானி கூறியதாவது:-

மூன்று தமிழர்கள் உயிரைக் காப்பாற்ற, வைகோ உணர்வுபூர்வ மாகப் போராடி வரு கிறார். விசாரணையை மாற்ற வேண்டும் என் கின்ற மனு, தள்ளுபடி செய்யப்படும் என்றும், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, மூன்று பேர்களுடைய உயிரை யும் உறுதியாக காப் பாற்ற முடியும் என்றும் உறுதியாக நம்புகிறேன். - இவ்வாறு ராம் ஜெத் மலானி கூறினார்.

பலகீனமடையும் அன்னா ஹசாரே!!


அரசியல் நடவடிக்கை களுக்கு எதிர்ப்பு தெரி வித்து, அன்னா ஹசாரே குழுவில் இருந்து மேலும் சிலர் விலகக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஹசாரேயும், அவரது குழுவினரும் `ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

அரியானா மாநிலம் ஹிசார் நாடாளுமன்ற தொகுதிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அன்னா ஹசாரே குழு வினர் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய் தனர்.

மேலும் இந்த குழுவில் இடம் பெற் றுள்ள முக்கிய உறுப் பினரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது.

இப்படியாக அன்னா ஹசாரே குழுவின் சில செயல்பாடுகள் அரசி யல் ரீதியில் அமைந்து இருப்பது அந்த அமைப் பில் சலசலப்பை ஏற் படுத்தி உள்ளது.

ஹிசார் தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னா ஹசாரே குழு வில் இருந்து பி.வி.ராஜ கோபால், ராஜீந்தர் சிங் ஆகிய 2 உறுப்பினர்கள் நேற்று முன்தினம் வில கினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து, மேலும் சிலர் அந்த குழுவில் இருந்து விலகக்கூடும் என்று தகவல் வெளி யாகி உள்ளது. அன்னா ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள டெல்லி கத் தோலிக்க ஆர்ச் பிஷப் வின்சென்ட் எம்.கான் செஸ்சாவ் அதிருப்தியில் இருப்பதாகவும், எனவே அவரும் விலகக்கூடும் என்று தகவல் வெளி யாகி உள்ளது.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வர்கள் இருக்கும் சமு தாயத்தின் தலைவரான அவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிரான பிரசாரத்திலோ அல்லது ஆதரவான பிரசாரத் திலோ பங்கு கொள்ள மாட்டார் என்று டெல் லியில் கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

அன்னா ஹசாரே யுடன் சேர்ந்து ஊழ லுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை உரு வாக்கிய 20 பேரில் கத் தோலிக்க ஆர்ச் பிஷப் வின்சென்ட் எம்.கான் செஸ்சாவ்வும் ஒருவர் ஆவார்.

இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்களில் பெரும்பலானோருக்கு அன்னா ஹசரேயுடன் நல்லுறவு இருந்த போதி லும் அரவிந்த் கெஜ்ரி வால், கிரண் பேடி உள்ளிட்ட சிலரின் செயல் பாடுகளில் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அன்னா ஹசாரே குழுவில் இருந்து மெகமூத் மதானி, சையத் ரிஸ்வி, சையத் ஷா பஸ்லுர் ரகுமான் வாய்சி ஆகி யோரும் விலக வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித் தன. ஆனால் தனது குழு வில் இருந்து மேலும் யாரும் விலகாமல் இருக்க அவர்களை சமா தானப்படுத்தும் முயற்சி யில் அன்னா ஹசாரே ஈடுபடுவார் என்று கூறப் படுகிறது.

வயிற்றைக் காப்பது எப்படி?


வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால் அது வயிற்றுக்கும் நன்மையே.

அப்படிப்பட்ட வயிற்றுக்கு உகந்த சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.

சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்­ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.

நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.

சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீ­ர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீ­ர் அருந்தக்கூடாது.

சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீ­ர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீ­ர் அருந்தக்கூடாது.

சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீ­ர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.

சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்­ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.

பரங்கிக்காய், பெரிய காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.

ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.

மூளையை பாதிக்கும்


காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும்.
இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
புகை பிடிப்பதனால் மூளை சுருங்கவும், அல்ரஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவதனால் புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதனால் நமக்குத் தேவையான ஆக்சிஜனை பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்சிஜன் செல்லா விட்டால் மூளை பாதிப்படையும்.
நல்ல உறக்கம் இல்லாமையால் மூளைக்கு ஓய்வு இல்லாமல் போகின்றது. தேவையான அளவு தூங்காமலிருப்பது நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
தலையை மூடிக்கொண்டு நித்திரை செய்வதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறைக்கிறது.
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பிற்பாடு மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

தமிழக அமைச்சர் கருப்பசாமி மரணம்

தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சி கருப்பசாமி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 56.

இரத்த புற்று நோயால் அவதிப்பட்ட அவர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்ற இன்று மரணமடைந்தார். இவர் சங்கரன்கோவில் (தனி) தொதிகு எம்.எல்.ஏ.

ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசில் அவர் கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். கடந்த ஜூன் 15-ம் தேதி நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது இவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரானார்.

தலித் இனத்தைச் சேர்ந்த விவசாயியான இவர், சங்கரன்கோயில் தொகுதி்யில் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றவர் கருப்பசாமி.

ரத்தப் புற்று நோயால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த கருப்பசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சமீபத்தில் அவர் உடல்நிலை மோசமடைந்தது. எனவே அவரது பொறுப்புகளை அமைச்சர் சிவி சண்முகம் கவனித்து வந்தார்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஒரே அமைச்சர் கருப்பசாமியாகத்தான் இருக்கும். நோய் தீவிரமடைந்துவிட்டதால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையி்ல் அவர் இறந்தார்
 
அன்னாரின் குடும்பத்திற்கு மனசாட்சியின் ஆழ்ந்த அனுதாங்கள்.

சிகரெட் பிடித்தபடி உயிரை விட்ட கடாபி மகன்

சிர்த்நகரில் பதுங்கியிருந்தபோது கடாபி கொல்லப்பட்டார். இந்த சண்டையின் போது அதை வழிநடத்தி சென்ற அவரது மகன் முட்டாசிம் கடாபியும் புரட்சி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடலை பொது மக்கள் பார்வைக்காக புரட்சிப்படையினர் வைத்திருந்தனர். அப்போது அவர் பேண்ட் மற்றும் பனியன் அணிந்திருந்தார்.

கழுத்தில் குண்டுகள் துளைத்ததால் காயம் இருந்தது. இதனால் உடல் முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சி அளித்தது. சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பு அவர் ஒரு மறைவிடத்தில் பதுங்கி இருந்தார். இதை அறிந்த புரட்சி படை அங்கு சென்றது. அப்போது அவர் வலது கையில் பாட்டிலை பிடித்து தண்ணீர் குடித்து கொண்டிருந்தார். இடது கையில் சிகரெட்டை பிடித்தபடி புகைத்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் புரட்சி படை வீரர்கள் அவரை சுட்டுக்கொன்றனர். எனவே, அவர் பிணமாக கிடந்த இடத்தில் பாதி தண்ணீர் பாட்டிலும், பாதி நிலையில் எரிந்த சிகரெட்டும் கிடந்தது. இறுதி கட்ட சண்டையின் போது கடாபி அவரது மகன் மற்றும் ஆதரவாளர்கள் பலர் பலியாகினர். இதற்கிடையே கடாபியின் நெருங்கிய ஆதரவாளர் சயீப்- அல்-இஸ்லாம் குண்டு காயங்களுடன் உயிருடன் பிடிபட்டார்.

தற்போது அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது போட்டோ விரைவில் வெளியிடப்படும் என இடைக்கால அரசு அல்- அரேபியா டெலிவிஷனில் அறிவித்தது. கடாபியின் சொந்த ஊரான சிர்த் நகரம் இவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இவர்தான் ராணுவத்தை வழி நடத்தி சென்றார்.

பல்டி அடித்த விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். நான் சென்ற ஒவ்வொரு இடத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து எனது கருத்துக்களை எடுத்துச்சொல்லும் வாய்ப்பினை பெற்றேன். இதன் மூலம் தமிழ்நாட்டில் தே.மு.தி.க. ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது என்பதும், அதனுடைய சின்னமான முரசு சின்னம் தமிழ் நாட்டில் மூலை, முடுக்குகளில் எல்லாம் ஒலிக்க ஆரம்பித்து விட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஓயாது உழைத்த கழகக் கண்மணிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது இதயமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவாக ஆளும் கட்சி உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவது வாடிக்கை. அரசின் நலத் திட்டங்களுக்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கு அளிக்கின்ற நிதியுதவியும் அப்பொழுது தான் வந்து சேரும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் உண்டு. அதுவும் இந்த ஆட்சிப்பொறுப்பேற்று 5 மாதங்கள் கூட ஆக வில்லை. இந்தச் சூழ்நிலையில் இந்த ஆட்சியின் மீது உள்ளாட்சி மன்றத்தேர்தலில் வாக்காளர்கள் நம்பிக்கை வைப்பதும், அரசின் நலத்திட்டங்கள் தங்களுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கைதான்.

ஆகவே, இந்தத் தேர்தல் முடிவுகளில் எந்த வியப்பும் இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் தே.மு.தி.க. தனக்கென ஒரு அரசியல் பாதையை வகுத்துக் கொண்டுள்ளது என்பதும், தே.மு.தி.க. துவங்கப்பட்ட நாளில் இருந்து கடந்த சட்டமன்றத் தேர்தல்களைத் தவிர, பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டே பழக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

தமிழ்நாட்டு மக்களிடையே அங்கீகாரம் பெற்ற அரசியல் சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதும், இன்றைய இளைஞர்களின் மாபெரும் இயக்கமாக மலர்ந்து வருகிறது என்பதும் வரலாறாகும். விவசாயி தனது விளை நிலத்தில் பயிரிடுகிறபொழுது ஒரு மகசூல் பொய்த்துப் போகிறது என்பதாலேயே, விளைநிலமும் கெட்டு விடுவதில்லை. விவசாயியும் நம்பிக்கையை இழந்து விடுவதில்லை. அடுத்த மகசூலுக்கு அவர் தயாராவது இயற்கையே.

அதுபோல் தே.மு.தி.க. தமிழ்நாட்டு மக்களுக்காக, அதுவும் குறிப்பாக ஏழை, நடுத்தர மக்களுக்காக தொடர்ந்து தொண்டாற்ற தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பண பலம், படை பலம், ஆசாபாசங்களுக்கு ஆட்படுதல் போன்றவற்றையெல்லாம் மீறி, தே.மு.தி.க. அணியினருக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு எனது இதய மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

'மறுமலர்ச்சி' திமுகவுக்கு

மதிமுகவினர் நிச்சயம் இந்தத் தேர்தலை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். காரணம் 3 மாநகரட்சிகளில் அக்கட்சிக்கு எதிர்பாராத அளவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. மேலும் பல இடங்களில் ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.

அனைவராலும் சீந்தப்படாத கட்சியாகவே இந்த தேர்தலை சந்தித்தது மதிமுக. இருந்தாலும் கூட்டணிக்காக யாரிடமும் போய் கெஞ்சாமல், அடிபணியாமல் துணிச்சலுடன் தனியாகவே தேர்தல் களத்திற்கு அனுப்பினார் வைகோ. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. தன்னந்தனியாக, எந்தவித பின்பலமும் இல்லாமல், தமிழ் ஆர்வலர்களையும், மதிமுக கொள்கைப் பிடிப்பாளர்களை மட்டுமே நம்பி நின்ற வைகோவுக்கு சந்தோஷச் செய்தியாக கணிசமான வாக்குகள் இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலி்ல அக்கட்சியின் வேட்பாளர் மிகப் பெரிய அளவில் 23,000க்கும் மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

கோவையில் 11,000க்கும் மேலாகன வாக்குகளையும், திருச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளையும், அக்கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.

மேலும் ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் தேர்தலில் மதிமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தது. கடைசி நேரத்தில் அது சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதுதவிர பல இடங்களில் மதிமுகவுக்கு அவர்களுக்கென்றே இருக்கும் 4000, 5000 வாக்குகள் அப்படியே கிடைத்துள்ளன. இந்த தேர்தலில் மதிமுகதான் தனது வாக்கு நிலை கரையாமல் நிலையாக உள்ளதை நிரூபித்துள்ள ஒரே கட்சி என்று சொல்ல முடியும் அளவுக்கு அதற்கான வாக்குகளை தொடர்ந்து பெற்று வருகிறது.

நிச்சயம் இந்த தேர்தல் மதிமுகவுக்கு நிச்சயம் மறுமலர்ச்சியைக் கொடுத்துள்ள தேர்தல் என்று கூறலாம். நிச்சயம், லோக்சபா தேர்தலில் மதிமுகவை கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதா முன்வருவார் என்பதில் சந்தேகமில்லை.

கொச்சியில் குட்டித்தீவு நயன்தாரா


நடிகை நயன்தாரா கொச்சி அருகே குட்டித் தீவு ஒன்றை வாங்கியுள்ளாராம்.

நடிகை நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்துகொள்ளப் போகின்றனர் என்பது அனைவரும் தெரிந்ததே. அவர்கள் திருமணத்திற்குப் பிறகு மும்பையில் செட்டிலாகின்றனர். அதற்காக ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார் நயன். எப்பொழுது ஷாப்பிங் சென்றாலும் தனக்கு டிரெஸ் எடுக்கிறாரோ இல்லையோ, தவறாமல் பிரபுதேவாவுக்கு டிரஸ் எடுத்துவிடுவார்.

இந்நிலையில் கொச்சியில் இயற்கை எழில் கொஞ்சும் குட்டித் தீவு ஒன்றை வாங்கியுள்ளாராம் நயன்தாரா. இது தவிர திருவல்லா, எர்ணாகுளம், தேவரா ஆகிய இடங்களிலும் வீடு வாங்கியுள்ளாராம்.

சம்பாதித்த பணத்தை எல்லாம் நயன் பிரபுதேவாவுக்காக செலவளித்துவிட்டார். தான் ஆசை, ஆசையாக வாங்கிய பிஎம்டபுள்யூ காரைக் கூட விற்றுவிட்டார் என்றெல்லாம் ஒரு காலத்தில் செய்திகள் வந்தது என்பது குறிப்பிடத்தகக்து

காணாமல் போன தேமுதிக

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி இடங்களில் அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்றுவரும் நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டசபைத் தேர்தலை சந்தித்து தற்போது தனிதத்துப் போட்டியிட்ட தேமுதிக மிகப் பெரிய அடியை வாங்கியுள்ளது.

மாநகராட்சிகளிலும் சரி, நகராட்சிகளிலும் சரி இந்தக் கட்சி அதிமுகவின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. பேரூராட்சிகளில்தான் இக்கட்சிக்கு ஓரளவு வார்டுகள் கிடைத்து வருகின்றன.

10 மாநகராட்சி மேயர் தேர்தலிலும் தேமுதிக 3வது மற்றும் 4வது இடத்தில்தான் உள்ளது. இங்கு வார்டுகளிலும் கூட தேமுதிக வேட்பாளர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

பேரூராட்சித் தலைவர் பதவியைப் பொறுத்தவரை ஒரு இடத்திலும் தேமுதிக முன்னணியில் இல்லை. அதேசமயம் கவுன்சிலர் பதவியிடங்கள் ஓரளவு இக்கட்சிக்குக் கிடைத்துள்ளது.

தபால் ஓட்டுக்களிலும் கூட தேமுதிகவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் கிடைக்கவில்லை. பல இடங்களில் ஓட்டே கிடைக்கவில்லை.

தேமுதிக வாக்குப் பிரிக்கும் கட்சியாகவே மீண்டும் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை அதிமுகவின் வாக்குகளை தேமுதிக எதுவும் செய்யவில்லை. மாறாக திமுகவின் வெற்றியைத்தான் இந்த முறை தேமுதிக பல இடங்களில் பாதித்துள்ளது. கடந்த காலங்களில், அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் ஓட்டையைப் போட்ட தேமுதிக இந்த முறை அதிமுகவை விட்டு விட்டு திமுகவின் வெற்றிவாய்ப்பை பல இடங்களில் பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.