நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, June 30, 2012

அழகா சிலை மாதிரி இருக்கே, இந்த பொண்ணு டாப்பு மத்ததெல்லாம் டூப்பு


வணக்கம்

இம்புட்டு அழகா சிலை மாதிரி இருக்கே இந்த குதிரை (யோவ் நான் குதிரையை சொன்னேன்) சிலையா? நிஜமா?

 நிஜம் தான் தங்கம் முலாம் பூசியது போல எம்புட்டு பளபளப்பா இருக்குதே இதன் விலை இந்திய மதிப்பில் ரெண்டு கோடியாம் (குதிரைக்கு மட்டுமே அதன் பராமரிக்கும் அப்பெண்கள் சேர்க்காமல் ஹி ஹி ஹி அதுக்கு தனி சார்ஜாம்)

 என்ன சொல்ல வாரேன்னா நண்பர்  சங்கவியின் பதிவை இங்கே படிக்க நேர்ந்தது..அவர் ஊரில் உள்ள குதிரை சந்தை இங்கே அட அட  நீங்களும்   போய்   பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


நண்பேண்டா...... நட்புன்னா இது நட்பு மத்தது எல்லாம் மப்பு


  என்னா  அழகு.. அழகை பாரேன்,...
முகத்தை மூடிகிட்டு எப்பூடி பாக்குறது... ஹி ஹி 
 மருதாணி அழகை  பாரேன்.மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

உங்களை நீங்களே கட்டி தழுவ முடியாது

நீங்கள் உங்கள் சொந்த தோளில்  சாய்ந்து  அழ முடியாது

வாழ்க்கை முழுவதும் நாம்  மற்றொருவர்  வாழ்வை சார்ந்தே வாழ முடியும்

ஆகையால்

வாழுங்கள் உங்களை அதிகம் நேசிக்கும் துணை /நட்பு உறவுடன் இணைந்து. 


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


இந்த பொண்ணு  டாப்பு  மத்ததெல்லாம் டூப்பு


டிஸ்கி :வாங்கையா வாங்க, ஆரம்பிச்சிட்டோம்ல......ம்தா.


டிஸ்கி : இந்த பதிவின் தலைப்பு காரணம் இந்த கமண்டு :

//வீடு சுரேஸ்குமார் said... 
@மயிலன்; மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை தாண்டி, CHEMOTHERAPY க்காக மொட்டையடித்து ஒரு வருட காலம் உடலாலும் மனதாலும் நொந்து மீண்டு வந்திருக்கும் தேவதை மம்தா.. தன்னம்பிக்கையின் வெளிப்பாடே அந்த அழகு...
/////////////////////////////////
தெரியாத செய்தி மயிலன்! இப்பொழுது மம்தா மீது மரியாதை ஏற்படுகின்றது...!சுன்டு விரல்ல அடிபட்டாக் கூட சிங்கப்பூர் மருத்துவமனை போகும் நடிக்ர்களுக்கு ரசிகனா .இருப்பதை விட மம்தாவிற்கு ரசிகனாக இருப்பது பெருமை!//

 இந்த கமன்ட் மற்றும் பதிவு லிங்க்

Wednesday, June 27, 2012

பொண்ணுங்க Vs பசங்க முத்தம்

வணக்கம்


இவர் யாருன்னு தெரியுதா???? (மனசாட்சியை மாதிரி மூஞ்சியை மறைச்சிக்கிட்டு.... யாருல அங்க முனுமுனுக்கிறது) ஹி ஹி ஹி முடியல.


 மக்காஸ்,            தலையை ஆட்டி ஆட்டி பாருங்க...கண்ணை சிமிட்டி சிமிட்டி பாருங்க   தேர்வு அறையில் 7 விஷயங்களை தான் நம்ம  பொண்ணுக, பசங்க  செய்கிறார்கள்:

பொண்ணுங்க      
                                                                      
1 எழுதுவது 
 2 முடியை காதுகளுக்கு பின்னல் எடுத்து விடுவது 
3 மீண்டும் எழுதுவது                                                         
4 பேனாவில் மை இருக்கா சோதனை செய்வது       
5  மீண்டும் எழுதுவது                                                        
6 கூடுதலாக காகிதம் கேட்பது           
7 மீண்டும் எழுதுவது                                            
             
  பசங்க
1 எத்துனை பொண்ணுங்க இருக்காங்க என்று எண்ணுவது
2 பெண் மேற்பார்வையாளரை நோட்டம் விடுவது
3 அறையில் உள்ள ஜன்னல் கதவுகளை எண்ணுவது
4 பேனா எந்த கம்பனி என்று பார்ப்பது
5 அமர்ந்த இடத்தில் மாற்றி அமர்வது
6 மணியை பார்ப்பது எப்படா வெளியில் போவோம்
 7 அடுத்த தேர்விலாவது குறைந்த பட்சம் நல்லா படிக்கோணும் நினைப்பது


திருமணபந்தம் அதிகாரபூர்வமான அனுமதி பெற்ற உண்மையான முத்தம் மத்ததெல்லாம் பித்தம்.  


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

காதல்....,

காதல்ன்னா கூந்தல் மாதிரி..

அள்ளி முடியலாம் பின்னி சடையும் போடலாம்..,

ஹிம்....தலை குளிக்கும் வர.
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

 வந்'தார(கை)'யும் வாழவைக்கும்   தமிழக
  
சந்தைக்கு வந்த சந்தனக்கட்டையே.


நன்றி படங்கள் கூகிள்

Monday, June 25, 2012

பக்கி பயபுள்ள மட்டயாகிடுச்சே

வணக்கம்

என்ன புதுசா சொல்ல போறேன் படங்களை பெரிதாக்கி பாருங்கள்இப்பூடி தான் தீயா வேலை செய்யணும் நெருப்பா இருக்கோணும்

நல்லா புடிக்குதுங்க காக்கா


ஹிம்...தர்பூசனிக்கே....பக்கிபயபுள்ள மட்டயாகிடுச்சே 


கொய்யால.. பீச்க்கு காத்து வாங்கி சந்தோசமா இருக்கலாமுன்னு வந்தா  இந்த மனுஷ பயபுள்ளக...உண்டு இல்லைன்னு பார்த்துடுவோம்.. வா.. செல்லம் மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு - விளையாடு, நிறுத்தாம விளையாடு

வாழ்க்கை என்பது ஆடல் போல - ஆடு, தைரியமா ஆடு

வாழ்க்கை என்பது பாடல் - பாடு பாடிக்கொண்டே இரு

வாழ்க்கை என்பது கடினமான பாறை  - மோது முட்டி மோதுவிஸ்கி : லொள்ளு & ஜொள்ளு  

கடல்நீர் குடிநீராகும் காலம் வெகு தொலைவில் அல்ல.குறிப்பு: இன்று  பிளாக்ல எதாவது பிரச்சினையா??

சில வலை பூக்களில் கமண்ட்டு போட்ட அதுவாவே டிலிட் ஆவுதே இல்ல டிலிட் பண்றாங்களா புரியலையே - யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.

படங்கள் நன்றி கூகிள்

Saturday, June 23, 2012

மஞ்சகாட்டு மைனா

பிரமாண்டம் பிரமாண்டம் அப்படின்னா இப்பூடீ தானோ:

நீங்க பாருங்களேன்... நீங்க பாருங்களேன்..,

(எப்பவும் போல் படங்களை பெரிது படுத்தி பார்க்கவும்)டிஸ்கி : படங்கள் அனைத்தும் போட்டோஷாப் / ஆர்ட் ஆக கூட இருக்கலாம் பட், கற்பனை திறன்  பிடிச்சிருக்கு, படைப்பாளிக்கு பாராட்டுக்கள்.


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

முகத்தில் புன்னகை இல்லாத மனிதனா,
உங்கள்  வங்கி கணக்கில் கோடிகணக்கில் இருந்தும்
காசோலை புத்தகம் இல்லாமல் இருப்பதற்கு சமம்.

புன்னகை உன் முகத்தின் சாளரத்தில் ஒளி போன்று அது கொண்டு சேர்க்கும் நன் மக்களிடம். விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

மஞ்சகாட்டு மைன்னா......

 மடியில் என்ன ஓய்னா.....படங்கள் நன்றி கூகிள்

Wednesday, June 20, 2012

திருமணத்துக்கு பின் இது சகஜமா

ஒரு காலத்தில், ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டுவிழா  கொண்டாடினார்கள்

அவர்கள் இருவருக்குள்ளும் 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் ஒரு மோதல், சண்டை சச்சரவு,  குக்கர் மூடி வீசுறது, பூரி கட்டை எறிவது இது எல்லாம் நடந்ததே இல்லை. இந்த செய்தி நகரில் பிரபலமாக,
 
உள்ளூர்  செய்தித்தாள் ஆசிரியர் இந்த ரகசித்தை  கண்டு  பிடிக்க  ஆவல் கொண்டு, தம்பதிகளை சந்தித்து வாழ்த்துகளை கூறினார்.

அதன் பின் நடந்த உரையாடல்:


ஆசிரியர்:.. "ஐயா, இது அதிசயமாகவும்  நம்பமுடியாததும்  எப்படி இந்த சாதனை செய்ய முடிந்தது?

தனது பழைய தேனிலவு நாட்கள் நினைவுக்கு வர  கணவர் கூறினார்:


"நாங்கள்  திருமணத்திற்கு பிறகு தேனிலவுக்கு ஊட்டி போயிருந்தோம் .
இறுதியாக  குதிரை சவாரி செய்யாலாம் என்று  இரண்டு வெவ்வேறு குதிரைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நாங்கள் சவாரி தொடங்கினோம்.


என் குதிரை மிகவும் நன்றாக இருந்தது ஆனால் என் மனைவி சவாரி செய்த குதிரை ஒரு   பைத்தியக்காரன் போல் தெரிந்தது.


போகும்  வழியில் அந்த குதிரை என் மனைவியை  திடீரென்று குதித்து
 கவிழ்த்தது, நிலத்தில் இருந்து தனது நிலையை மீட்டு,
என் மனைவி மீண்டும் குதிரை  சவாரி செய்யும் முன்  "இது உனக்கு முதல் முறை ஆகும்" என்றார்.


அவள் மீண்டும் குதிரை அமர்ந்து  சவாரி தொடர்ந்தது.  பிறகு
அதே போன்று மீண்டும் நடந்தது.
அவள் இந்த முறை மீண்டும் அமைதியாக வந்து  "இது உனக்கு இரண்டாவது முறை ஆகும்" என்று தொடர்ந்தார்...

குதிரை அவளை  மூன்றாவது முறை கைவிடப்பட்ட போது, அவள்  அமைதியாக பர்ஸ் இருந்து சுழல் துப்பாக்கி எடுத்து குதிரையை சுட்டு விட்டார் !


நான் என் மனைவிடம்  கத்தினேன்: "நீ என்ன காரியம் செய்தாய் ஒரு அப்பிராணியை கொன்று விட்டாயே . நீ என்ன பைத்தியமா? 

அவள் ஒரு அமைதியான பார்வை பார்த்து விட்டு  கூறினார்:.

"! இது உங்களுக்கு முதல் முறை" "

கணவன்:  "அது தான்..... அதன் பிறகு நாங்கள் இப்போது வரை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்."

டிஸ்கி :  ஹி ஹி ஹி இதிலிருந்து அறியப்படும் நியதி என்னவெனில்....திருமணத்துக்கு பின் இதுவெல்லாம் சகஜமப்பா.
கட்டிக்கிட்டு ஆடுறது கட்டாம ஆடுறது அதான் சலங்கை இது எல்லாம் கல்யாணத்துக்கு முன்.....கால் கட்டு போடணும் கால் கட்டு போடணும் சொல்வாங்களே அதன் இதா ம்விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு  

ஏய்ய்ய்   வர்றீய்யா... ஒத்தைக்கு ஒத்த போட்டு பார்த்திடுவோம்
 
நம்புங்க, இந்த பதிவுக்கு அடிப்படை காரணம் மச்சி வீடு சுரேஷ்  இங்கே . இது  எதிர் பதிவு,.. இல்ல   ஆதரவு பதிவு,... எப்பூடீ வேணாலும் எடுத்துக்கோங்க  அது  உங்கள்  விருப்பம். 

Monday, June 18, 2012

ரெண்டு ரெண்டா தெரியுதே

எப்பவுமே நீங்க ஒருவரை முதல் முதலாக பார்க்கும் போது வரும் எண்ணம், சிந்தனை வேறு  அப்புறம் அவருடன் பேசி பழகிய பின் தான் தெரியவரும் அவரின் உண்மையான  பெர்சனாலிடி:

இப்ப கீழ உள்ள  படங்கள்  சில  ஜோடிகளை  வைத்து  ஆடைகளை  மாற்றி  ,.. நீங்களே பாருங்களேன்  வேடிக்கையாக இருக்குல்ல இப்ப சொல்லுங்க 

 தவறு நடப்பது பார்வையிலா, மூளையிலா ?

படங்களை பெரிதாக்கி பார்க்கவும்  


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல 

 நம் நாட்டுக்கா​க இரண்டு நிமிடங்கள்


முடிவில்லா அறிவியல் பயணத்தில் மறக்க முடியாத மனிதர் கோவையை சார்ந்தவர்
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


இன்னைக்கு டபுள் மாமே

ஒண்ணு லொள்ளுக்கு, ஒண்ணு ஜொள்ளுக்கு

ஹல்ல்ல்லோ எச் ஜூஸ் மீ எது லொள்ளு எது ஜொள்ளு

அது உங்க பார்வை....

Saturday, June 16, 2012

இந்த பொண்ணு தனியா நிக்குது? அந்த பொண்ணு மந்திரியாகுமோ?

வணக்கம்

படங்களை பெரிது படுத்தி பார்க்கவும்இதயம் = மனசு -  தலை = மூளை


நல்லா பாருங்க.....மக்களே,  குருப் போட்டோ அல்ல குடும்ப போட்டாவாம் மொதலையோட. நோ அரசியல் ப்ளீஸ்


எல்லோரும் ஜோடி ஜோடியாய் இருக்கும் போது  ஏன் இந்த பொண்ணு மட்டும் தனியா நிக்குது...... ம் ஏதோ தப்பு இருக்குது.


 மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

இவரை நல்லா பாத்துகோங்க மக்களே


 கொஞ்சம் டீசன்டான படங்கள்  

இவர் போர்ன் ஆக்டர் (அதாவது நீல பட நடிகை - சிவப்பு ட்ரெஸ் போட்டுருக்குன்னு கேட்கபாடாது ஒக்கே) பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் இவர்  இந்தியாவில் பிரபலமானார். (நாங்களும் பார்த்தோம்ல) இதையடுத்து பூஜா  பட்(இவர் ஒரு நடிகை என்பது கூடுதல் தகவல்) என்ற இயக்குனர் (இவுங்க அப்பா மகேஷ் பட் பிரபல இயக்குனர்)ஹிந்தியில்  தனது படமான ஜிஸ்ம் 2ல் (ஜிஸ்ம் என்றால் தமிழில் உடம்பு ) சன்னி லியோனை நடிக்க வைத்துள்ளார். இவர்  பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.ஆபாச நடிகையான இவர் தற்போது பெரிய நட்சத்திரம் அளவுக்கு கொண்டாடப்படுகிறார்.
ஏன் சொல்றேன்னா வரும் காலத்தில் சன்னி லியோன் (தமிழ் படங்களிலும் வரலாம்)  எம்பி (MP)  ஆகி  மந்திரியும் ஆவார் - இப்பவே நல்லா பாத்துகோங்கோவிஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


இது இடுப்பு.....

அடுப்பெல்லாம் இடுப்பை பத்தி பேசுகையில்

இடுப்பெல்லாம் என்னான்னு பேசும்!? # டவுட்டு  


   

Wednesday, June 13, 2012

பெண்களிடம் இருக்கா விழிப்புணர்வு

வணக்கம்

படங்களை பெரிதுபடுத்தி பார்க்குமாறு  கேட்டுக்கொள்கிறேன்:

பார்ரா........ செஸ்  கூட ஆடுதேடெல்லி விமான நிலையத்தில் உள்ள கழிப்பறை

ஆண் பெண் அடையாளம் பாத்தீங்களா..!

மேலும் விளக்கம் தெரிந்து கொள்ளவிழிப்புணர்வு

பெண்களுக்கு முக்கிய வேண்டுகோள் தயவு கூர்ந்து ரெடிமெட் கடை, சூப்பர், ஹைபர் மார்க்கெட் மற்றும் மால்களில் உள்ள ட்ரெயில் ரூம் ( ஆடை அணிந்து பார்க்கும் அறை) பயன் படுத்தும் போது  உசார் - பின்ஹோல் கேமராக்களால் படம் /வீடியோ பிடிக்கபடுகிறது  (இதை உங்கள் குடும்பத்தார் நண்பர்கள் உறவுகளுடன் பகிர்ந்து
கொள்ளவும்)  இதோ உதாரண படம்


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

தோல்வி என்பது காகிதம் போல,
வெற்றி என்பது முழு புத்தகம் போல, 
காகிதத்துக்காக  முழு புத்தகத்தை இழக்கலாமா !? விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


 பார்வையால்  மனசு தவிக்குது

 விழியால்  உள்ளம்  வலிக்குது  Saturday, June 9, 2012

திரிஷாவுடன் அந்த மூன்று விஷயங்கள்

 

கடந்த பதிவில் பிரேக் கேட்டு இருந்தேன் சோ,
பிரேக்குக்கு பின் :
(பிரேக்கில் நடந்தவைகள் விரைவில் உங்கள் பார்வைக்கு வரும்)

மனித  வாழ்க்கையில் மூன்று விஷயங்கள்:


அழிவுக்கு காரணம் - பேராசை, பெருமை, கோபம்


மிகவும் மதிப்புமிக்கது  - சுயமரியாதை, நேரம், நேசிப்பு


பெரிய மனிதர் ஆக - கடின உழைப்பு, நேர்மை, வெற்றி


உறுதியாக சொல்ல முடியாது - கனவுகள், வெற்றி, அதிர்ஷ்டம்


மீண்டும்வாராதது - வார்த்தைகள்,  வாய்ப்பு,  நேரம்


இழக்க  கூடாது - அமைதி, நம்பிக்கை, நேர்மைநாசா,  செவ்வாயில் சென்று வேலை செய்வோருக்கான நேர்முக தேர்வு நடக்குதுங்க:

(குறிப்பு - செவ்வாய் சென்றால் பூமிக்கு திரும்ப முடியாதுங்க)   
 
முதல் விண்ணப்பதாரருங்க, ஒரு இத்தாலியருங்க, அவரிடம் செவ்வாய் செல்ல எவ்வளவு டாலர் வேண்டும் என்று கேட்க படுகிறதுங்க?
அவர் பதில் சொல்கிறாருங்க: ஒரு மில்லியன் டாலர்கள் வேண்டும் அதை நான் தொழில் கல்வி  நிறுவனத்துக்கு தானமாக சமர்பிப்பேன்ங்க. 
 
அடுத்த விண்ணப்பதாரருங்க, ஒரு அமெரிக்கருங்க, அதே கேள்வியை கேட்டாங்க. அவர் இரண்டு மில்லியன் டாலர்கள் கேட்டாருங்க.
 
"நான், என் குடும்பத்துக்கு  ஒரு மில்லியன் கொடுக்க வேண்டும்ங்க,"மற்றும் மருத்துவ ஆராய்ச்சி முன்னேற்றம் துறைக்கு ஒரு  மில்லியன் தானமாக சமர்பிப்பேங்க."என்று அவர் விளக்கினார்ங்க.
 
கடைசியாக விண்ணப்பதாரருங்க இந்தியருங்க,  அதே கேள்வியை கேட்டார்கள், நேர்காணல் நடத்துபவரின் காதில் முணுமுணுத்தாருங்க  "மூன்று மில்லியன் டாலர்கள்." என்று கோரிக்கையைங்க.
  
"ஏன் அப்படி மற்றவர்களை விட அதிகமாக?" பேட்டியாளர் கேட்டாருங்க.
 
இந்தியருங்க  "நீங்கள் எனக்கு $ 3 மில்லியன் கொடுத்தால், உங்களுக்கு  $ 1 மில்லியன் கொடுப்பேனுங்க, நான் $ 1 மில்லியன் வைத்துக்கொள்வேனுங்க, மற்றும் நாம் $ 1 மில்லியன் கொடுத்து இத்தாலியரை  அனுப்பி வைப்போம் என்றாருங்க.                            இது எப்பூடீ ......


விழிப்புணர்வு:உண்மை சம்பவம்: இந்த படம் ஒரு பாடத்தை பதிவு செய்கிறது
தயவு கூர்ந்து உங்களின் (கனரக, இலரக) வாகனத்தை இயக்கும்
 முன் வாகனத்தை சுற்றி சோதனை செய்யுங்கள்.


மனபிராந்தி  : காத்துவாக்கில & காதுல 
 
பட்டொளி வீசி பறக்குது பல வண்ணங்களில் கட்சிக்கொடிகள்

சாராய காசில்.. 


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


பிரேக் எடுத்ததில் இருந்து

எல்லாமே பிங்க் பிங்கா தெரியுதே.... கண்ணுல கோளாறோ??