நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, July 18, 2012

பில்லா 2 - தல வழி

காலங்காத்தாலைல இருந்தே நொய்யு நொய்யுன்னு.......அடேய்  நாதாரி இந்த கொசு தொல்லை தாங்கலடா....

என்னதானுங்டா உங்கபிரச்னை?

அண்ணே நீங்க ஒரு மேதைன்னே..

அடேய் ங்கொக்கமக்கா நிர்த்து .....மேட்டருக்கு  வா

அண்ணே சகுனி படத்துக்கு விமர்சனம் பண்ணீங்

கொய்யாலே நா எப்படா பண்னேன்?

இல்லீங்னே கருத்து சொன்னீங்

ஆமா சொன்னேன் - சகுனி - முடிச்சவுக்கி.... அதுக்கு இப்ப என்னாங்கற.?

எப்டீங்ணே?

டேய் அதுக்கெல்லாம் லிவர் வேல செய்யணும்டா கோமுட்டிதலையா.... அந்த படத்துல எத்தனை முடிச்சை சகுனி அவுக்காறு (படத்திலும் இடைவேளைக்கு முன்  ஒரு டயலாக் இருக்கே)  அதை தான்டா ஒத்தை வார்த்தையில் சொன்னேன்.

அண்ணே இந்த லிவருன்னா ?..

தெரியலயா? அதுக்குத்தான்டா ஊருக்கு ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்றது, அடேய் கோமுட்டி தலையா, மூளை மட்டும் வேலை செஞ்சா போதாது, லிவரு அந்த லிவருதான்டா முக்கியம், லிவரு போச்சுன்னா நீயும் போயிருவ ஸ்ட்ரெயிட்டா ஊ ஊஊதான்.

அண்ணே எல்லாம் சரிண்ணே இப்ப தல நடந்திருகற ச்சீ நடிச்சிருக்கற பில்லா - 2 அதுக்கும் உங்க விமர்சனம் ?

டேய் ஸ்டாப்பு நோ விமர்சனம் ஒன்லி சிங்கிள் வேர்டு

பில்லா II - தல வலி 

என்னனே இப்புடி சொல்லிபுட்டீங்க...

வேற எப்பட்றா சொல்லணும் பாஸ்பரஸ் வாயா..?

அடேய் அந்த படம் நீ பார்த்தயில்ல ஆரம்பச்சதுல  இருந்து முடியிற  வரைக்கும் தல போகற வழியெல்லாம் எம்புட்டு வேதனை, ரணம் இவ்வளவு சிக்கல் (படத்துல தலயோட டயலாக் 'என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்குனதுடா”) அதெல்லாம் வலிதானடா கோமுட்டி தலையா அதான் சொன்னேன் பில்லா II  தல வலின்னு .

அண்ணே இன்னும் வேற ஏதோ கருத்துன்னு சொன்னீங்களே?

அதுவாடா,  இங்க பதிவுலகத்துல சினிமா விமர்சனம் பண்றவங்க  கொள்ள பேரு இருக்காங்கடா மொதல்ல அவுங்க எல்லாம் சொல்லட்டும் அப்பறமா நாம சொல்லலாம்..


அண்ணண்ண்ணே ....


என்னடா சவுண்டு?


அண்ணே,, அடுத்து துப்பாக்கி வருது.....

ஓங்கி அப்புனன்னா உங்கன்னத்துல சவுண்டும் வரும், அடுத்து துப்பாக்கி வரும்.....விஸ்வருபம் வரும்... கோச்சடையான் வரும்...... அதுக்கு என்னடா இப்ப? ...               அடேய் கிளிசரின் தலையா எல்லாம் வரட்டும்டா  வச்சிக்கலாம்..

எப்புடின்னே இப்படி எல்லாம் திங் பண்றீங்க?

அதத்தாண்டா சொன்னேன் கோமுட்டி தலையா லிவருன்னு

அண்ணே எனக்கும் சொல்லி தாங்கண்ணே

அடேய் கோமுட்டி மண்டையா  இதெல்லாம் சொல்லி வரக்கூடாதுடா தானா வரணும்,,,.. அதுக்கு நீ ஒரு நாலு விசயத்தை தூக்கி கடாசனும்  முடியுமா?

என்ன அண்ணே அந்த நாலு விஷயம் ?

அப்பூடி  கேளு,

அரசியல், சினிமா, ஜாதி, மதம்  இந்த நாலையும் தூக்கி  அப்பாலிக்கா  வச்சுட்டு  சாதாரணமா எலும்பு,  சதை, ரத்தம்,  மனசாட்சி உள்ள மனுசனா தமிழனா  வா எப்பூடின்னு சொல்லி தாரேன்.

இப்ப அந்த கிளாஸ் எடு  லார்ஜை உத்து..    தொடரும் 


43 comments:

 1. //அரசியல், சினிமா, ஜாதி, மதம் இந்த நாலையும் தூக்கி அப்பாலிக்கா வச்சுட்டு சாதாரணமா எலும்பு, சதை, ரத்தம், மனசாட்சி உள்ள மனுசனா தமிழனா வா எப்பூடின்னு சொல்லி தாரேன். ////

  தமிழனா இருந்துட்டு இதெல்லாம் எப்புடி?
  போங்க சார்..... எதுக்கும் டெசோ மாநாட்டுப் பக்கம் ஒரு எட்டுப் போயிட்டு வாங்க....
  அப்பத்தெரியும்... தமிழன்னா ஆருன்னு!!!
  ஆங்....

  ReplyDelete
  Replies
  1. யோவ் நீஏன்யா போற எடமெல்லாம் டெசோ கிசோன்னு சவுண்டு வுட்டுகிட்டு திரியற, தமிழினதலைவருகிட்ட காசு வாங்கிட்டயா வெளம்பரம் பண்ண?

   Delete
  2. ஹலோ எஸ் ஜூஸ் மீ இன்னும் பேமென்ட் வரல - ஒரு வாரமா விளம்ர பணம் தான்

   Delete
 2. எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கறீங்களோ..ஹஹ

  ReplyDelete
  Replies
  1. தானா வருது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   Delete
 3. //அரசியல், சினிமா, ஜாதி, மதம் //

  மாம்ஸ் இதெல்லாம் தமிழன் ரத்தத்துல ஊருன விசயம், சோறு தண்ணி இல்லாம கூட இருந்திருவான் ஆனா இதுக இல்லாம இருக்கவே மாட்டான் :-) மொத்தத்துல என்னமோ சொல்ல வரீங்க போங்க

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் - என்ன சொல்ல வாரேன்னு பொறுத்திருந்து பார்க்கவும்

   Delete
 4. மனசாட்சி...கிச்சு..கிச்சு..

  ReplyDelete
  Replies
  1. கிச்சி கிச்சி மூட்டுதா

   Delete
 5. சூப்பர் கமெண்ட்!

  ReplyDelete
 6. தல வழி யா...இல்லை தல வலியா..?அதுதானா ரெண்டு நாளா ஆளை காணோம்..

  ReplyDelete
  Replies
  1. பார்ரா....மாப்ள குசும்புன்னு சொல்வாங்க இது தானா

   Delete
 7. தல வழி ...Nice Spelling mistake...ஹஹஹஹஹஹ...

  அரசியல், சினிமா, ஜாதி, மதம் இந்த நாலையும் தூக்கி அப்பாலிக்கா வச்சுட்டு சாதாரணமா எலும்பு, சதை, ரத்தம், மனசாட்சி உள்ள மனுசனா தமிழனா வா எப்பூடின்னு சொல்லி தாரேன்.//

  நச்..

  ReplyDelete
  Replies
  1. ஸ்பெல் மிஸ்டேக் புரிதலுக்கு நன்றி

   Delete
 8. தல எங்க இந்த பதிவுல ஜொள்ளுக்கு எதையுமே காணோம்.. am totally upset..

  ReplyDelete
  Replies
  1. ஆஹ்ஹா....உங்களின் குறை நிறைவேற்ற இன்று புது சட்டம் அமுலுக்கு வருகிறது - இனி முதல் எல்லா பதிவுகளிலும் விஸ்கி லொள்ளு & ஜொள்ளு இடம் பெரும்....ஷ் யபா

   Delete
 9. கலக்குறீங்க...
  பகிர்வுக்கு நன்றி...
  தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. ஹி..ஹி..கவுண்டரும் செந்திலும் உண்மையாகவே பேசின மாதிரி இருந்துச்சு பாஸ்..பேசாம கவுண்டர் ஸ்டைலிலே முழு விமர்சனமும் செய்யலாமே...

  ReplyDelete
 11. ஒரே வார்த்தையில விமர்சனம்.... நச்சுனு சொன்னீங்க....

  ReplyDelete
  Replies
  1. எதோ நம்மால முடிஞ்சது

   Delete
 12. உங்க ப்ளாக் சூபரா இருக்கு பாஸ் பல இடங்களில் என்னை மறந்து சிரித்தேன்.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே - மிக்க மகிழ்ச்சி

   Delete
 13. sir!

  unmaiyil
  naan
  cenima vimarsanam padippathu illai-
  ungal paarvai vithiyaasam athanaal padikkalaamenu padithen!

  pottu thaakkideenga!

  evan nadithaal namakkenna..!?

  ReplyDelete
  Replies
  1. நன்றி - சரியா சொன்னீங்க

   Delete
 14. அடப்பாவமே...இப்பிடி வேறயா...

  ReplyDelete
  Replies
  1. மாம்ஸ், மண்ணின் மகிமை

   Delete
 15. உள்குத்துக்கு மறுபெயர் மனசாட்சிதான்

  ReplyDelete
  Replies
  1. பார்ரா - இது வேறையா

   Delete
 16. விமர்சனம் தூள். என்வழி தல வழி; தமிழனுக்கு ழ வராது அதனால இப்போ என்வலி தலவலி.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா சரியான புரிதல் நன்றி

   Delete
 17. அண்ணா வரும்போது ஒரு பாட்டில் டைகர் பாம் கொண்டு வாங்க !

  ReplyDelete
  Replies
  1. ஒக்கே வாங்கியாறேன்

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...