நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Thursday, February 6, 2014

காமத்தோட தொல்லை


 வணக்கம் அன்று

என்ன மாப்ளே சௌக்கியமா?

நல்ல இருக்கேன் மாம்ஸ்

ரொம்ப நாளா ஆளே காணோம்? அம்பூட் பிஸி...

ம்ம்......

ம்ஹிம்.....மாப்ளே உம்மகிட்டு கேட்டனுமே..... காமத்தை பத்தி......


(மைண்ட் வாய்ஸ்...என்னாதிது மாம்ஸ் நம்மகிட்ட காமத்த பத்தி கேக்காரே) என்ன மாம்ஸ் கேட்டீங்க

மாப்ளே இந்த காமத்தை பத்தி சொல்லும்வோய்....

ஹி ஹி ஹி ஹி மாம்ஸ் அத எல்லாம் தன்னால வரணும் சொல்லி வருவதில்லை அது எப்படின்னா?.....


யோவ் மாப்ளே நிறுத்தும் நா என்ன கேட்டேன் நீர் என்னவோய் சொல்றீரு

மாம்ஸ் நீங்க என்ன கேட்டீங்க

காமத்தை பத்தி...

அதேன் நா சொல்றேன்

யோவ் நா கேட்டது உம்ம பிரண்டு காமத்தை  பத்தி

யு மீன் மிஸ்டர் காமத் (kamath) ......

ம்ம்...

ஙே
இன்று

என்ன மாம்ஸ் எப்படி இருக்கீக ?

நல்ல இருக்கேன் மாப்ளே

ரொம்ப நாளு ஆச்சி இந்த பக்கம் வரவே இல்ல 

கொஞ்சம் வேல 

ஏது பேஸ்புக்லேயா  

ஹி ஹி ஹி ஹி

மாம்ஸ் உங்க கிட்ட கொஞ்சம் விவரம்  வேணுமே  காமத்தை பத்தி......


(மைண்ட் வாய்ஸ்...என்னாதிது மாப்ளே நம்பளே கலாய்கிறாரோ....உசாரா டீல் பண்ணனும்) என்ன மாப்ளே கேட்டீங்க

மாம்ஸ் இந்த காமத்தை பத்தி சொல்லுங்களேன்....

ம்ஹிம்.... மாப்ளே, காமத்தை பத்தி சொல்ல என்ன இருக்கு ரோம்ப  நல்லவரு நேர்மையானவர் சுருக்கமா என்னைய மாதி.....

யோவ் மாம்ஸ் ஒரு நிமிஷம் உம்ம பிரண்டை பத்தி கேட்கல 

மாப்ளே பின்ன என்னா நீங்க கேட்டீங்க...

காமத்தை பத்தி...

அதேன் நா சொல்றேன்

யோவ் நா கேட்டது காமத்தை  

யு மீன் காமம்......

ம்..

ஙே


நாளை
யாரு எல்லாம் - எப்படி எல்லாம் கேக்க போறாங்களோ......அலர்ட்டா இருக்கோணும் 
 திருவாளர் காமத் (Mr. Kamadh)  அப்படிங்குற பேருல எனக்கு ஒரு பிரண்டு - இப்படி பொரட்டி பொரட்டி வாங்குரேனே - ஏங் எனக்கு மட்டும் இப்படி - இந்த காமத்தோட தொல்லையப்பா.
(காமம் ச்சேசே காமத் பிளிஸ்  மன்னிச்சு)

8 comments:

 1. சரியாத்தான் கேட்டிருக்காரு... மன்மத ராசா!

  ReplyDelete
 2. வந்துட்டீங்களா... தொடர்க...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. அகராதி புடிச்ச மண்ணு நாமதான் சூதானமா பொழப்ப நடத்தோனும் அப்பு.

  ReplyDelete
 4. முத்தரசண்ணே இன்னைக்குத்தான் நினைச்சேன் வந்துட்டீங்க...
  வாங்கோ வாங்கோ

  ReplyDelete
 5. நல்லா கேட்குறாங்கப்பா டவுட்டு?!!

  ReplyDelete
 6. சிக்கிட்டீங்களா!? கேட்டதை ஒழுங்கா காதுல வாங்கி பதில் சொல்லிட்டு அப்புறம் பதிவு போடுங்க

  ReplyDelete
 7. இனி எவனாவது காமத்தை பற்றி கேட்டா சப்புன்னு அறைஞ்சிருங்க மக்கா...

  ஆமா காமம்ன்னா என்ன ?

  ReplyDelete
 8. கா...மத்தை யா?இப்புடி ஒரு சொல்லு தமிழில இருக்கு?

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...