நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, September 26, 2012

ஏனப்பு, அது ஏன்னு உனக்கு தெரியுமா

வணக்கம்
வாழ்க்கையில் சில சுவராஜ்யமான விடயங்கள்

எதிர்பாரா சமயத்தில் உங்களை பற்றி ஒருவர் இன்னொருவரிடம் நல்லவிதமாக சொன்னதாக கேள்விப்படும் போது

தூக்கத்தில்  இருந்து   விழித்து ஒ.. இன்னும் விடிய நேரமிருக்கா என்று தூங்குவது

முதல் நேசம் கொள்வது 

முதல் முத்தம் கொடுப்பது /பெறுவது 

புதிய நண்பர்கள் பெறுவதும்  மற்றும் பழைய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது.

பாத்ரூமில் பாடுவது

அழகான  கனவுகள் அசைபோடுவது

உச்சி வெயிலில் ஐஸ் கிரீம்  சாப்பிடுவது

குளிர்ந்த அந்த காலை பொழுதில் உங்கள் நேசத்துடன் சேர்ந்து காப்பி பருகுவது

உங்களுக்கு பிடித்தவருடன் கைகோர்த்து நடப்பது

சூரியன் மறைவதை பார்ப்பது 

மனதுக்கு பிடித்தவரின் தோளிலோ /மடியிலோ தலை சாய்ந்து படுப்பது 

நம்மை பிரிந்து ஒரு உள்ளம் ஏங்குது  என தெரியும் போது 

பிறந்த குழந்தையை தடவுவது, முத்தம் கொடுப்பது 

விழும் கண்ணீர் துளி   ஆறுதலுக்கு ஆதரவுக்கோ கட்டி தழுவும் போது. 


இதுல ஒரு நுணுக்கம் எல்லாமே 'து' வில் முடியுது. 
(என்னா ஒரு கண்டுபுடிப்புடா)

(இன்னும் எதாவது இருந்தா சொல்லுங்க இத்துடன் சேர்த்துடுவோம்)
ஸ்டார் பிஷ்க்கு மூளை கிடையாதாம்.


என்னமோ உனக்கு மூளை இருக்குற மாதிரி பில்டப்பை பாரு
  மைன்ட் வாய்ஸ்  கேக்குதுப்பா கேக்குது
 மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

பூங்காக்களில் பார்க்கலாம் இப்படி ராணுவவீரன் / அரசன்  சுமந்தபடி குதிரை சிலைகளை, அதில் உள்ள நுணுக்கமான ஓன்று:

குதிரை இரண்டு கால்களை தூக்கியவாறு சிலை இருந்தால் சிப்பாய் / அரசன் போரில் இறந்ததாக அர்த்தம்.

குதிரை ஒரு  காலை தூக்கியவாறு சிலை இருந்தால்
சிப்பாய் / அரசன் போரில் காயம் பட்டு சிரமப்பட்டு இறந்தான்

குதிரை நான்கு கால்களின் பாதங்களும் தரையில் ஊன்றி  சிலை இருந்தால் சிப்பாய் / அரசன் இயற்கை மரணம் அடைந்தார்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
 தலைக்கி  குளிச்சி, தலை சீவி  ஜாக்கெட் போட்டு, தாவணியோ சேலையோ கலாச்சாரம்மா உடை அணிந்து, கண்ணுக்கு மை இட்டு, பூ வைச்சி,  பவ்டர் பூசி,
பொட்டும்  வைச்சி, உதட்டுக்கு சாயம் பூசி ,  அலங்காரம் பண்ணி நகை போட்டு நெத்திசூடி அழகு படுத்தி....தேவதை  போல சிங்காரிச்சி.........

கடைசியிலே கொஞ்சூண்டு முன் தலைமுடியை எடுத்து முகத்துல வுட்டுகுறாங்களே...

ஏம்பு அது ஏன்னு உனக்கு  தெரியும்..

அத  தான் சித்தப்பு  பல வருசமா மோட்டு வலய  பாத்து 

ஒசிச்சுட்டு இருக்கேன் ஒரு மண்ணும் புரியல..  

ஏங்.. மாப்ள உங்களுக்காவது தெரியுமா??53 comments:

 1. //ஏங்.. மாப்ள உங்களுக்காவது தெரியுமா///

  இப்படி எல்லாம் ஏடாப்புடாவான கேள்வியெல்லாம் கேட்டு பதிவு எழுதாதீங்க பதிலை யோசிச்சே தலை சுளுக்கிடுச்சு

  ReplyDelete
  Replies
  1. நம்மால் ஆகாத வேலைக்கு ஏன் முயற்சிக்கனும்?

   Delete
  2. இதுக்குதான் படுத்துகிட்டு யோசிக்கணும்

   இல்லைனா சகோ சொன்னமாதிரி ஹி ஹி ஹி

   Delete
 2. அழகிய ரசனையான விசயங்களை அடுக்கியது
  குதிரைச் சிலை விஷயத்தை பகிர்ந்தது
  யாருக்கும் புரியாத விசயம் குறித்து
  கேள்வி எழுப்பிப் போனது
  இவை அனைத்தும் மனம் கவர்ந்தது

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா தாங்களும் 'து' வில் முடித்து பலே பலே

   Delete
 3. யம்மா யம்மா யப்பா யப்பா...

  ReplyDelete
  Replies
  1. மாம்ஸ் என்னாச்சி,,..? சுடுதண்ணியை காலில் கொட்டி கொண்டீர்களோ

   Delete
 4. அட்டகாசம்.. ஹஹஹஹஹஹஹஹஹஹ மனசாட்சிக்கு மனசே இல்லை. எல்லாமே தூ’ ல தான் முடியுது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ மனசாட்சிக்கு மனசே இல்ல தான்

   மனச்சாட்சிக்குதானே மனசு இருக்கோணும் -

   Delete
 5. குதிரை வீரம் பற்றிச்சொன்னது. சீரியஸ் ப்ளீஸ். உண்மைதான், நானும் கேள்விப்பட்டுள்ளேன்

  ReplyDelete
 6. சுவராசியமான நாட்கள் -யதார்த்தம்
  சிலை உருவ கருப்பொருள் - புதிய அறிவு ,அதற்கு நன்றிகள்
  ஜொள்ளு & லொல்ளு யப்பா தாங்கல ஹ ஹ ஹ

  ReplyDelete
 7. அருமையாக இருக்குது...

  எதோ கண்ணில் பட்டது...

  ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி சகோதரி 'தூ' என்று சொன்னது தான் கஷ்டமா இருக்குது..

  ReplyDelete
 8. டிஸ்கி : ஸ்பாம் மெயில் பார்க்கவும்.....!

  ReplyDelete
  Replies

  1. பார்ரா.....ஸ்பேம்... ஸ்பேம் ஐ பிரபல படுத்திய எனக்கேவா

   Delete
 9. தலைக்கி குளிச்சி, தலை சீவி ஜாக்கெட் போட்டு, தாவணியோ சேலையோ கலாச்சாரம்மா உடை அணிந்து, கண்ணுக்கு மை இட்டு, பூ வைச்சி, பவ்டர் பூசி,
  பொட்டும் வைச்சி, உதட்டுக்கு சாயம் பூசி , அலங்காரம் பண்ணி நகை போட்டு நெத்திசூடி அழகு படுத்தி....தேவதை போல சிங்காரிச்சி.........

  கடைசியிலே கொஞ்சூண்டு முன் தலைமுடியை எடுத்து முகத்துல வுட்டுகுறாங்களே...

  ஏம்பு அது ஏன்னு உனக்கு தெரியும்..

  அத தான் சித்தப்பு பல வருசமா மோட்டு வலய பாத்து

  ஒசிச்சுட்டு இருக்கேன் ஒரு மண்ணும் புரியல..

  ஏங்.. மாப்ள உங்களுக்காவது தெரியுமா??
  ///////////////////////////////////////
  நல்ல சிந்தனை தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிச்சு விற்கலாம்..ச்சே வைக்கலாம்...!

  ReplyDelete
  Replies
  1. தஞ்சாவூர் கல்வெட்டுலதான் பொறிக்கனுமா ஏன் உத்திரமேரூர் கல்வெட்டுல பொறிச்சா...போலிஸ் பிடிப்பாங்களா?! :D

   Delete
  2. விக்கிறதுலையே இருங்க மாப்ளே

   Delete
  3. வரலாறு, இது வேறையா

   Delete
 10. குதிரை சிலை... அசத்தல் தல..! keep rocking!

  ReplyDelete
 11. சுவார்சியமான விடயங்கள் சூப்பர்.

  ReplyDelete
 12. சிலையின் நுணுக்கங்கள் உண்மையே...சுவாரசியமான விடயங்கள் எல்லாம் ஒரே இ'து'வா இருக்கு முத்தத்தை தவிர !

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா

   ஹா ஹா ஹா எல்லாமே து இருக்கு முத்தத்தை தவிர - திருத்தி விட்டேன்,

   Delete
 13. குதிரை மேட்டர் இப்பதான் கேள்விப்படுறேன்...கலக்கல் பாஸ்...

  ReplyDelete
 14. நம் குழந்தை முதன் முதலில் அப்பா என்று கூப்பிடும் போது.
  பஸ்ஸில் பக்கத்து சீட்டில் சூப்பர் பிகர் உட்காரும் போது...
  எதிர் வீட்டு ஜன்னலில் அந்த நிலாவை முதன் முதலாக பார்த்த போது...
  திருட்டு பீடி பிடிக்கும் போது அப்பாவிடம் மாட்டி செமையாக அடி வாங்கிய போது...

  அட..போங்க பாஸ்...இது போல ஏகப்பட்டது இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. பார்ரா...அட அற்புதமான விடயங்கள் தான்

   Delete
 15. லொள்ளு & ஜொள்ளு..

  பாஸ் இது கூட தெரியிலையா...

  சத்தியமா இது சவரி முடி இல்லைங்கோ....ஒரிஜினல் முடிதாங்கோ ...அதைதான் சிம்பாலிக்கா சொல்றாங்க... எங்கள இப்படியெல்லாம் யோசிக்க வச்ச உங்களை.................................. ..அந்த பொண்ணு லவ் பண்ண...!!(இது சாபம்)

  ReplyDelete
  Replies
  1. நீங்க சாபம் கொடுத்துட்டு போயிட்டீங்க....

   நா படும் அவஸ்தை பாஸ் வரிசையா இம்புட்டு பேரா?? பாஸ் வனோம்..சாபத்தை திருப்பி வாங்குங்கள்

   Delete
 16. கதிரை சாரி குதிரை மேட்டர் கலக்கல்

  ReplyDelete
 17. அருமை பகிர்வுக்கு நன்றி மாம்ஸ் :-)

  ReplyDelete
 18. //நம்மை பிரிந்து ஒரு உள்ளம் ஏங்குது என தெரியும் போது //

  உண்மைதான்.

  எனக்கு ரெண்டாவது புகைப்படம் ரொம்ப பிடிச்சது.
  ஹிஹி..

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ

   ரெண்டாவது படம் சர்தான் - புரியுது

   Delete
 19. சுவாரசியமான தருணங்கள் அசை போட வைத்தது. குதிரை குறித்த செய்தி புதிது.தலை முடியை எதுக்கு முகத்துல கொஞ்சமா போடறாங்க ஆராய்ச்சிக்குரிய கேள்வி யாராவது பதில் சொல்லுங்கப்பா? தெரிஞ்சிக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. அது தெரியாதா தோழி...?

   பெண்கள் கொஞ்சுண்டு முடியை முகத்துல தொங்கப் போடுறது...
   எதிரே வரும் அழகான ஆணை நேரெதிராகப் பார்க்கத் தயங்கி... முடியைக் கைகளால் ஒதுக்குவதைப் போல பார்த்துக் கொள்(ல்)வதற்குத் தான்.

   Delete
  2. அப்படியா சங்கதி தகவலுக்கு நன்றி அருணா

   Delete
  3. நன்றி சகோ - புரிதலுக்கு


   முதல் தகவல் நன்றி அருணா

   Delete
 20. இந்த ”து“ க்கள் நிறைய இருக்கிறதுங்க மனசாட்சி.

  குதிரை.. விசயம் உண்மைதானா...? எனக்கு இப்பொழுது தான் தெரியும் என்பதால் ஆச்சரியத்துடன் நன்றி மனசாட்சி.

  ReplyDelete
 21. மனசாட்சி பிளாக்குக்கு வந்தாலே தலை சுத்துது (எனக்கு)
  ஜொள் ஊத்துது (இளைஞர்களுக்கு)
  கண்ணை கட்டுது (எதிரிகளுக்கு)
  குஷியா இருக்குது (நன்பர்களுக்கு)
  இதையும் சேர்த்துக்கோங்க.

  ReplyDelete
  Replies
  1. சகோ இது வேறையா

   நல்லாவே கொளுத்தி விடுறீங்களே

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...