நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, March 25, 2013

நடுவுல கொஞ்ச நாளா காணோம்

வணக்கம்


பையன் : உனக்கு ABCD ல A to Z, நல்லா தெரியுமா?

பொண்ணு : ஆமா

பையன் : “ABCDEFGHIJKLMNOPQRSTVWXYZ” இதுல எந்த எழுத்து இல்ல?

பொண்ணு : ம் ம் .........  ".U "

பையன் : கரைக்ட்டு.....எங்கே போச்சி அது?


பொண்ணு : எனக்கு தெரியாது..... ஆமா எங்கே போச்சி..

பையன் : "U" எங்  இதயத்துல இருக்கு


ஹே..... நாங்கெல்லாம் அப்பவே அப்பூடி......இப்படியும் லவ்வ  சொன்னோமுல்ல.இவள் அண்டை வீட்டு பெண்

இவள் தனியாகத்தான் இருக்கிறாள்

இவள் வீடு இருப்பது எனது வீட்டுக்கு நேர் எதிரே

இவள் வீட்டை  எனது அறையில் இருந்து கொண்டு தெளிவாக பார்க்கலாம்

இவளை  நான் தினமுன் எனது அறையில் இருந்து பார்ப்பேன் வேலைக்கு போகும் போதும் வேலை முடித்து வரும் போதும்..

ஒருநாள்..........

எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவள் என் வீடு நோக்கி வருவதை கண்டு.....

என் வீட்டு கதவை தட்டியதும்....

துள்ளி குதித்து ஓடி கதவை திறேந்தேன்

என்னை நேருக்கு நேராக பார்த்து :- இப்ப தான் வந்தேன் ரொம்ப ஜாலி மூடில் இருக்கேன் இன்று இரவு முழுவதும் சந்தோசமாக இருக்கணும்
இன்று இரவு நீங்க ப்ரீயா?

உடனடியாக சொன்னேன் : ஆமாம் நான் ப்ரீதேன் எந்த வித வேலையும் இல்ல 

அவ சொன்னா : நல்லது மிக்க மகிழ்ச்சி எனது நாயை பார்த்து கொள்ளுங்கள் 


ஹா ஹா ஹா முதுமை....எல்லோருக்கும் வரும். 

தலைப்பு : நடுவுல கொஞ்ச நாளா காணோம்.... அட எங் பதிவ சொன்னேனுங்கோ...

=========================================

இன்று நான் அப்பாவாகிய தினம்

ஆமுங்க.. என்ற மகனுக்கு பொறந்தநாளுங்கோ......

====================================================


வாழ்க்கையில் இந்த நாலு விடயத்தில் முழுமையாக திருப்தி எந்த மனிதனாலும் அடைய முடியாது
1. கைபேசி (மொபைல்)
2. வாகனம் (ஆட்டோமொபைல்)
3. தொலைக்காட்சி பெட்டி (டி வி)
4. மனைவி /கணவன்
ஏன்னா,.... பக்கத்துலையே வேறு நல்ல மாதிரிகள் இருப்பதால்/தெரிவதால்.


25 comments:

 1. //இன்று நான் அப்பாவாகிய தினம்

  ஆமுங்க.. என்ற மகனுக்கு பொறந்தநாளுங்கோ...... //

  உண்மையிலேயா பாஸ்... பையனுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க...

  ReplyDelete
 2. நல்ல காமெடி நல்ல கருத்து மாம்ஸ் அப்படியே தங்கள் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நல்ல காமெடி நல்ல கருத்து மாம்ஸ் அப்படியே தங்கள் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. //நாங்கெல்லாம் அப்பவே அப்பூடி......இப்படியும் லவ்வ சொன்னோமுல்ல.//

  நீங்க அப்பவே சொன்னத உங்க பையன் இப்பவே சொல்ல போறனுங்க.. புலிக்கு பிறந்தது பூனையா இருக்குமா என்ன?


  இந்த இனியநாள் மீண்டும் மீண்டும் வர எனது இனிய நல்வாழ்த்துக்கள் உங்கள் குழந்தைக்கு, உங்களுக்கு அல்ல. நான் உங்களுக்குன்னு சொல்ல போய் அதனால வருஷம் வருஷம் குழந்தையை பெத்து தள்ளிட்டீங்கன்னா

  ReplyDelete
 5. இனிய பிறந்தநாள் உங்கள் மகனுக்கு...

  ReplyDelete
 6. நீண்ட கழித்து... வருக வருக....

  நல்ல நகைச்சுவை...

  தங்களின் செல்லத்திற்கு அன்பான முத்தங்களோடு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் ண்ணே உங்களுக்கும் உங்க சுட்டிக் குழந்தைக்கும்

  ReplyDelete
 8. பையன் பொறந்த நாளுக்கு ரீ எண்ட்ரியா?! அப்பாக்கும் பிள்ளைக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete

 10. ஹா ஹா ஹா முதுமை....எல்லோருக்கும் வரும். - முத்தரசு

  ஓ.கே... ஓ.கே...

  உங்க புள்ளைக்கு என்ன ஒரு முப்பது வயசு இருக்குமா...?

  ReplyDelete
 11. ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

  ReplyDelete
 12. பையனுக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்§

  ReplyDelete
 13. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. மகனாருக்கு..வாழிய பல்லாண்டு..வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 15. உங்கள் பையனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 16. ரசித்துப் படித்தேன் குறிப்பாக கடைசிப் பத்தி
  தங்கள் குழந்தைக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. அவளுடைய நாயைப் பார்த்துக்கொள்வது மிக எளிய வேலை. குழந்தையைப் பார்த்துக்கொள்வது தான் கடினம். போகப் போகப் புரியும். இந்த அனுபவத்தைத் தரப்போகும் உங்கள் மகனுக்கு வழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. யூ வை தேடியாச்சா?

  ReplyDelete
 19. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்/

  ReplyDelete
 20. மனசாட்சிக்குள் ஒளிந்திருக்கும் அந்த சிறந்த எழுத்தாளனை எப்போது அறிமுகபடுத்த போகிறீர்கள் கடைசி பத்தியில் வாழ்வின் எதார்த்தம் சுடவில்லை

  ReplyDelete
 21. வாசித்தோர்கள்
  வாழ்த்திய நெஞ்சங்கள்
  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...