நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, February 6, 2013

ஒக்காந்து ஓசிப்பம்ல

வணக்கம்

இது ஒரு காதல் கதை அல்ல காவியம்.... ஆம், ஓவியம்  

இந்த பதிவில் உள்ள காவியம்  எவர் மனதையும் புண்படுத்த அல்ல...(ஒ... டைட்டில் கார்டு) இந்த பதிவுக்கும், இந்த லவ் பண்ணலாமா  பதிவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல. (எல்லாம் ஒரு மார்க்கமாத்தேன் திரியுராங்களோ) மைண்ட் வாய்ஸ் கேட்குது...

சரியி கதைக்கு ச்சே காவியத்துக்கு போவோமா ....வாங்க  


நா 12ம் வகுப்பு படிச்சேன்

அவளும் 12ம் வகுப்பு படிச்சா

நா பிஎஸ்சி போனேன் 

அவ பிசிஎ போனா

நா எம் எஸ் சி பண்ணும்போது

அவ கல்யாணம் பண்ணா

நா ஜே ஆர் ப் தயாராகும் போது

அவ ஒரு குழந்தைக்கு தாயான

நா பி எச் டி சீட் கிடைக்கும் போது 

அவ இரு கொழந்தைக்கு தாய் ஆனா

நா பி எச் டி பண்ணும் போது

அவ கொழந்த 1ம் வகுப்பு போச்சி

நா டாக்டரேட்  ஆனேன்

அவ கொழந்த 10ம் வகுப்பு பாஸ்சானா

நா ஒரு வேலையில்  சேர்ந்தேன்

அவ பொண்ணு காலேஜ்ல சேர்ந்தா

முக்கியமான விசேசம் என்னான்னா!!

இன்னைக்கு எனக்கு என்கேஜ்மென்ட் 

அவ பொண்ணு என்னோட பியான்சி 

(ஏலேய்...டாக்டரேட் படிப்பே.......அவ்வ்வ்வ்வ்வ்)

(மன்னிக்கணும் ஒரு டாக்டரேட் நிலையில், இடையிடையே ஆங்கிலம் கலந்து)   


என்ன.. காதல் காவியம் இனிமேதேன் ஆரம்பம். கல்யாணம் பண்ணியும் காதல் பண்ணலாம் என்ன புரியுதா...வர்ட்ட்டா 


26 comments:

 1. நகைச்சுவைக்கு எழுதினாலும் பல இடங்களில் இது உண்மை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 2. நல்ல காவியம் தான் பாஸ்

  ReplyDelete
  Replies
  1. இனிதான் காவியம் இது ஒவியம் ஹா ஹா

   நன்றி

   Delete
 3. அப்போ உங்க வயசு 40க்கு மேலா?! உண்மை வயசினை சபையறிய சொல்லவும் மன தைரியம் வேணுங்க சகோ! அந்த தைரியத்துக்கு ஒரு சபாஷ்...,

  ReplyDelete
 4. நல்ல கதை தான் போங்க.

  ReplyDelete
  Replies
  1. என்னாது கதயா . காவியமாக்கும்

   Delete
 5. பலர் வாழ்வில் இது உண்மையும் கூட...

  ReplyDelete
 6. அப்படியே அவுங்க தங்சி யாராவது இருந்தா சொல்லுங்க. நானும் டாக்டரேட் படிக்கலாம்னு இருக்கேன் :)

  வருண் பிரகாஷ்

  ReplyDelete
 7. அண்ணே உண்மையச் சொல்லப் போனா இப்படி ஒரு கருப்பொருளில் இரண்டு மூன்று வரிகளின் ஒரு பதிவு (கவிதை) எழுதிவிட்டு அதை தொடர முடியாமல் அப்படியே விட்டுவிட்டேன்...

  நீங்கள் அந்தக் குறையைப் போக்கிவிட்டீர்கள்,,,சூப்பர்

  ReplyDelete
 8. அதுக்குத்தான் தொல்காப்பியத்திலேயே சொன்னார்....
  பதினாறு பையனும் பனிரெண்டு பெண்ணும் கலியாணம் பண்ணிக்கனும்ன்னு....

  இருந்தாலும் மனசாட்சி பாவம்.....அவள்!!

  ReplyDelete
  Replies
  1. அப்பேவ ெசால்லிட்டாங்களா
   சர்தான்

   Delete
 9. காதல் காவியம் ஹா.ஹா..

  ReplyDelete
 10. Replies
  1. ஒய் . மானிட்டர துைடக்கவும்

   Delete
 11. உக்காந்து யோசிச்சாலும் உண்மையைத் தான் சொல்லியிருக்கீங்க. இப்பெல்லாம் படிச்சி நல்ல வேலைக்குப் போய் வீடெல்லாம் கட்டி முடிச்சிட்டு அப்புறமா பொண்ண பாக்க ஆரம்பிக்கறாங்க...தாங்கள் வாழ திருமணம் செய்யறாங்களா இல்லை ... அல்லது அடுத்தவங்களுக்கு தங்கள் வாழ்க்கையை காண்பிக்க செய்கிறார்களான்னு புரியல....

  ReplyDelete
 12. தல தலைப்பை கவனீங்க..யோசிப்போமா..ஓசிப்போமா..

  ReplyDelete
  Replies
  1. இப்ப சரியா

   நன்றி நண்பா

   Delete
 13. மாம்ஸ் இதுயென்ன புதுசா இருக்கு ..?

  நான் கவனிக்கவே இல்ல சாரி மாம்ஸ்

  - இரவுவானம்

  ReplyDelete
  Replies
  1. இந்த பதிேவ உங்க பதிவு வாசித்ததின் விைளவு தாேன

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...