நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, January 1, 2013

இதயபலம் உள்ளவர்களா - வாங்கோ

வணக்கம்

 

அவன் : திருமணம் செய்ய சிறந்த மாதம் எது ?

இவன்   : அக்டம்ப்ரோரி ..

அவன் : முட்டாள்தனமாக பேசாதே, அப்படி ஒரு  மாதமே இல்லை

இவன் : அதைதேன் நானும் சொல்றேன் 

===============================================================
  

அப்பாவி பக்கி பயபுள்ள
   
===============================================================
ஒரு இராணுவவீரர் குழந்தையும் ஒரு கடற்படைவீரர்  குழந்தையும் தனது தந்தையை பற்றி பெருமையாக பேசினார்கள்.

"என் தந்தை ஒரு பொறியாளர். அவரால் எதையும் செய்யமுடியும், உனக்கு  ஆல்ப்ஸ் (பெரிய மலை)  தெரியுமா? "

"ஆமாம்," கடற்படை குழந்தை கூறியது.

"என் அப்பாவால்தான் அது கட்டப்பட்டது."

பின்னர் கடற்படை குழந்தை கேட்டது:

மிடியல
"உனக்கு  டெட் சீ  (Dead Sea) தெரியுமா?"

"ஆம்."

"அது என் அப்பாவினால் தான் கொல்லப்பட்டது !"

                                                                     

மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

மொக்க காமடிக்கு கூட ஓவரா சிரிக்கானே...

அட, அது ஒண்ணுமில்லப்பு

பயபுள்ள ஆழ்மனதில் பெரும் சோகத்துடன் இருக்கான்.....

=============================================================

எப்ப ஒருத்தனை / ஒருத்தியை முழுமையாக எந்த வித சந்தேகமும் இல்லாமல் நம்பிவிட்டோமோ?!

அதன் முடிவில் கிடைக்கும் ஒரே பயன்:

வாழ்க்கையில் ஒரு நல்ல மனிதன்.

(அல்லது) 

வாழ்க்கையில் ஒரு நல்ல பாடம்.
==============================================================

விழிப்புணர்வுக்காக,  இன்றைய காலகட்டத்தில்  நாலு சக்கர வாகனங்கள் நமது தெருக்களில் பெருகியுள்ளது., உஷார்.....மக்களே... குழந்தைகள் கவனம்:  கடந்த ஜூன் மாதத்தில் புகைப்படம்  மூலம் விழிப்புணர்வு பதிவு செய்திருந்தேன்.

(இந்த காட்சி வீட்டில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவானவை)

(இதயபலவீனம் கொண்டவர்கள் இக்காட்சியை காணவேண்டாம்  மீறினால்.....க்கும் சொன்ன   கேட்கவா போறீங்க...........ம் உங்க இஷ்டம்) 

இதயம் பலமா  உள்ளவர்கள் மட்டும் இந்த பட காட்சியை காணவும் 




விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


ஜிந்திக்குறேன்....

(லொள்ளு & ஜொள்ளுக்கு எந்த மாதிரி!  படம்,
 எப்பூடி கமண்டலாமுன்னு)



நன்றி : படங்கள் கூகிள் 

21 comments:

  1. நல்லாவே ஜிந்திக்குறிங்க. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. படம் சொல்லும் கதை ரொம்ப காமெடி..
    கானொளி நல்ல விழிப்புணர்வு..

    உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இதோ பிடியுங்கோ இரட்டை வாழ்த்துக்கள் நண்பா..ஒன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் இன்னொன்று உங்களுக்கே தெரியும். அதிர்ச்சியா இருந்தது படக் காட்சி என்னவாயிற்று அந்தக் குழந்தைக்கு ,பதறுகிறது மனசு...

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வந்தமா படிச்சமா, ரிலாக்ஸாகி சிரிச்சமானு இருந்தது பங்காளி பதிவு.

    இனிய கிரிகோரியன் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. மாப்பிள எல்லாமே அசத்தல்,ஆனால் என்னால் எபிக்கில் வீடியோ பார்க்கமுடியல அதன் லிங் இருந்தால் அனுப்பிவிடவும்.!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மாப்ள.!

    ReplyDelete

  7. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    01.01.2013

    ReplyDelete

  8. வாழ்க்கையில் ஒரு நல்ல மனிதன்.

    (அல்லது)

    வாழ்க்கையில் ஒரு நல்ல பாடம்.
    >>
    உண்மைதான். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு ரகசியம் உள்ளது. அந்த ரகசியம் உடைப்படும்போதுதான் அம்மனிதர் நம் வாழ்வில் வந்தது வரமா? சாபமா?ன்னு தெரியும்.

    ReplyDelete
  9. மனசாட்சி... அந்தப் பட காட்சியை...
    போங்கப்பா... மனம் வலிக்கிறது.
    ஏன் தான் பார்த்தேனோ...

    ReplyDelete
  10. 2013 - புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சூப்பர் காமெடி இருந்தும் கார் படம் மனதை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டது

    ReplyDelete
  12. தல ,வீடியோ மனதை கணக்க வைத்துவிட்டது .
    இது போல ஒரு சம்பவம் என் வீட்டின் அருகில் கடந்த வாரம் நடந்தது .ஆனால் அந்த 7 வயது குழந்தை டிரைவரின் அஜாக்கிரதையால் இறந்து விட்டது .

    ReplyDelete
  13. நண்பரே உங்களை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம் ...நேரம் இருந்தால் வந்து பாருங்கள் ...நன்றி

    http://blogintamil.blogspot.com/2013/01/2519.html

    ReplyDelete

  14. வணக்கம்!

    பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
    எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

    ReplyDelete
  15. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. எல்லாருக்கும் இ னிய ெபாங்கல் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  17. படங்களின் அசைவு எப்படி?கொஞ்சம் சொல்லலாமா?

    ReplyDelete
  18. குழந்தைகளை கண்ணு மண்ணு தெரியாம விளையாட விட்டா இப்படித்தான் ஆகும்

    ReplyDelete
  19. I thіnk the аdmіn of this
    ωeb site is actually ωοrking haгd іn favor of his ѕite, because heге eveгy
    stuff is quality bаsеԁ stuff.


    Checκ out my web page; ursachen für diffuser haarausfall
    Also see my website > haarausfall wegen eisenmangel

    ReplyDelete
  20. பிள்ளைக்கு என்னாச்சு.. :(((

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...