நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, November 29, 2011

கனிமொழிக்கு பதவி தரப்போகும் கட்சி.

கனிமொழியின் விடுதலையே தமிழ் இனத்தின் விடுதலையாக கருதி மகிழ்ந்துக் கொண்டிருக்கும் மு.கருணாநிதியை,

 

கனிமொழி ஜாமீனில் விடுதலை ஆனதுமே, சென்னையில் நடந்த நிகழ்ச்சிகளை கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. கோபாலபுரத்திலும், அறிவாலயத்திலும் குலோப் ஜாமுனும் ஜாங்கிரியும் கொடுத்து கட்சியினர் கொண்டாடுகிறார்களே. இதை யாராவது தடுத்திருக்க வேண்டாமா?

கனிமொழி தமிழ்நாட்டுக்கு எதிராக நடந்த கொடுமையை கண்டித்து சிறைக்குப் போனாரா? இல்லை மத்திய அரசின் அடக்கு முறையை எதிர்த்து சிறைக்கு போனாரா?

உலகத்தையே உலுக்கி ய ஊழல் குற்றச்சாட்டில், ஏ-2 அதாவது இரண்டாவது குற்றவாளி என்று குற்றம் சுமத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்ற செய்தி கேட்டதும் கோபாலபுரத்திலும், அறிவாலயத்திலும் இனிப்பு கொடுத்து கொண்டாடுவது முறையா? என்பதை தி.மு.க. சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கனிமொழி இன்று சிறையிலிருந்து வெளியே வந்தாலும் கோர்ட்டு விசாரணைகளில் பங்கேற்றுவிட்டு வரும் டிசம்பர் 2ம் தேதியான வெள்ளிக்கிழமை மாலை அல்லது டிச.3ம் தேதியான சனிக்கிழமை காலையில் தான் சென்னை திரும்புகிறார்.


டெல்லியிலிருந்து அவரை அழைத்து வர துரைமுருகன் தலைமையிலான குழுவை நேற்று இரவே அனுப்பி வைத்துவிட்டார் தி.மு.க. தலைவர். வெள்ளிக்கிழமை மாலை வரும் கனிமொழிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ரகசிய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அவர் வந்ததும் ஓரிரு மாதங்களில் கட்சியின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் அல்லது துணைப் பொதுச் செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதாவது ஒரு பதவியைத் தரப்போகிறார்கள். இதில் மாற்றமில்லை.

ஆனால் கலைஞர் என்ன சொல்கிறார், “ சிறையிலிருந்து வெளியே வரும் கனிமொழிக்கு பதவி கிடைக்குமா ?”என்று நிருபர்கள் கேள்வி கேட்டால், “ நான் சர்வாதிகாரி இல்லை. எல்லோரும் சேர்ந்ததுதான் கட்சி. எனவே, கனிமொழிக்கு பதவி அளிப்பது தொடர்பாக கட்சியே முடிவு செய்யும்”. அந்தக் கட்சி எது என்பது தான் தி.மு.க. தொண்டர்களின் கேள்வி.

அடடா… அடடா… கட்சியை கேட்டா தயாநிதி மாறனை எம்.பி.யாக்கி, மத்திய அமைச்சராக்கினீர்கள்?

கட்சியை கேட்டா, கனிமொழியை எம்.பி.யாக்கினிரீகள்?

kani-888bகட்சியை கேட்டா, அழகிரியை எம்.பி. தேர்தலில் நிற்க வைத்து மத்திய அமைச்சராக்கினீர்கள்?

அட… கட்சியை கேட்டா மந்திரி சபையிலிருந்து தூக்கிய டாக்டர் பூங்கோதை ஆலடி அருணாவுக்கு மீண்டும் மந்திரி பதவி கொடுத்தீர்கள்?

அட… கட்சியை கேட்டா துரைமுருகனிடம் இருந்து பொதுப்பணித்துறையை பறித்துக் கொண்டு நீங்களே வைத்துக் கொண்டீர்கள்.

அட… கட்சியை கேட்டா பா.ம.க. கட்சியை மீண்டும் கூட்டணியில் சேர்த்தீர்கள். கல்யாண பத்திரிகை வைக்க வந்த ராமதாஸை கோழி அமுக்குவது போல அமுக்கிவிட்டு… இப்படி அரசியல் செய்வதற்கு பெயர் என்ன?

“நான் ஒன்றும் சர்வாதிகாரி அல்ல” – இன்னும் எத்தனை காலம் தான் இந்த வார்த்தை ஜாலங்களை சொல்லி கட்சியை நடத்தப் போகிறீர்களோ தெரியவில்லை.

சரி.. போகட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.

சிறையில் இருக்கும் போதே கனிமொழிக்கு என்ன பதவி கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்துவிட்டு, கனிமொழிக்கு பதவியளிப்பது தொடர்பாக கட்சியே முடிவு செய்யும் என்று கருணாநிதி கதைக்கிறார் என்றால் யாராவது நம்புகிறீர்களா?

கனிமொழிக்கு பதவி தரப்போகும் கட்சி எது தெரியுமா? அதில் உறுப்பினர்கள் யார் யார் தெரியுமா?

கட்சியின் பெயர்: க.க.ரா.மு.க.

கனிமொழிக்கு பதவி தரும் கட்சியில் மூன்றே மூன்று உறுப்பினர்கள் தான். ஒருவர் கருணாநிதி இரண்டாவது ராசாத்தி, மூன்றாவது கனிமொழி.

என்னது கட்சியின் பெயர் புரியவில்லையா?

கருணாநிதி கனிமொழி ராசா(த்தி) முன்னேற்றக் கழகம்.

இப்படியே இருங்க. கட்சி கட்சி சூப்பராக இருக்கும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் இந்த கொடுமை என்றால், டெல்லியில் இன்னும் கொடுமையான காட்சிகளை காணலாம்.

டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் இரண்டு நாள் கூட்டம். இதில், சிதம்பரம் “வயதானவர்கள் கட்சியிலிருந்து ஒதுங்கி விட்டு இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்” அதே கூட்டத்தில் ராகுல் பேசும்போது அரசியலில் தான் மிகப்பெரிய ஊழல் நிலவுகிறது. ஏராளமான இளைஞர்கள் அரசியலுக்கு ஈடுபடுவது மூலம் ஊழலை ஒழிக்க முடியும்” என்கிறார்.

இதையெல்லாம் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராசா, கனிமொழி, ஷரத் குமார், கரீம் மொரானி, ஆஸிஃப் பல்வா, சாஹித் பல்வா ஆகியோர்களை பார்த்த பிறகு கூட ராகுல் இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் ஊழல் இருக்காது என்று நம்புகிறாரா?


1 comment:

  1. மிகவும் சிறப்பான பதிவு துணிச்சலான பதிவும் கூட தமிழர்கள் சற்று சிந்திக்க வேண்டிய பதிவும் கூட கனிமொழி நாட்டு நல்லதிற்காக / சாராய விற்பனையை தடுப்பதற்காக / விலையேற்றத்தை தடுக்க எதுவுமில்லாமல் கோடிகணக்கான பணத்தை கொள்ளை அடிக்க அதை கண்டுதானே திகார் போய் வந்தார் பாராட்டுகள் சிறப்பு கலக்குங்க

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...