நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, November 29, 2011

கட்சியில பெரிய பதவி என்ன கொடும்மை இது

திமுக ராஜ்யசபா எம்பியும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி கடந்த மே மாதம் 20ம் தேதி 2 ஜி ஸ்பெட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாத காலமாக சிறையில் இருக்கும் கனிமொழி ஜாமீன் கோரி பலமுறை நீதிமன்றக் கதவை தட்டியும் ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் டெல்லி உயர்நீதி மன்றம் இன்று கனிமொழி, சரத்குமார் உள்ளிட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை ராசாத்தி அம்மாளிடம் பகிர்ந்து கொண்டேன் என்றார்.

கட்சியில் பதவி?:

கனிமொழிக்கு கட்சியில் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அது பற்றி பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

ராசாவின் ஜாமீன் பற்றி எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு ஜாமீன் பற்றி ராசா எதுவும் பேசவில்லை என்று கருணாநிதி கூறினார்.

வரவேற்பு அளிக்க முடிவு:

ஆறுமாத காலம் திகார் சிறையில் இருந்து விட்டு வரும் கனிமொழிக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கனிமொழி சென்னை வரும் போது கண்டிப்பாக வரவேற்பு அளிக்கப்படும் என்றார் கருணாநிதி.

கனிமொழியுடன் தொலைபேசியில் கருணாநிதி பேச்சு:

இந் நிலையில் கனிமொழியுடன் கருணாநிதி தொலைபேசியிலும் பேசினார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் திமுகவினர் இனிப்பு வழங்கி கனிமொழியின் ஜாமீன் விடுதலையைக் கொண்டாடினர்.

பெரிய நிம்மதி-டி.ஆர்.பாலு:

இது குறித்து திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறுகையில், கனிமொழிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது திமுகவினர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. கருணாநிதிக்கு நெருக்கமானவர்களுக்கு நிம்மதியை அளிக்கக் கூடியது என்றார்.

திமுக-காங்கிரஸ் உறவு எப்படி உள்ளது என்று கேட்டதற்கு, அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் பாலு பதிலளித்தார்.

திமுக எம்பியான டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், இந்த வழக்கில் கனிமொழி குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அவர் தவறு எதுவும் செய்யவில்லை என்றார்.


கொள்ளை அடிச்சுகிட்டு ஜெயிலுக்கு போய் திரும்புறவங்களுக்கு ஏதோ நாட்டுக்காக போராடி ஜெயிலுக்கு போய் திரும்புற மாதிரி வரவேற்பு , கட்சியில பெரிய பதவி என்ன கொடும்மை இது ! என்ன நடக்கு....!!

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...