நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, November 30, 2011

அதிரடி கவர்ச்சியில் - சோனியா அகர்வால்!

செல்வராகவனுடன் விவாகரத்து பெற்றபிறகு புதுபொலிவுடன் காணப்படுகிறார் நடிகை சோனியா அகர்வால். மீண்டும் சினிமாவில் இரண்டாம் அத்யாயம் எடுத்திருக்கும் சோனியா, அதை தக்க வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்விளைவாக அதிரடி கவர்ச்சியில் இறங்கபோகிறாராம். டைரக்டர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ‌சோனியா அகர்வால். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். செல்வா, கீதாஞ்சலி என்பவரை விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். தற்போது தனிமையில் இருக்கும் சோனியா மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்ட ஆரம்பித்து இருக்கிறார்.

தமிழில் இரண்டு படங்களிலும், மலையாளம், தெலுங்கு ஆகியவற்றில் தலா படம் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் சினிமாவில் மீண்டும் அடியெடுத்து வைத்திருக்கும் சோனியா, தன்னை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறாராம். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனியா, படுகவர்ச்சியான உடையில் வந்து, விழாவிற்கு வந்த அனைவரையும் கிறங்கடிக்கச் செய்தார். மேலும் எப்படி கேரக்டரிலும் நடிக்கத் தயார் என்றும், பிகினி உட்பட சென்சார் அனுமதிக்கும் அதிகபட்ச கவர்ச்சிக்கும் தான் நடிக்க தயார் என்றும் கூறிவருகிறாராம். சோனியாவின் இந்த அறிவிப்பால் பல வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம்.  இதனால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார் சோனியா. அப்ப இனி சோனியா காட்டில் மழை தான்!

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...