நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, October 31, 2011

நம்புங்கள்... அரசுத் துறைகளில் லஞ்சம் கிடையாது

வரும் 31ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை, நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில், லஞ்ச எதிர்ப்பு வாரம் அனுசரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அடுத்த வாரம் மத்திய, மாநில அரசுப் பணிகளை லஞ்சம் கொடுக்காமல் முடிக்க முடியும் என, பல்வேறு தரப்பில் நம்புகின்றனர்.

உலகம் முழுவதும் ஊழல் பெருத்து விட்டது. ஊழல் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்த நாடு? எந்த துறை? கடைசியில் இருப்பது எந்த நாடு? எந்த துறை? என்று, ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி, பட்டியல் தயாரிக்கும் நிலை வந்துள்ளது.கடந்த ஆண்டில், 180 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வதேச ஆய்வின் படி, இந்தியா 87வது ஊழல் நாடாக உள்ளது. முதலிடத்தில், நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் டென்மார்க் நாடுகள் உள்ளன. முதலில், 110 வது இடத்தில் இருந்த இந்தியா, 10 ஆண்டுகளில் படிப்படியாக ஊழல் நடவடிக்கைகளில் முன்னேறி, 87வது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், வரும் 31ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை, லஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்க வேண்டுமென, மத்திய ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக மத்திய அரசின் துறை செயலர்கள், மாநில அரசு தலைமை செயலர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், மத்திய, மாநில அரசின் கல்வி மையங்கள், பணியாளர் தேர்வாணையங்கள், அரசு மற்றும் அரசு சார்ந்த தன்னாட்சி நிறுவனங்கள், அமைப்புகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மத்திய, மாநில அமைச்சரகங்கள், அனைத்து துறைகளின் தலைமை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:லஞ்சம் மற்றும் ஊழல் வாரம் குறித்த விழிப்புணர்வு தகவல்களை, அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில், பொதுமக்களின் பார்வையில் படும்படி, பேனர்கள் மற்றும் அறிவிப்புகளாக வைக்க வேண்டும். ஊழல் மற்றும் லஞ்ச எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் இதுதொடர்பாக போட்டிகள் நடத்தி பரிசு தர வேண்டும்.ஊழல் எதிர்ப்பு அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். ஊழல் எதிர்ப்பு குறித்து பிரபலமானவர்கள் அல்லது நிபுணர்களை கொண்டு, பிரசாரம் செய்ய வேண்டும். அக்டோபர் 31ம் தேதி, காலை 11 மணிக்கு, சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்கள் மற்றும் வளாகங்களில், ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்க வேண்டும்.இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக முடித்து, அதன் பாசிட்டிவான அறிக்கைகளை, நவம்பர் 15ம் தேதிக்குள் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊழல் அதிகரிப்பதற்கு, லஞ்சம் கொடுத்து இளைஞர்கள் வேலைக்கு சேர்வதே முதல் காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த காலங்களில், பெரிய அளவிலான ஊழல்களில், சில மத்திய, மாநில அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஈடுபட்டுள்ளனர். அரசுத்துறைகளில் பணிகள் முடிவதற்கு பெரிய அளவில் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.இதற்கிடையில், வரும் வாரத்தில் ஊழல் எதிர்ப்பு வாரம் அனுசரிக்கப்படும் நிலையில், மத்திய, மாநில அரசுத்துறைகளில், அலுவலக உதவியாளர், பாதுகாவலர் முதல் உயர் பதவியிலுள்ள அதிகாரிகள் வரை, யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல், பணிகளை முறையாக முடிக்கலாம் என நம்புவோம்.

ஊழல் துறைகள்:லஞ்சம் கொடுத்து வேலைவாய்ப்பு, வரி ஏய்ப்பு, மாநில எல்லைகளில் பொருட்கள் கடத்தலுக்கு லஞ்சம், சான்றிதழ்கள் பெற லஞ்சம், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலஅபகரிப்பு மற்றும் ஆவண தயாரிப்புக்கு லஞ்சம், அரசுத்துறை டெண்டர் மற்றும் கான்ட்ராக்ட் பெற லஞ்சம், போலி மருந்துகள் மற்றும் மருத்துவ ஆவண ஊழல், வருமானவரி ஏய்ப்பு, சட்டவிரோதமாக கனிமங்கள் உட்பட இயற்கை வளங்களை சுரண்ட லஞ்சம், தரம் குறைந்த பொருட்களை விற்க லஞ்சம், போலியாக விசா, பாஸ்போர்ட் பெற லஞ்சம், போலீஸ் துறையில் வழக்குகளை முடிக்க லஞ்சம்...இப்படி நீண்டுகொண்டே போகும்.

3 comments:

  1. என்னத்தை சொல்ல, டாக்டர் ஆகுறதுக்கு முப்பது லட்சரூபாய் கொடுக்குறவன், அதை எடுக்காமல் விடுவானா..???

    ReplyDelete
  2. எங்கே போனாலும் லஞ்சம லாவண்யம்தான், இதை ஒழிக்க நமக்கு மிக பொறுமை அவசியம் ம்ம்ம் பார்ப்போம்...

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...