நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, December 26, 2011

செயலற்ற பிரதமரால் சென்னை செயலிழந்தது.வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறை செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.

பாதுகாப்பு கருதி வாகனப் போக்குவரத்தை போலீஸார் முற்றிலும் நிறுத்தியதால் கிண்டி ராஜ்பவன் முதல் கடற்கரை காமராசர் சாலை முழுவதும் ஒரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா சாலை, அதன் பக்கவாட்டுச் சாலைகள், மீனம்பாக்கம், பல்லாவரம் வரை வாகனங்கள் ஆயிரக்கணக்கில் தேங்கி நின்றன.

எந்த வாகனமும் போக முடியாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட போக முடியாமல் திணறி விட்டன. அலுவலகளுக்குச் செல்ல கிளம்பியோர் வாகனங்கள் தேங்கிப் போனதால் பெரும் சிரமத்திற்குள்ளாகி விட்டனர்.

பிரதமர் வருகைக்காக இப்படியா போக்குவரத்தை முற்றிலும் நிறுத்துவது என்று மக்கள் குமுறித் தள்ளி விட்டனர்.

மனசாட்சி: செயலற்ற பிரதமரால் சென்னை செயலிழந்தது.

இவரு தான் செயல் படலைனா போற இடம் எல்லாமுமா # டவுட்டு

1 comment:

  1. மனசாட்சி கேட்கிற கேள்விதான் உண்மை...

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...