நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, December 26, 2011

தமிழச்சி பால் குடிச்சவண்டா.....தமிழன் பாரதிராஜா

முல்லைப் பெரியாறு அணையைக் காக்கவும், கேரள அரசின் அநியாயப் போக்கைக் கண்டித்தும் மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் கூட்டம் நடைபெற்றது.


இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "நான் வரலாறு, இலக்கியம் படித்ததில்லை. ஆனால் மக்களை உணர்வுப்பூர்வமாக படித்தவன். தமிழர்கள் பெருந்தன்மையானவர்கள். அந்தப் பெருந்தன்மை காரணமாகவே இன்று தன் உரிமைகளையும் இழந்து வருகின்றனர். இனியும் இந்த நிலை தொடர வேண்டுமா?

முல்லைப் பெரியாறு பிரச்சினை என்பது 5 மாவட்ட மக்களின் பிரச்சினை மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை. இந்த பிரச்சினையில் மத்திய அரசு தந்திரப்போக்கை கையாள்கிறது.


ஆனால், முல்லைப் பெரியாறு பிரச்சினையில், தமிழக நடிகர்கள் இன்னும் குரல் கொடுக்கவில்லை. உங்கள் உதிரத்தை, பணத்தைச் சாப்பிடுபவர்கள், ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நீங்கள்தான் கேட்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகம் இனி ஏமாந்தால் பாலைவனமாகிவிடும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடிகர்கள் சங்கம் ஏன் குரல் கொடுக்கவில்லை? எதற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பெயர்? இனி இந்தப் பெயரே இருக்கக்கூடாது. தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் எனப் பெயரை மாற்றுங்கள்.
 


முல்லைப் பெரியாறு அணையைக் காக்கக் கோரி தேனி மாவட்ட மக்கள் நடத்தும் போராட்டங்கள், வன்முறைச் செயல்களாக கேரளத்தில் சித்திரிக்கப்படுகின்றன. தமிழர்கள் கேரள மாநிலத்தில் தாக்கப்படுவதும், விரட்டப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன. இனியும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.கொசுறு:  

தனது கொடிவீரனும், அன்னக்கொடியும் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளாராம் பாரதிராஜா. மேலும், தனது இரு மலையாள நாயகிகளையும் அனுப்பி வைத்து விட்டாராம்.

முல்லைப் பெரியாறு விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், தானே மலையாள நடிகைகளை வைத்து படத்தை தொடர்ந்து இயக்கினால் சரியாக இருக்காது - பாரதிராஜா.


மனசாட்சி:

தமிழன்டா.. இவர் கேட்பதை தான் தமிழ் நாட்டு மக்களும் கேட்கின்றனர் - அடியே, ஆப்பு இருக்குடி. 

தமிழன் முன்னுக்கு வர சினிமா மாயை விட்டாலே போதும்.

நன்றி - படங்கள் கூகிள்

3 comments:

  1. தமிழச்சி பால் குடிச்சவண்டா உணர்வுடன் இருப்போம்

    ReplyDelete
  2. தமிழன் முன்னுக்கு வர சினிமா மாயை விட்டாலே போதும்.
    >>>
    ரொம்ப கரெக்ட்தான் சகோ

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...