நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, December 26, 2011

ஜாம்பவான்களே...உங்களால் முடியும்!?

ஒரு வாய்க் கொழுப்பெடுத்தா அடுத்தவன் வரட்டிழுப்பிழுத்தா
அவன் தோலுரிப்பவண்டா தமிழச்சி பால் குடிச்சவண்டா
அட விஷயங்கள் பல அறிஞ்சவன் நான் வெவரங்கள் பல புரிஞ்சவன் நான்
சண்டைக்கு வந்தா சவால் விட்டா
தடியத்தான் புடிச்சித்தான்
கை விரலில சுத்துற சுத்துல 
அண்ணாச்சி உன்ன நான் புண்ணாக்கு தின்ன வப்பேன் - தேவர் மகனில் கமலஹாசன்.

மனசாட்சி: இப்படி தமிழனை உசுபேத்தியே..., எந்த ஏரியாவை காட்டி கல்லா கட்டினிகளோ அந்த ஏரியாவில்தான் தண்ணி பிரச்னை - ஒரு குரல் கொடுங்களேன். (முடியுதான்னு பார்ப்போம், விஷயங்கள் பல அறிஞ்சவர் - வெவரங்கள் பல புரிஞ்சவர்) 
   

பத்துமாடி வீடு கொண்ட சொத்து சொகம் வேண்டாம்
பட்டங்களை வாங்கித் தரும் பதவியும் வேண்டாம்
மாலைகள் இடவேண்டாம் தங்க மகுடமும் தர வேண்டாம்
தமிழ்த் தாய்நாடு தந்த அன்பு போதுமே
என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா.
என் உடல்பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா - படையப்பாவில் ரஜினிகாந்த்.

மனசாட்சி: சார், அவ்வளவு எல்லாம் வேணாம். முல்லை பெரியாருக்காக
 ஒரு குரல் கொடுங்களேன். (எல்லாம் வீண் ஜம்பம்.  தமிழனின் காசு வேணும். தமிழனை வைத்து பிழைக்கணும்).
எல்லாம் காலம் கடந்து புரியுது - புரிய வைத்தமைக்கு நன்றி   

டிஸ்கி - எதுக்காக தமிழ் நடிகர் திலகம் போட்டோ கேட்பவர்களுக்காக - இந்த இரு படங்களிலும்  ஒரு ஒற்றுமை  என்னனா தமிழ் நடிகர் திலகம் இவங்களோட நடித்து இருப்பார்.. நடிகர் திலகம் போட்டாவை பார்த்தாவது தமிழ் நடிகர் நடிகைளுக்கு தமிழ் உணர்வு வருதான்னு பாப்போம்

4 comments:

 1. "வாய்ச் சொல்லில் வீர‌ர‌டி" என்று பார‌தி சாடிய‌ கொடிய‌ ம‌னித‌ர்க‌ள்தான் இந்த‌ ப‌ணம் உறுஞ்சும் மூட்டைப்பூச்சிக‌ள். த‌மிழ‌னை சினிமாக ர‌சிக‌னாக்கி/தாச‌னாக்கி அவ‌ர்க‌ள் வாழ்கிற‌ர்க‌ள். அந்த‌ வ‌ழியில் வ‌ந்த‌ த‌மிழ‌கஅர்சோ த‌மிழ‌ர்க‌ளை குடிகார‌ர்க‌ளாக்கி அழித்து அவ‌ர்க‌ளின் ப‌(பி)ணத்தில் ஆட்சி ந‌ட‌த்துகிற‌து.

  ReplyDelete
 2. ஹா ஹா ஹா ஹா டைரக்டர் சொல்றதை நாங்க சொல்லுவோம் ஹி ஹி, அதற்காக கேரளா போயி சண்டையெல்லாம் போடமாட்டோம் ஹி ஹி போங்கய்யா...

  ReplyDelete
 3. விடுங்க பாஸ்! ஏதோ தெரியாம படத்தில சொல்லிப்புட்டாங்க! பின்னாடி இப்பிடியெல்லாம் பிரச்சினை வரும்னு தெரிஞ்சிருந்தா பேசியிருப்பாங்களா?

  //விஷயங்கள் பல அறிஞ்சவர் - வெவரங்கள் பல புரிஞ்சவர்//
  ஸ்ஸ்ஸ்..ஸ..பா! :-)

  ReplyDelete
 4. ஊருக்கு தான் உபதேசம்! எல்லாம் பணம் செய்யும் மாயம்! நன்றி நண்பரே!

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...