நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, December 26, 2011

தமிழ்நாடு எதிர் கட்சி தலைவர் கைதுபிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை விஜயகாந்த் அறிவித்திருந்தார்.அதன்படி கருப்புக் கொடி காட்டுவதற்காக இன்று காலை கிளம்பிய விஜயகாந்த்தை புறப்பட்ட இடத்திலேயே கைது செய்து கொண்டு சென்று விட்டது போலீஸ்.

இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கோவை, கரூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, திருச்சி, திண்டுக்கல், அவினாசி, கிருஷ்ணகிரி, ஓசூர், ராமேஸ்வரம், சிதம்பரம் உள்ளிட்ட பல ஊர்களிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சென்னையிலும் தேமுதிகவினர் சில இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கைதானார்கள்.


மனசாட்சி: அரசியலுக்குப் புகுந்த பின்னர், அரசியல்வாதியாக மாறிய பின்னர், எம்.எல்.ஏவான பின்னர், எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் முதல் முறையாக கைதாகியுள்ளார் விஜயகாந்த்

1 comment:

  1. ஸ்ஸ் அபா...பாத்துக்கங்கப்பா அவரும் ரெளடிதான் ஹிஹி!

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...