நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, December 4, 2011

ஸ்டாலின் மீதான வழக்கு-ஆந்திர தொழில் அதிபரை விசாரிக்கும் போலீஸ்

முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான சொத்து அபகரிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆந்திர தொழிலதிபர் வேணுகோபால ரெட்டியை விசாரிப்பதற்காக சென்னை மத்திய குற்றப் பிரிவைச் சேர்ந்த போலீஸ் படை ஒன்று ஹைதராபாத் விரைந்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்திரிகுமார், தனது வீட்டை அபகரித்துக் கொண்டதாக கொடுத்த புகாரின் பேரில் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால ரெட்டி, ராஜா சங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தற்போது போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட வீடு வேணுகோபால ரெட்டியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சார்பதிவாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ரெட்டியை விசாரிக்க ஹைதராபாத்துக்கு போலீஸ் படை ஒன்று விரைந்துள்ளது.

பெரும் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ரெட்டி வீடு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரிய வரும் என்பதால் ரெட்டியிடம் நடக்கும் விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...