நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, December 14, 2011

தனுஷுக்கு குறிவைக்கும் 'டேம் 999' படத்தின் டைரக்டர்

 
 
போகிற போக்கை பார்த்தால் சேட்டன் கடை டீக்கும் வேட்டு வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. மணப்புரம் கோல்டு ஹவுஸ் மேலே பறக்கும் கல், சேட்டன் கடையை பதம் பார்க்க எத்தனை நேரம் பிடிக்கும் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழக இளைஞர்களில் சிலர். இப்படி அண்டை மாநிலத்திற்குள் சிண்டுபிடி சினேகத்தை வளர்த்துவிட்டு ஹாயாக சுற்றிக் கொண்டிருக்கிறார் சோஹன்ராய். டேம் 999 படத்தின் இயக்குனர் இவர்தான்.

பல வருடங்களாகவே விவாதிக்கப்பட்டு வரும் முல்லை பெரியாறு பிரச்சனை இந்தளவுக்கு கொடூர முகத்தை காட்டுவதற்கு காரணமே இவரது படமும் அதற்கு விதிக்கப்பட்ட தடையும்தான். இதையடுத்து ஊரே உருமிக் கொண்டிருக்க, சத்தம் போடாமல் அடுத்த வெடிகுண்டை தயார் பண்ணிக் கொண்டிருக்கிறாராம் இந்த மேதாவி.

ராமேஸ்வரம் பகுதியில் அடித்த சூறாவளி காரணமாக ஒரு காலத்தில் காணாமலேயே போய் விட்ட தனுஷ்கோடியின் வரலாற்றை எடுக்கப் போகிறாராம். இப்போதும் அந்த பகுதியில் எலும்புக் கூடாக நிற்கும் சில வீடுகளும், தேவாலயம் ஒன்றும் இந்த குரூரத்திற்கு சாட்சியாக இருக்கிறது. இந்த சோகத்தைதான் அவர் படம் பிடிப்பதாக இருக்கிறாராம்.

இவ்வளவுக்கு பிறகும் தமிழ்நாட்டு எல்லையில் கால் வைக்க விடுவார்களா இவரை

3 comments:

 1. நேத்து அந்த இயக்குநருக்கு தமிழர்கள் குறிவைத்தார்கள்..தப்பித்துக் கொண்டான்..

  ReplyDelete
 2. நம் வலைப்பூவில்

  'அய்ம்புலனுக்கும் அறிவில்லை'

  ReplyDelete
 3. என் பதிவில் அவன் போட்டோ போட்டு இருக்கிறேன் எங்கேயாவது அவனை கண்டீங்கன்னா கொட்டையை நசுக்கிருங்க...

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...