நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, March 14, 2012

கத்திரி வெயிலிலும் அழகாய் ஜொலிக்கனும்

கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. வெயிலுக்கு பயந்து கொண்டு வெளியில் செல்லாமல் இருக்கமுடியாது. சிறிது தூரம் சென்று வந்தாலே முகம் வாடிப்போய்விடும் எனவே கருமையை மாற்றவும், சருமத்தை பாதுகாக்கவும் அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.

தயிர் கலவை

வெளியில் கிளம்பும் முன்பாக சிறிதளவு தயிரை முகம்
, கைகளில் தேய்த்து மிதமான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் உக்கிரம் சருமத்தை பாதிக்காது.

கருமை மறையும்

வெயிலில் அலைந்துவிட்டு வந்தவுடன்
, சோப்பு போட்டு அலம்புவதால், அந்த சில விநாடிகள் மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால் நிறம் அப்படியே தான் இருக்கும். சோப்புக்கு பதிலாக

பாசிப் பருப்பு
, கடலைப்பருப்பு, பூலான்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள்,வெள்ளரி விதை, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து அரைத்த பொடியை பூசி முகம் கழுவலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், இந்த குளியல் பவுடருடன் ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, எலுமிச்சைசாறு , தேங்காய்ப் பால் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து நிறம் கூடும்.

உருளைக் கிழங்கு பவுடர்

தோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக உலர்த்தி காய்ந்த உடன் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள கருமை
, திட்டுக்கள், புள்ளிகள் மறையும் முகம் பளிங்குபோல மாற்றிவிடும்.

பச்சைக் காய்கறிகள்

உடம்பில் சூடு அதிகமாகும்போது
, தோலின் கருமையும் அதிகமாகிவிடும். அதனால் கீரை, பச்சைகாய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர், இளநீர், பழச்சாறு இவற்றை அருந்தி உடம்பை எப்போதும் குளுமையாக வைத்துக் கொண்டால், சிகப்பழகு ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும்.

இரவில் படுக்கப் போகும் முன் தரமான மாய்ஸ்ட்டுரைஸிங் க்ரீம்
, கோல்டு க்ரீம் ஆகியவற்றை முகத்தில் தடவவேண்டும். காலையில் வெளியே செல்லும் முன் சூரிய வெப்பம் தாக்காதிருக்க சன் டேன்லோஷன் தடவிக் கொள்ளவேண்டும்.

இயற்கை சிகைக்காய் பவுடர்

தலையில் அழுக்கும்
, பிசுக்கும் சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகிவிடும். தலை சுத்தமாக இருந்தால் தான் சருமத்தில் கருமை படராது. அதோடு, சருமத்தில் ஓரளவு எண்ணெய்ப் பசை இருப்பதுபோல பார்த்துக் கொள்வதும் அவசியம். இதற்கு சிகைக்காய், பாசிப்பயறு, வெந்தயம், பூலாங்கிழங்கு, புங்கங்கொட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து, இந்த ஸ்பெஷல் பொடியை போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகிவிடும். தோலின் எண்ணெய்ப் பசை தக்கவைப்ப தோடு, கருமையும் மறைய தொடங்கும்.

வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். புருவங்களை சீர்படுத்தி
, மினி பேஷியல் செய்து முடியை சீராக வெட்டி வைத்துக் கொள்ள அதிகம் செலவாகாது. மாதமொரு முறை இவற்றைச் செய்து கொள்வது முகத்தின் அழகைப் பாதுகாக்க விரும்பும் வசதி படைத்தவர்கள் கோல்ட் பேஷியல் கினாட் பேஸியல் செய்து கொள்ளலாம்.

மேக் அப் கவனம்

வெயிலும்
, நெரிசலும் அதிகமாக இருப்பதால் கிரீம் மேக்-அப்பை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. மேக்-அப் செய்வதற்கு முன் வியர்வை அதிகமாக உள்ளவர்கள் ஐஸ் கியூப்-ஐ முகத்தில் தேய்த்து அல்லது செய்த பிறகே மேக்-அப் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஐஸ் கியூப் கொடுக்காமல் மேக்கப் செய்து விட்டால் அவை சிறிது நேரத்துக்குப் பிறகு வியர்த்து விட்டால் சிவப்பு நிற புள்ளிகளாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். இதை தவிர்க்க பவுடர் மேக்-அப் அதிகமாக உபயோகிக்க வேண்டும். அவரவர் நிறத்துக் கேற்றாற் போல் பவுடரை தேர்ந்து எடுக்க வேண்டும். இது மிக முக்கியமானதாகும். இதில் லிப்ஸ்டிக்கும் அடங்கும்.

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

கொறைஞ்சது இந்த அளவுக்காவது கேரண்டிங்.

27 comments:

  1. நல்ல
    தகல்வல்களை கொடுத்தீங்க தலைவரே

    கடைசியில்
    கொஞ்சம் லொள்ளும்
    ஜொள்ளும்

    வடியிது தொடச்சுகொங்கோ ....(:

    ReplyDelete
    Replies
    1. வடியுதுதா...எங்கே. எங்கே.. எங்கே...ஹி ஹி ஹி

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

      Delete
  2. சூப்பர் குறிப்பு ....நன்றிங்க அண்ணா பகிர்வுக்கு

    ReplyDelete
    Replies
    1. மெய்யாலுமா? பயன் பெற்றால் சர்தான் சகோ

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  4. ஹெஹெ நாங்கல்லாம் அப்பவே அப்பிடி அப்போ இப்போ கேக்கவாவேனும்...இருந்தாலும் அது ஜொள்ளா சொல்லுய்யா!

    ReplyDelete
    Replies
    1. மாம்ஸ் வோணம்....அவ்வ்வ்வ்வ்வ்வ்

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  5. அழகு குறிப்புக்கு நன்றிங்கோ. அழகு குறிப்பு ஆண்கள் வலைப்பூவிலா?! அழகுக்கும் ஆண்களுக்கும் என்ன சம்பந்தம்?

    ReplyDelete
    Replies
    1. பார்ரா...அதென்ன சகோ அப்புடி கேட்டுபுட்டிகே.

      அல்....லோ எச் ஜூஸ் மீ


      அழகுன்னா பெண்களுக்கு மட்டுமே சொந்தம் அப்படீன்னு - எந்த அடிபடையில் முடிவுக்கு வந்தீக?


      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

      Delete
    2. ராஜிMar 14, 2012 02:29 AM

      //அழகு குறிப்புக்கு நன்றிங்கோ. அழகு குறிப்பு ஆண்கள் வலைப்பூவிலா?! அழகுக்கும் ஆண்களுக்கும் என்ன சம்பந்தம்?//
      என்ன இப்பிடிச்சொல்லிப்புட்டீக? நான் செந்திலாட்டம் ஒரு அழகான ஆம்பளையா இருந்துகிணு இதை படிக்க வந்திருக்கேன்னா பார்த்துக்குங்க. எங்களுக்கும் அழகு ரொம்ப ரொம்ப முக்கியம்.

      Delete
    3. ஸ் யப்பாடா...அண்ணே அம்பலத்தார் அண்ணே துணைக்கு வந்தீங்களே

      Delete
  6. வருகைக்கு நன்றிங்.

    ReplyDelete
  7. //கொறைஞ்சது இந்த அளவுக்காவது கேரண்டிங்.//
    நான் அந்த பொண்ணைவிட அம்சமா செந்திலாட்டம் இருப்பேனுங்க. எனக்கு எந்தளவு கேரண்டி என்று தெரிஞ்சுக்கலாமா?

    ReplyDelete
  8. //கொறைஞ்சது இந்த அளவுக்காவது கேரண்டிங்.//
    நான் அந்த பொண்ணைவிட அம்சமா செந்திலாட்டம் இருப்பேனுங்க. எனக்கு எந்தளவு கேரண்டி என்று தெரிஞ்சுக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. முயற்சி பண்ணி பாருங்கோ தெரிஞ்சுவிகிங்..அட நிஜமாலுமே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

      Delete
  9. //பாசிப் பருப்பு, கடலைப்பருப்பு, பூலான்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள்,வெள்ளரி விதை, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து அரைத்த பொடியை பூசி முகம் கழுவலாம். //
    Ex. me what is பூலான்கிழங்கு?

    ReplyDelete
    Replies
    1. அதாண்ணே பூலான்கிழங்கு இல்ல.. பூலான்கிழங்கு

      Delete
    2. படம் வரைந்து தான் காட்டனுமோ..

      Delete
    3. என்னைய்யா இது செந்திலோட அந்த வாழைப்பழ கதையாட்டம் இருக்கு

      Delete
    4. வாழைபழம் இல்லண்ணே...பூலான்கிழங்கு

      Delete
  10. கேரண்டி நல்லாயிருந்தது ...-:)

    ReplyDelete
    Replies
    1. சரிங்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

      Delete
  11. நல்ல குறிப்புகள் நண்பா !

    ReplyDelete
    Replies
    1. நண்பரே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  12. ஹி ஹி பொண்ணு ஹி ஹி......

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...