நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, October 24, 2011

சி.பி.ஐ., வலையில் தயாநிதி

சன் டி.டி.எச்.,க்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தயாநிதியின் பங்கு குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியதாவது:ஏர்செல் நிறுவனம், மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்ட விவகாரத்தில், மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. தயாநிதியின் வீட்டுக்கு 300 டெலிபோன் இணைப்புகள் வழங்கப்பட்டது தொடர்பான விவகாரம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த வழக்கில் தொடர்புடைய, சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள், டி.டி.எச்., சேவையில் ஈடுபட்டுள்ளதை, சி.பி.ஐ., கண்டுபிடித்தது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக, டி.டி.எச்., நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை, தொலைத் தொடர்பு துறையிடம், சி.பி.ஐ., கேட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, டிஷ் "டிவி' இந்தியா லிட்., ரிலையன்ஸ் பிக் "டிவி' பிரைவேட் லிட்., பார்தி மல்டி மீடியா லிட்., பாரதி பிசினஸ் சேனல் பிரைவேட் லிட்., தூர்தர்ஷன், சன் டி.டி.எச்., பிரைவேட் லிட்., டாடா ஸ்கை லிட்., போன்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை பெற்ற சி.பி.ஐ., அவற்றை ஆய்வு செய்தது. இதன்பின், சன் டி.டி.எச்., தொடர்பான ஆவணங்களை தவிர, மற்ற ஆவணங்கள், தொலைத் தொடர்பு துறையிடம் திரும்ப அளிக்கப்பட்டு விட்டன.சன் டி.டி.எச்.,க்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் தயாநிதியின் பங்கு குறித்து விசாரிக்க, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...