நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, October 24, 2011

கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையா?

 
வேலை கொடுத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என்று சொல்வோருக்கு இந்த பதில் - பிரச்சனைகளும் போராட்டங்களும் வந்தபிறகு இதுபோன்ற உறுதிமொழிகள் தந்து போராட்டத்தை திசை திருப்ப முயற்ச்சிக்காமல் இருந்திருப்பார்களா என்ன? நடந்தது, அதையும் மக்கள் தூக்கி எரிந்து விட்டார்கள் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள ஆசைப் படுகிறேன். பத்துவருடமாக அங்கு வேலை செய்துவந்த வெளிமாநில அன்பர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பேனும் நிகழ்ந்ததுண்டா? வேலைதான் காரணம் என்றால்? இத்தனை வருடம் இத்தனை வெளிமாநிலத்தவர் அங்கு வேளையில் இருக்கமுடிந்தது எப்படி?

திடீர் போராட்டம் சந்தேகத்தை தூண்டுகிறது என்று நினைப்போருக்கு - இந்தியாவை திரும்பிப் பார்க்கவைக்கும் ஒரு மக்கள் அறவழிப் போராட்டம் நடக்கிறது, 1500 கோடி ரூபாய் அணு உலையை மூட சொல்கிறார்கள் என்றால் இவ்வளவு நேரம் தமிழக உளவுத்துறைக்கும், இந்திய உளவுத்துறைக்கும் இந்த சந்தேகம் வராமல் இருக்கும்? அப்படி இருந்தும் இதுவரை அந்தகாரணம் வெளிவராதது ஏன்? அரசாங்கம் இந்த போராட்டத்திற்கு மதிப்பளிப்பது ஏன்?
ஏன் என்றால்? இந்தப் போராட்டம் சுயனலத்திர்க்கோ, அல்லது காசுக்காகவோ, நிலத்திர்க்காகவோ, வேலைக்காகவோ, அரசியளுக்காகவோ செய்யப் படுவதில்லை. வாழ்வாதாரம் போய்விடுமோ என்ற ஒரு இனத்தின் பயம், உழைக்கும் வர்க்கத்தின் பயம், சந்ததிகளைப் பற்றிய பயம், பயம், பயம் மட்டுமே காரணம்.

பாதுகாப்பு உத்தரவாதம் தந்தால் ஒப்புக்கொள்ளவேண்டிதானே என்று சொல்பவர்களுக்கு - இல்ல நான் தெரியாமத்தான் கேட்கிறேன், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பானை விட நாம் தொழில் நுட்பத்தில் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? இல்ல அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என்ன? அவர்களே விழி பிதுங்கி நிற்கும் போது நாம் என்ன செய்ய முடியும். அப்படி தவறி எதாவது நடந்துவிட்டால், ஒரு அறிக்கை விட்டுவிட்டும் வருத்தம் தெரிவித்துவிட்டும் போய் விடுவார்கள் அப்போ நீங்கபோய் கொண்டு வருவீர்களா இந்த உயிர்களை?

சரி சுனாமி இனிமேல் இந்தியாவில் வராது என்று உங்களால் உத்திரவாதம் தரமுடியுமா?.

பதுக்கப்பனது என்று நினைக்கும் நீங்கள் அங்கு வாழ்த்தயாரா?

இந்தியாவில் இரண்டு அணுமின் நிலையம் தமிழ் நாட்டில் மட்டும் தான் அது ஏன்? கல்பாக்கம் ஒன்று போதுமே நமக்கு.

2000 மெகாவாட் மின்சக்தி தயாரிக்க பயன்படுத்தப் படும் ரியாக்டரின் சக்தி என்னவென்று தெரியுமா? அதில் பயன்படுத்தப் படும் யுரோநியத்தின் அளவு தெரியுமா? இல்லை அடுத்த வருடம் மேலும் இரண்டு ரியாக்டர்கள் அதே கூடங்குளத்தில் நிறுவ இருக்கிறார்களே அது தெரியுமா? அப்படி நிறுவினால் மொத்தம் மூன்று ரியாக்டர்களின் அளவி நினைத்துப் பாருங்கள். அதன் கழிவுகளை நினைத்து பாருங்கள்.

சமீபத்தில் பிரான்சில் ஏற்ப்பட்ட அணுஉலை கழிவு பிரச்சனை என்னவென்று கொஞ்சம் இணையத்தில் தேடிப் பாருங்கள்

அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தால் தென் தமிழ்நாடு முழுதும் புல்பூண்டு இல்லாமல் போய் விடும். இன்று காற்றுவாங்க மின்விசிரிக்கு, குளிரூட்டிக்கு மின்சாரம் இல்லை என்று கவலைப்படும் நீங்கள் காற்றுவாங்க கறியில்லாமல் போய்விடும். அனைத்தும் உருகி ஓடிவிடும்.

(பத்து வருடமாக இல்லாமல் திடீர் போராட்டம் நடத்தி) தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு இந்திய வளர்ச்சி பாதைக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று சொல்பவர்களுக்கு -
அப்படி இருந்திருந்தால் இத்தனை நாள் கல்பாக்கம் இயங்கி இருக்காது, அது போல் கூடங்குளம் 2000 மெகாவாட் தமிழகத்திற்குத்தான் என்று கனவு காணாதீர்கள், அதில் வெறும் 976 மெகாவாட் தான் அதும் போராட்டம் ஆரம்பித்தபிறகு அறிவித்தது. அதற்க்கு முன் அதைவிட மிக்க மிக குறைவு.

அணுசக்தி பயன்படுத்தாத நாடுகள் இருளில் மூழ்கிப் போய் விட்டனவா? இல்லை ஒட்டுமொத்த இந்தியாவின் மின்சாரத் தேவையில் இந்த பத்து அணுமின் நிலையங்களின் பங்களிப்பு 4% தான் என்பதும் தெரியாதா?

அப்படி என்றால் இன்னும் எத்தனை எத்தனை அணுமின் நிலையங்கள் கட்டப் போகிறீர்கள்? அனைத்தையும் பாதுகாக்க என்ன என்ன நடவடிக்கைகள். போர் வந்து இந்த நிலையங்கள் தாக்கப்பட்டால் விளைவு?

உங்கள் வீட்டு மின்சார வசதிக்காகவும், நீங்கள் சீரியல், கிரிக்கெட் பார்ப்பதற்காகவும் எத்தனை மக்கள் உயிரை பணையம் வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்?
சரி அவர்கள் அங்கிருந்து காலி செய்தால் என்ன? என்று கேட்டால் -
தமிழ் நாடு மொத்தத்தையும் காலி செய்துவிட்டு அணுமின் நிலையங்களாக நிறுவி விடலாமா?

காவிரி, முல்லை பெரியாறு, கிருஷ்ணா நதிநீர், ஒக்கேனைகல் குடிநீர்த்திட்டம், செய்து சமுத்திரத் திட்டம், தமிழர் மீனவர் பிரச்சனை இவற்றை தீர்த்துவைத்தால் பிறகு யோசிக்கலாம்?

இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப் பட்டாலே போதும் தமிழ்நாடு வளமையோடும் செழிப்போடும் இருக்கும், இவற்றை கேட்க வக்கு இருக்கா நமக்கு? இல்லை என்றால் இந்த பிரச்சனைகளைப் பற்றி நாம் பேசக் கூடாது. வேடிக்கைப் பாருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை

இந்தியன், ஜனநாயகம், தேசப் பற்று, சிந்தனையாளர் என்று நினைத்து நம் மக்களின் போராட்டத்திற்கு நீங்களே தடையாய் இருக்காதீர்கள். ஒற்றுமை என்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழன் இருக்கிறான். இல்லையென்றால் தமிழினம் என்பதை கல்வெட்டில் மட்டும் காணவேண்டிய நிலைமை வந்துவிடும்.
__________________
நன்றி- த.நிவாஸ்

2 comments:

  1. மாப்ள புரிதல் ஏற்படவேண்டிய தருணம் இது....பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. விக்கியுலகம் said...
    மாப்ள புரிதல் ஏற்படவேண்டிய தருணம் இது....பகிர்வுக்கு நன்றி!

    வருகைக்கு நன்றி

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...