வரும் தேர்தலில் தி.மு.க. 234 தொகுதிகளிலும் ஜெயிக்கும். அதன் பின்னர் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது”
இந்த பேட்டியை கொடுத்தவர் வேறு யாருமில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் மத்திய உரத்துறை அமைச்சருமான மு.க.அழகிரி தான். இதே ஆண்டு, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அழகிரியின் ராஜபாட்டை பேட்டி இது. எங்கு சென்றாலும் அவர் அளிக்கும் பேட்டி இதுதான்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.வுக்கு வந்த சோதனைகளை விட, தி.மு.க. தொண்டனுக்கு வந்த சோதனையை விட தமிழ்நாட்டில் அதிகமாக பாதிக்கப்பட்ட தி.மு.க. பிரமுகர் அழகிரியாகத்தான் இருப்பார். கட்சியின் தலைவரின் மூத்த மகன். மத்திய அரசின் உரத்துறை அமைச்சர். தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அழகிரி, தான் வசிக்கும் வார்டில் தி.மு.க. தோற்றுவிட்டது கூட செய்தியல்ல.
அந்த வார்டில் தி.மு.க. நான்காவது இடத்தை பிடித்திருக்கிறதாம். என்ன கொடுமை அழகிரி இது?
உலகமும் உருண்டை நம்மாலும் உருண்டை என்னே பொருத்தம்...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete