ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவான பின்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
இதைத் தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவானதும் சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் நிறுவன இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், பட அதிபர் கரீம் மொரானி ஆகிய 5 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு விசாரணையின் போது அவர்களுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே சமயம் ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் பல்வா, ராசாவின் தனிச்செயலாளர் சந்தோலியா ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து வருகிற 4-ந்தேதிக்கு தீர்ப்பை தள்ளி வைத்து நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
இந்நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் 4 நபர்களின் ஜாமீன் மனுவை எந்த அடிப்படையில் எதிர்க்கவில்லை என்பதை சி.பி.ஐ. விளக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
நல்ல கேள்வி, ஆமாம் சரி, அந்த பணமெல்லாம் எங்கே...???
ReplyDelete