வணக்கம்
போதும்டா, பொழப்பத்து போயா பதிவுலகத்துக்கு வந்தோம்... எம்புட்டு பொலப்புக்கும் இடையில் அப்ப அப்ப தெரிஞ்சவங்க தளத்துக்கும், புதுசா வர்றவங்க தளத்துக்கும் போய் முடிஞ்ச வரையில்
அவுக பதிவுகளை படிச்சிட்டு...படிச்சிட்டு.....
( இருய்யா வாறன்)
நம்மகிட்ட உள்ள கெட்ட பழக்கம் அட எங்க போனாலும் எந்த பதிவை படிச்சாலும் கருத்து, பின்னோட்டம், மறுமொழி ( யோவ் தமிழ்ல சொல்லும்வோய்)
ஆங்.. அதாங்க கமண்டு போட்டாதான் சமாதானம் அடையுது மனசு..
சரி இதுல என்ன பிரச்னை நல்ல விடயம் தானே.....
அதுல தான் பிரச்சனையே....
நம்ம போடுற கமண்டு ஸ்பேம் பாக்ஸ்சில் போய் ஒளிஞ்சுக்குது அதை அந்த
ப்ளாக்கின் உடமஸ்தன் தான் வெளியவுடனும்.
(ஒ..... பப்ளிக்குட்டி பண்ணனும்)
இது சம்மந்தமா
இப்படியும் ஒரு பதிவர் அப்படின்னு ஒரு பதிவும் போட்டாச்சிங்க....சரி மேட்டர் முடிச்சதுன்னு பார்த்தா.....
முடியல...முடியல ராசா முடியல....
பின்ன என்னங்க, ஒரு பதிவுல ஒரு கமண்டு போட்டேன் அதை காணோம்.......அவுக மெயில் ஐடியும் இல்ல அதனால,
இன்னொரு கமண்டு இப்படி போட்டேன்
//என்
கமண்டை
காணோம்//
அதுக்கு அவுக பதில் சொன்னாக :
//ஹிஹி....போடாத கமென்ட் எங்கிருந்து வரும்....//
ஸ்பேம் அப்படின்னா என்னான்னு தெரியல சர்தான்.....
இது முழுக்க முழுக்க கூகிள் பிராபளம் தான்.... எப்படின்னா, யாம் இடும் கமண்டுகள் பிராப்ள ச்சே பிரபல பதிவர்களுக்கு மட்டும் ஸ்பேம் போறதுல்ல.... பிராப்ள ச்சே பிரபல பதிவராக ஆகி கொண்டு இருப்பவர்களுக்கும், பிரபலமா நட்ட நடு சென்டர்ல இருப்பவங்களும், புதியவர்களுக்கும் மட்டும் அப்படி நடக்குதுங்க.
சோ,... அதனால (கொய்யால ரெண்டும் ஒன்னு தான்)
பதிவுலகத்துக்கு குட் பை (ஒழிஞ்சதுடா ஒரு தொல்லை) .....
அல்லோ இன்னும் முடிக்கல......
அதுக்குள்ளே என்ன்ன்னா ஒரு சந்தோசம் பக்கி பய புள்ளைக்கி... ம்.....
குட் பை ஏன் சொல்லணும் யோசிச்சேன் நின்னு யோசிச்சேன் படுத்து யோசிச்சேன் நடந்து யோசிச்சேன்....இன்னும் பலவாறும் யோசிச்சேன்...
வரும் காலம் ச்சே எதிர்காலத்துல ஒரு எழுத்தாளர (இக்கும் இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல) தமிழ் கூறும் நல்லுலகம் இழந்து வாடுமேன்னு..... எண்ணத்தை மாத்திகிட்டேன்...
(அப்ப போகலையா...இன்னும் உசிர வாங்கனுமுனு முடிவு பண்ணிட்ட...
கர்ர்ர்ரர்த்து)
யோவ் மானிட்டரை தொடங்கைய்யா..
இனிமேல் எந்த தளத்துக்கு போனாலும் எந்த பதிவை படித்தாலும், படித்து விட்டு எப்பவும் போல கெட்ட பழக்கத்தை கைவிடாமல் தொடர முடிவு பண்ணீட்டேன். எப்பூடீ... (அப்ப இந்த மாதிரி இன்னும் பதிவு வரும்னு சொல்லாம சொல்ற... வெளங்கிடும்ல)
ஹே ஹே ஹே ஏங்.. கேரக்டரையே புரிஞ்சுக்கல.
எஸ் ஜூஸ் மீ ஒரு விடயம்,...
ஒரு புத்தகம் போடலாமுன்னு இருக்கேன். புத்தகத்தின் தலைப்பு
'லோலாய்'
சரி நம்ம கடைக்கு வந்துட்டு,,, ஸ்பெசல் ஐட்டம்: வாங்க பாஸ்
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
 |
சத்தியாமா தான் புள்ள நீ ஒரு ரவுண்டு வருவ நம்பு..
|
 |
அட இது வேற ஆருமுல்ல நம்ம சிலுக்கு இல்ல சிலுக்கு, சிலுக்குவோட வாழ்க்கை வரலாறை ஹிந்தி படத்துல எடுத்தாங்க அதுல சிலுக்கா நடிச்ச வித்யா பாலன்.....
என்னா ஒரு ஹாப்பி லுக்கு....
கண்களில் சிரிப்பு என்பது இதுதானோ
|
நம்ம கடைல ஜொள்ளு தூக்கலா இருக்காம்.. அப்படியா மக்கா'ஸ்??? ஙே.
டிஸ்கி :
சமீபத்தில் பதிவுலகில் ஹிட்டுக்காக (அது என்ன ஹிட்டோ)என்னவெல்லாமோ நடக்குது அவுக அவுகளுக்கு அவுக அவுக பிரச்னை என்ன நான் சொல்றது - எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு ஸ்...யபா..ஏதோ நம்மால முடிஞ்சது ஹி ஹி ஹி...ஏம்பா நா சரியா தான் பேசுறேனா.