நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, December 11, 2011

வாடகைத் தாய் மூலம் ஆண் குழந்தை - அமீர்கான்பாலிவுட் நடிகர் அமீர் கான்-கிரண் ராவ் தம்பதியருக்கு வாடகைத்தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறந்துள்ள இந்தக் குழந்தை எங்களுக்கு மிகவும் விசேஷமானது, சிறப்பானது என்று அமிர்கான் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.  தற்போது 46 வயதாகும் அமீர் கானுக்கும், அவரது மனைவி கிரண் ராவுக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற அமிர்கான் - கிரண் முடிவு செய்தனர்.

அதன்படி செயற்கை முறையில் கருத்தரிப்பு நடத்தப்பட்டு, வாடகைத்தாயின் கருவறையில் அமிர்கான் தம்பதியின் குழந்தை வளர்ந்து வந்தது. தற்போது அழகான ஆண் குழந்தையை அந்த வாடகைத்தாய் பெற்றுள்ளார். இதுகுறித்து அமிர்கான் அளித்துள்ள பேட்டியில், கடவுளின் அருள், அறிவியலின் அற்புதம், எங்களது குடும்பங்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு, அன்பு ஆகியவற்றுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்த, எங்களின் உணர்வுகளை மதித்த அனைவருக்கும் நன்றி கூறுகிறோம், என்று கூறியுள்ளார்.

3 comments:

  1. ம்ம்ம் நாடு நல்லா முன்னேருதுப்பா...!!!

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...