நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Thursday, October 18, 2012

ஒரு வயசு புள்ள

ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையில் ஒரு பாப்பா

முத்து முத்து பாப்பா
முத்தம் ஒண்ணு  கேப்பா
முத்து முத்து பாப்பா
முத்தம் ஒண்ணு  கேப்பா.........

(என்னவே இம்புட்டு சந்தோசமா இருக்கீரு)

வாங்க வாங்க
வணக்கம்

365 நாட்கள்  ஒரு வருஷம் - ஒரு வருசத்தில் 300 வோய்...

நீண்ட பதிவு (சுய சொரிதல் ச்சே சரிதம்)


கி பி 2000 ஆண்டு முதல்  எம்எஸ்என்/யாஹூ க்ரூப்புகளில் மட்டுமே வலய வந்தேன் ஆங்கிலத்தில், அதன்  தொடர்ச்சியாக  அப்படியே 2007 ல் தமிழ்  பதிவு பற்றி தெரிந்து   வாசிக்க தொடங்கினேன், 


(கி.பி.2007 முதல்)

(கி.பி.2008 முதல்)

(கி. பி. 2009 முதல்)

வாசிப்பதுடன் சரி வலைப்பூவில் எப்படி  பின்னுட்டம்  போடணும்  என்ற  ஞானம்  இல்லை போக  போக  தெரிந்து  கொண்டேன்.

கி பி 2010 தொடக்கத்தில் தான்  தமிழ் பதிவுலகில்  யாம் பின்னூட்டங்களின்  மூலமாக  பரிச்சியமானேன்.... (இங்கு வந்த பின் சிறுக சிறுக குரூப் பக்கம் போக முடியாமல் போனது இப்ப...தங்கில்ஸ்ல எய்தி எய்தி   இங்கிலீசு  பீஸ்  போச்சுங்க)

(கி. பி. 2010 முதல்)

'சித்தப்பு' (நான் செல்லமாக அழைப்பது) இவரின் பதிவின் மூலமாக கிடைத்தவர்கள் ஏராளம் அந்த வரிசையில் ஆரம்பத்தில் (ஏன்  இப்ப  வரையில்)  விரும்பி படிக்கும் பதிவுகளின்   பதிவர்கள்:

திரு. பன்னிக்குட்டி ராம்சாமி (இப்பல்லாம்  எப்போதாவது பதிவிடுகிறார்)

திரு.நாஞ்சில் மனோ ( இவரும் எப்போதாவது பதிவிடுகிறார்)

திரு. விக்கி, விக்கியின் அகட விகடங்கள்! (இவரும் எப்போதாவது பதிவிடுகிறார்)

திரு. செல்வா (இவரும் எப்போதாவது பதிவிடுகிறார்)

முக்கியமாக டெரர் கும்மி (இவர்களும்  எப்போதாவது பதிவிடுகிறார்கள்)

(அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது...........ஹி ஹி ஹி கொளுத்தி விட்டுடீயே...இனி பதிவா போட்டு தாக்கு வாய்ங்களோ......பாப்போம்)

திரு. நீருபன்  (இப்பவெல்லாம் இவரின் பதிவு  வாசிக்கவே  நேரமில்ல
ஆனா அவரின் புரட்சி எப் எம் என்னை முழுமையாக திருடி கொண்டது)

இப்படி தான் போய்கொண்டு இருந்தது,  2011 ல்  தனிமையின் கொடுமையில்   துவண்ட எனக்கு ஒரு ஆறுதலாக,  திடீரெண்டு ஞானம் வந்தது  சரி நாமும் பதிவுலகில் பூ மிதிப்போமுன்னு,....

முக்கியமா நான்  வாசிக்கும் பதிவர்களை   தெரிஞ்சவங்க லிஸ்ட் என தொகுத்து எனது வலை  பூவில்  வெளிட்டேன்  கூகுளின்  தயவால்.... 

(அதுக்கு காரணமே அந்த  கால  கட்டத்தில்  வீசிய  மணம்)  

சில  நாட்களுக்கு  பின்.... (ஏழரை ஆரம்பம்.. ....)

எனது  வலைப்பூவில்  கடந்த ஆண்டு 2011    அக்டோபர் 18 ம்     நாளில் தமிழ் பதிவுலகில் யாம்  சுட்ட முதல் பஜ்ஜி.   

மாதங்கள் கடந்து என்றாலும் அதுக்கு வந்த ஒரே பின்னூட்டம் மாப்ள ஜீவா கோவை நேரம்.
 
திரும்பி பார்க்கிறேன்... ஓர் ஆண்டில் அடேங்கப்பா.... இதோ இன்று 2012 அக்டோபர்  18 ம் நாள்

பதிவுகள் - 300

பஜ்ஜியை விரும்புவோர்கள் - 112

பின்னூட்டங்கள் - 2957 

ப்ரோபைல் வீவ்ஸ் - 7132

பேஜ் வீவ்ஸ் - 29298......

ஒரு வயசு (பக்கி பய)புள்ள

ஏராளமான நட்பு.. எதை  சொல்ல  எதை விட.... ஏதாவது  விடுபட்டு விட்டால் இருக்கவே இருக்கு மன்னிப்பு கேற்ற வேண்டியது தான்.

மனசாட்சியின் பஜ்ஜிக்கடை என்று இருந்ததை   இந்த பதிவு முதல்  மனசாட்சி என்று  மாற்றிக்கொண்டேன்.

அதன் பின் எல்லாமே, எனக்குன்னு ஒரு பாதை அந்த வழியில் பயணம்.....

எனது  பதிவுகளை திரட்டிகளில் குறிப்பாக இன்ட்லி  யுடான்ஸ்  தமிழ்வெளி   ஹோட்லின்க்ஸ்   மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளேன் அதன் பின் வெட்டி பிளாக்கர்ஸ்  என்று முகநூலில்  மாப்ள வீடு சுரேஷ் தொடங்கிய  குரூப்பிலும் இணைக்க தொடங்கினேன். (இப்ப நிறைய குரூப்'ஸ் முகநூலில்).

ஆங்..வலைசரத்தில் என்னை முதலில் அறிமுகம் செய்தவர் வீடு சுரேஷ்.

கடந்த ஏப்ரல் 2012 வலைசர ஆசிரியர் பொறுப்பேற்க நண்பர்  தமிழ்வாசி பிரகாஷ் அதை தொடர்ந்து   ஜூன் 2012 ஐய்யா சீனா அவர்களும்  அழைத்தார்கள்  நேரமின்மையை ஆசிரியர் பொறுப்பை ஏற்க இயலவில்லை.

தொடும் வரைதான் இமயம் தொட்டு விட்டால் இதயம் (எப்பவோ கிறுக்கியது 9ம் வகுப்பு என நினைவு) இந்த  இடத்துக்கு  பொருந்தும்.... வலை ஆசிரியர் பொறுப்பு வகிப்பதுக்காக சொல்றேன். ம். பாப்போம்

கடந்த ஜூன் 2012  கோவை பதிவர்கள் சந்திப்பு இன்னும் ஏராளமான நட்பு,
நட்பு வட்டம் பெரிதாகியது. மகிழ்ச்சியா இருக்கு. எனது வலைப்பூவில் தெரிஞ்சவங்க  வரிசை நாளுக்கு நாள்  நீளுகிறது மனசுக்கு இதமாக இருக்கு. 

தனிமையில் துவண்ட என்னை, தனிமையையும் இனிமையாக்கியது  பதிவுலக தமிழ் சொந்தங்களே.   

பதிவுலகில் இதுவரையில்:

நேரில் அறிமுகம் ஆனவர்கள், தொலைபேசி தொடர்பில் உள்ளவர்கள்,
மின்னஞ்சல் தொடர்பில் உள்ளவர்கள், சாட்டிங்  தொடர்பில் உள்ளவர்கள்,
(உங்களையெல்லாம்  தனித்தனியா உங்களின் வலைப்பூவுடன் சொல்லணும் ஆச, எண்ணம் ஆனா ராசா முடியலப்பா மன்னிச்.) மற்றும் பதிவின் மூலம் தொடர்பில் உள்ளவர்கள் ஆக எல்லோருக்கும்

கோடான கோடி நன்றிகள். 


டிஸ்கி: ஹா ஹா ஹா நோ விஸ்கி ,நோ பிராந்தி , நோ ரம்
               அடுத்த பதிவில் காக்டெயில் தான் கலக்கிடுவோம்ல.

   

26 comments:

  1. தூள் ... வித்தியாசமாக யோசிப்பதில் முத்திரிரை பதிக்கின்றீர்கள் சகோ. ஆனால் ப்ளாஷ் பக் ஒரு படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சியை நினைவுக்கூர்கிறது. அது என்ன படம்..ம்ம்ம்.. :))

    ReplyDelete
  2. ஹாஹா....வாழ்த்துக்கள்யா மாப்ளே....உம்ம பணி தொடரட்டும்யா...

    ReplyDelete
  3. அன்பின் முத்தரசு

    ஓராண்டு சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன.

    பதிவுகள் - 300

    மனசாட்சியை விரும்புபவர்கள் - 112

    மறுமொழிகள் - 2957

    ப்ரோபைல் வியூஸ் - 7132

    பேஜ் வீயூஸ் - 29298......

    தனிமையை இனிமையாக்கிய தமிழ் உறவுகள் : 156

    இத்தனை சாதனைகளுக்காகப் பாராட்டும் வேளையில் - இரண்டாமாண்டில் அடி எடுத்து வைக்கும் முத்தரசினிற்கு நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

    இத்தனை சாதானைகள் செய்தும் தமிழ் மண நட்சத்திரமாகவோ - வலைச்சர ஆசிரியராகவோ ஜொலிக்காதது சற்றே வருத்தத்தினைத் தருகிறது.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா
    98406 24293


    ReplyDelete
  4. எலேய் கோவை முத்தரசு நீர்தானா? சொல்லவே இல்லை...!

    ReplyDelete
  5. அன்பின் முத்தரசு

    மனசில பட்டதை .... பட்டுன்னு சொல்லிட்டேன் பாத்தீங்களா .....

    நல்வாழ்த்துகள் முத்தரசு
    நட்புடன் சீனா

    ReplyDelete
  6. மனமார்ந்த வாழ்த்துகள் மக்கா...!

    ReplyDelete
  7. அன்பான மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. முத்தரசு என்னு பெயர மாத்திட்டு ஒரே முத்தமாத்தான் கேக்குறீங்களே பாஸூ.....
    இந்தாங்க முத்தன் எடுத்துக்கோங்க...கிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ஹப்பி ப்ளாக் டேய்..
    வாழ்த்துக்கள் பாஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் வோய்...

    ஒரு நா நீனும் சென்ட்ரல் ஜெயிலு வந்திடு...

    சந்திப்போம்...

    ReplyDelete
  10. மனசாட்சி முத்தரசுவின் மகிழ்விக்கும் பணி தொடரட்டும்...

    ReplyDelete
  11. //ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையில் ஒரு பாப்பா

    முத்து முத்து பாப்பா
    முத்தம் ஒண்ணு கேப்பா
    முத்து முத்து பாப்பா
    முத்தம் ஒண்ணு கேப்பா.........//

    இது என்ன மாம்ஸ் பால்வாடி ரைம்ஸ் மாதிரி :-))))))

    சூப்பரப்பு

    ஒருவருசம் பலவருசம் ஆகி

    முந்நூறு மூவாயிரமாயி

    தமிழ்சரம் நட்சத்திரமாக ஜொலிக்க

    கோட்டானு கோட்டி வாழ்த்துக்கள் மாம்ஸ்

    பக்கார்டி வேணாம் மாம்ஸ் நல்லாயில்ல :-))))))))))

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் அண்ணே.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வாழ்த்துகள் முத்தரசு. இன்னமும் பல மடங்கு (நல்ல) பதிவுகள் வெளியிட வாழ்த்துகள்

    ReplyDelete
  14. வாழ்த்துக்ககள் “மனசாட்சி“ முத்தரசு.
    தொடருங்கள்.... நாங்களும் தொடருகிறோம்.
    வாழ்க.

    ReplyDelete
  15. ஒரு வருடத்தில் முன்னூறு
    பெரிய சாதனைதான் போங்க
    அசத்துங்க
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழரே

    ReplyDelete
  16. அடேடே........ மனசாட்சியாரே......... வாழ்த்துகள் வாழ்த்துகள்..... தொடர்ந்து கலக்குங்க.....!

    ReplyDelete
  17. 1 வருடம்! பெரிய சாதனைகள்! வாழ்த்துக்கள்! சீக்கிறமே வலைச்சரத்திலும் தமிழ்மனத்திலும் ஒளிவிட மற்றும் முதலாம் ஆண்டைவிட 2ஆம் ஆண்டு இன்னும் இன்னும் சாதிக்கவும் வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  18. வாழ்த்துகள் தல.. தொடர்ந்து கலக்குங்கள்

    ReplyDelete
  19. வாழ்த்துக்ககள் “மனசாட்சி“ முத்தரசு. சீக்கிரம் உங்கள் சித்தப்பு மாதிரி 1000 தாண்டிவிட வாழ்த்துக்கள்...தொடருங்கள்.... நாங்களும் தொடருகிறோம். உங்களுக்கு மிக பொருமை அதிகம் சார்.. அதுதான் நீங்க ப்ளோ பண்னுவர்களின் லிஸ்டை போட்டதும் இல்லாமல் அதில் அதற்கான லிங்கையும் கொடுத்த உங்கள் முயற்சியை மிகவும் பாராட்டுகிறேன். அதை செய்வது எவ்வள்வு கடினம் என்பது புரிந்தால் உங்களுக்கு ஒரு எக்ஸ்ட்டார சல்யூட் வாழ்க வளமுடன் முத்தரசு

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் அண்ணே ! எல்லோரையும் ஒரு முறை மறுபடியும் நினைத்து பார்த்தமைக்கு நன்றி ! நீண்ட நட்பு வரிசையில் நானும் உள்ளேன் .சந்தோசம் !

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள். தொடருங்கள்

    ReplyDelete
  22. ஒரு வயசுபுள்ளைக்கு சாரி சாரி ஒரு வயசு புள்ளைக்கு வாழ்த்துக்கள்
    தங்கள் பதிவில் என் வலைப்பூவைப் பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி # ஒரு விளம்பரம் :-)

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete

  24. //ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிOct 18, 2012 10:12:00 AM



    விக்கியுலகம்Oct 18, 2012 10:26:00 AM

    cheena (சீனா)Oct 18, 2012 10:43:00 AM

    MANO நாஞ்சில் மனோOct 18, 2012 10:44:00 AM

    cheena (சீனா)Oct 18, 2012 10:44:00 AM

    MANO நாஞ்சில் மனோOct 18, 2012 10:44:00 AM

    திண்டுக்கல் தனபாலன்Oct 18, 2012 10:59:00 AM

    சி.பி.செந்தில்குமார்Oct 18, 2012 11:09:00 AM

    சிட்டுக்குருவிOct 18, 2012 11:15:00 AM

    வெளங்காதவன்™Oct 18, 2012 11:33:00 AM

    கலாகுமரன்Oct 18, 2012 12:06:00 PM

    இரவு வானம்Oct 18, 2012 12:53:00 PM

    மாலதிOct 18, 2012 12:55:00 PM

    ஹாரி.ROct 18, 2012 2:24:00 PM

    ezhilOct 18, 2012 3:45:00 PM

    அருணா செல்வம்Oct 18, 2012 3:47:00 PM

    செய்தாலிOct 18, 2012 3:57:00 PM

    பன்னிக்குட்டி ராம்சாமிOct 18, 2012 4:51:00 PM

    சுடர்விழிOct 18, 2012 5:27:00 PM

    "என் ராஜபாட்டை"- ராஜாOct 18, 2012 5:53:00 PM

    Avargal UnmaigalOct 19, 2012 2:50:00 AM

    sakthiOct 20, 2012 11:42:00 AM

    கரந்தை ஜெயக்குமார்Oct 20, 2012 6:23:00 PM

    சீனுOct 22, 2012 6:58:00 AM

    s sureshNov 4, 2012 5:00:00 PM//



    அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...