நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, October 18, 2011

உச்சநீதி மன்றத்தில் முன்கூட்டியே வரவழைக்கப்பட்ட காவிரி வழக்கு: ஜெயலலிதா திட்டம்தான் என்ன?

காவிரி நதிநீர் பங்கீடு குறித்த நடுவர் மன்றத்தின் உத்தரவு தொடர்பாக தமிழக அரசால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனு இன்று அவசரம் அவசரமாக விசாரணைக்கு வரவைக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையான காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான இந்த மனுவை ரவீந்திரன், பட்னாயக் மற்றும் கோகலே ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கிறது. இந்த மனு நாளையே விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும் என முன்னதாக தமிழக அரசின் வழக்கறிஞர் வைத்தியநாதன் கேட்டிருந்தார். ‘ஏன் இந்த திடீர் அவசரம்…. என்ன பின்னணி? என்று நீதிபதி ரவீந்திரன் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.
உடனே தமிழக அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன், “இதற்கான அவசர அவசியம் இப்போது வந்திருப்பதாக தமிழக அரசு கருதுவதால் நாளைய விசாரணையில் இந்த வழக்கு பட்டியலிடப்பட வேண்டும், என கூறியதைத் தொடர்ந்து, விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த விசாரணையின் போது தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் திங்களன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், வேளாண் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன், தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, பொதுப்பணிச் செயலர் மற்றும் அதிகாரிகள் பங்கேறே்றனர்.

துரிதப்படுத்துவது ஏன்?

இந்த வழக்கு அக்டோபர் 3 வது வாரத்தில்தான் வரவிருந்தது. ஆனால் ஒரு வாரம் முன்னதாகவே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தியுள்ளது. இந்த அவசரத்தின் பின்னணி குறித்து பலவாறு பேசப்படுகிறது.
இந்த வாரத்தில் (அக்டோபர் 20-ம் தேதி) சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக முதல்வர் ஜெயலலிதா பெங்களூருக்கு போகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் காவிரி விவகாரம் கிளறப்படுவதன் மூலம், பெங்களூரில் அமைதியற்ற சூழல் உருவாகக் கூடும்.
அதைப் பயன்படுத்தி, விசாரணைக்கு போகாமல் ஜெயலலிதா தவிர்த்துவிட வாய்ப்பு கிட்டுமல்லவா… சென்சிடிவ் பிரச்சினையான காவிரி வழக்கு விசாரணையை முன்கூட்டி கொண்டு வர இதுவே முக்கிய காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

என்ன ஒரு வில்லத்தனம்!

2 comments:

  1. வணக்கம்....எனக்கு அரசியல் சுத்தமா வராது ..அப்புறம் என்னோட முதல் கமென்ட் உங்களோட முதல் பதிவிற்கு...
    மென் மேலும் வளர...வாழ்த்துகிறேன்...
    (அப்போ நீங்க யாருன்னே தெரியாது...இப்போ நம்ம மாம்ஸ்...)

    ReplyDelete
  2. அன்பின் முத்தரசு - பலே பலே ! அப்பவும் இதே நிலை தான் - இப்பவும் அதே நிலை தான் - இப்பவும் உடனே உடனே என்று தான் உச்ச நீதி மன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. காவிரி பிரச்னை ஒன்றும் அவ்வளவு எளிதாகத் தீராது. பொறுமை வேண்டும். நல்வாழ்த்துகள் முத்தரசு - நட்புடன் சீனா

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...