நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, March 21, 2012

மன அழுத்தமுடன் புன்னகை கொள்வோம்

பர பரப்பான இன்றைய வாழ்க்கை சூழலில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கவேண்டிய நிர்பந்தம் பலருக்கும் உண்டு. இது தவிர அலுவலகத்திற்கு செல்லும் பெரும்பாலோனோர் போட்டி நிறைந்த சூழலில் பணிபுரிவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் பணமும், இன்றைய ஆடம்பார வாழ்க்கைச் சூழலும் கூட மன அழுத்தத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கின்றன. நமக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை விரட்ட எளிய பயிற்சிகளை உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக்சிஜன் தெரபி

ழமாய் சுவாசிப்பதன் மூலம் மன அழுத்தத்தை விரட்ட முடியும் என்று பல்வேறு நாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. இதனால் தசைகடள தளர்வடைகின்றன. மனமும் இயல்பு நிலையை அடைகின்றன. அடிவயிற்றில் கையை லேசாக வைத்துக்கொள்ளுங்கள். ஆழமாய் சுவாசிக்கவும் அப்பொழுது அடிவயிற்றின் அசைவுகளையும், மனமும், உடலும் லேசாக மாறுவதையும் உணரலாம்.

மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்பு. பற்களை இறுக கடித்தபடி காதுக்கு கீழ் சுட்டுவிரலால் அழுத்தவும். நீளமாக மூச்சை உள்ளிழுத்து அதனை வாய் வழியாக வெளியேற்றவும். மனஅழுத்தத்தின் சுவடுகள் உடலில் தங்காமல் வெளியேறிவிடும்.

இடைவெளி விடுங்கள்

மன அழுத்தம் அதிகமாகுதா? செய்யும் வேலையில் இருந்து சிறிதுநேரம் இடைவெளி விடுங்கள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மரங்கள் அடர்ந்த சோலையில் சில நிமிடங்கள் நடக்கலாம் அல்லது ஓய்வறைக்கு சென்று சிறிது தண்ணீர் அருந்தலாம். இதனால் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்பது அவர்களின் கருத்து.

அழுத்தம் போக்கும் இசை

மன அழுத்தம் போக்குவதில் இசைக்கு முக்கிய பங்கு உண்டு. மன அழுத்தம் காரணமாக அதீத டென்சன் ஏற்படும் போது மனதிற்கு பிடித்த பாடலை ஹெட்போன் மூலம் கேட்கலாம். இதனால் மன அழுத்தம் படிப்படியாக மறைந்து போகும் மனம் அமைதியாகும். எனவே கையோடு ஹெட்போன் வைத்துக்கொள்வது மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பை குறைக்கும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.


கொஞ்சம் புன்னகை

 
கொஞ்சம் புன்னகை? - இந்த அளவுக்கு போதும்.

 இடியே விழுந்தாலும் பதற்றம் வேண்டாம். ஏனென்றால் பதற்றத்தோடு எழுபவன் தோல்வியோடு உட்காருவான் என்ற பழமொழியே உள்ளது. எனவே எதனால் இது நேர்ந்தது என்பதை கொஞ்சம் நிதானமாக யோசித்தாலே பிரச்சினையின் தீர்வு பிடிபடும். அப்புறம் என்ன உங்களுக்கு டென்சன் ஏற்படுத்திய சம்பவத்தை கொஞ்சம் புன்னகையுடன் சமாளியுங்கள். மன அழுத்தம் அழுது கொண்டே ஓடிப்போகும்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

பூவும் புன்னகையும் பூத்து குலுங்கும் ஜிமிக்கியும் புஷ்டியான தேகமும்

மனஅழுத்தம்   கொள்ள வைக்குமடி....உனை காணும் மானிடருக்கு.


18 comments:

  1. பூவும் புன்னகையும் பூத்து குலுங்கும் ஜிமிக்கியும் புஷ்டியான தேகமும்

    மனஅழுத்தம் கொள்ள வைக்குமடி....உனை காணும் மானிடருக்கு.
    >>
    அட அட அடடா கழுத கழுத சாரி கவித கவித

    ReplyDelete
    Replies
    1. முதல் வசவு இல்ல வரவு

      நன்றி நன்றி ரொம்ப புகழ்றீங்க...

      Delete
  2. நல்ல
    தகவல்
    பயனுள்ள பதிவு
    நன்றி தோழரே





    //பூவும்
    புன்னகையும் பூத்து குலுங்கும்
    ஜிமிக்கியும் புஷ்டியான தேகமும்
    மனஅழுத்தம் கொள்ள வைக்குமடி....
    உனை காணும் மானிடருக்கு//

    கவித ம்ம்ம் ....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      படத்தை பார்த்ததும் பட்டுன்னு தோன்றிய சிந்தனையின் வரிகள் அம்புடுதேன்....நன்றி

      Delete
  3. ////பூவும் புன்னகையும் பூத்து குலுங்கும் ஜிமிக்கியும் புஷ்டியான தேகமும்

    மனஅழுத்தம் கொள்ள வைக்குமடி....உனை காணும் மானிடருக்கு.////

    புஷ்டியான பார்த்தும் பயமா வருது!கவித..கவித....

    ReplyDelete
    Replies
    1. படத்தை பார்த்தே பயமா அவ்வ்வ்வ்வ்வ்

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. பூவும் புன்னகையும் பூத்து குலுங்கும் ஜிமிக்கியும் புஷ்டியான தேகமும்

    மனஅழுத்தம் கொள்ள வைக்குமடி....உனை காணும் மானிடருக்கு.//

    அழகை ரசித்தாலும் மன அழுத்தம் குறையும், அப்போ அனுபவித்தால்'ன்னு ஒரு சத்தம் கேக்குது டேய் யாரடா அது அவ்வ்வ்வ்வ்வ்வ்.......

    ReplyDelete
    Replies
    1. எலே...ய் எடுல்..ல அந்த அருவாள....பயபுள்ள, பிச்சி புடுவேன் பிச்சி.

      Delete
  5. ப்ரெசென்ட் அண்ணா ...

    அப்புறம் கமென்ட் போடுறேன் ...

    ReplyDelete
  6. நல்ல பதிவை படித்து முடிக்கும் போது லொள்ளு & ஜொள்ளு பார்த்து பிரஷர் அதிகமாகி போச்சு ஏன்ய்யா இப்படி படத்தை போட்டு என் நல்ல மனதை நோக அடிக்கிறே
    

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

      Delete
  7. கொஞ்சம் புன்னகை படத்தை பார்த்து ஹார்ட்டு பீற் ஜாஸ்தியாயிட்டுதே

    ReplyDelete
  8. மனச்சாட்சி மனதை திறந்து நல்ல விடயங்களாகவே சொல்லுறிங்களே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

      Delete
  9. //பூவும் புன்னகையும் பூத்து குலுங்கும் ஜிமிக்கியும் புஷ்டியான தேகமும்
    மனஅழுத்தம் கொள்ள வைக்குமடி....உனை காணும் மானிடருக்கு.//
    அடடா என்னா வார்த்தையிது அசத்திட்டிங்க தலைவா

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...