நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, February 13, 2012

பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

தமிழ்த் திரையுலகில் டாக்டர் சீனிவாசனின் 'ஆனந்தத் தொல்லை'க்கு அளவே இல்லாமல் போய் வருகிறது.

தயாரித்து, நடித்து, வசனம் பேசி அவர் செய்யும் 'சில்மிஷங்களைப்' பார்த்து தமிழ் திரையுலகமே புளகாங்கிதமடைந்து போய் நிற்கிறது!!.


லத்திகா என்ற படத்தைத் தயாரித்தார். அதில் ஹீரோவாகவும் நடித்தார். இப்போது வில்லனாகவும் ஆனந்தத் தொல்லை படத்தில் அதகளம் செய்ய வருகிறார், தான் எதைப் பேசினாலும் அதை சீரியஸாக கருதிப் பேசும் டாக்டர் சீனிவாசன். இவர் தனக்குத் தானே வைத்துக் கொண்ட பெயர் 'பவர் ஸ்டார்'. (என்ன பவருக்கு ஸ்டார்ன்னு  சொன்னா...?? சொல்லவே இல்லையே... ஹிஹி ஹி ஹி)

பிரபல நடிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர்கள்தான் போட்டா போட்டி போடுவார்கள்.ஆனால் சீனிவாசனோ அதற்கு ஒரு படி மேலே போய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதோடு, விளம்பரமாகவும் பத்திரிகைகளில் பிரசுரித்து  (லேட்டஸ்ட் ட்ரென்ட்..மத்த ஸ்டார்களால் முடியுமா?) கலக்கிக் கொண்டிருக்கிறார்.    


இவர் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி  கொடுத்துள்ளார். அதில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் நம்ப முடியாதது போலத்தான் தோன்றும். ஆனால் அதை நம்புபம்படி (நம்புறோம் வேற வலி) வேண்டி விரும்பிக் கேட்டுக் கொல்கிறோம்.

 படியுங்கள் சீனி..சாரி பவர் ஸ்டார் சொன்னதை...! (ஸ்டார்ட் மியூசிக்....ஹல்....லோ இது வேற)

என்னை பொறுத்தவரை ஏனோ தானோ என்று படம் பண்ண விருப்பம் இல்லை. நல்ல கதை தான் ரொம்ப முக்கியம்.(அப்படி போடு அருவாளை மொத அடியே...ம்)
ஜோடி செம பொருத்தம்

ஆனந்தத் தொல்லைப் படத்தைத் தொடர்ந்து அடுத்து தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் சங்கவி தான் என் ஜோடி. (ச.ங்.க.வி.யா?) படத்தை நானே இயக்கி நடிக்கிறேன்.


இவுக கூடவும் நடிபிங்களா??......நடிக்கணும்.

இதற்கு அடுத்து படைத்தலைவன். இந்தபடம் ஒரு போலீஸ் ஸ்டோரி. மாரி மைந்தன் இப்படத்தை இயக்குகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்க ஆசை உள்ளது. அதை விட ரொம்ப முக்கியம் சங்கவி மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடைத்தால் மன்மத ராசா பாட்டு மாதிரி, என்னாலையும் ஆட முடியும்.(பார்ரா)

சினிமா மட்டும் இல்ல, சொந்தமா பிசினஸ் இருக்கு, கிளினிக் இருக்கு, அதை தவிர எனக்கு கல்லூரி மாணவர்கள் ரசிகர்கள்  அதிகம்.(நோட் திஸ் பாயிண்ட்)


தமிழ் சினிமாவில் நல்ல கதை உள்ள படங்கள் பண்ணி மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்க விரும்புகிறேன். நீங்க தான் அடுத்த எம்.ஜி.ஆரா என்று கேட்காதீங்க. நான் அப்படி சொல்ல வரவில்லை. அவருக்கு அடுத்து நான் தான் வருவேன். (சர்தான்...ம்...ம்மாவுக்கு தெரியுங்களா? # டவுட்டு.) இன்னும் ரசிகைகள் மனதில் (அதானே முக்கியம்) இடம் பிடிப்பேன்.

எனக்கு கூட ஒரு சமயம் பாரதிராஜா சார் படத்தில் நடிக்க வேண்டும் என்று தோணுச்சு, அப்புறம்தான் அவர்கிட்ட போய் வாய்ப்பு கேட்டு நிக்குறது பதிலா நாமலே படம் டைரக்ட் செய்யலாம் (மானஸ்தன்யா...டீ...ல்... பிடிச்சிருக்கு) என்று முடிவு பண்ணி, படம் இயக்க தொடங்கினேன்.

இப்பகூட தினமும் பத்து கதைகள் (10 கதையா...ஆ.....) கேட்கிறேன், ஆனால் எனக்கு செட் ஆனா மட்டும் தான் அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன்...


ஸ்...யப்பா... இப்பவே கண்ணைக் கட்டிக்கிட்டு வருதே...???!!!

9 comments:

 1. நீங்களும் பார் புகழும் பவர் ஸ்டார் வெறியர் மன்றத்தில் இணைந்திருப்பது கண்டு சர்வதேச மற்றும் இந்திய பவர்ஸ்டார் மன்றங்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

  ReplyDelete
  Replies
  1. பன்னியாரே..நன்றி சொல்ல உனக்கு.. வார்த்தை இல்ல எனக்கு...

   Delete
  2. என்னது வார்த்தை இல்லையா? அப்போ மறுக்கா போய் ஸ்கூல்ல படிச்சிட்டு வந்து சொல்லுங்க........

   Delete
  3. ஸ்கூல்னா பள்ளிக்கொடம், அங்க போய் பாடம் படிக்கோனும்.......

   Delete
  4. சரிங்கண்ணா...சொல்றிங்க.. பெரியவா சொன்னா..கேட்டுகோணும்.

   Delete
  5. என்னது பெரியவங்களா? யோவ் ஏன்யா, எனக்கு வயசு என்ன இருநூறா முன்னூறா?

   Delete
  6. அண்ணா ஏன்னா.. ஏன்னா.. நீங்க தாண்ணா சொல்லணும்..எவ்வளவுன்னு???

   Delete
  7. அண்ணா ஏன்னா.. ஏன்னா.. நீங்க தாண்ணா சொல்லணும்..எவ்வளவுன்னு???

   டென்சன் ஆகதிங்கன்னா,, நீங்க கூ..ல்ண்ணா - நா ஸ்...கூல் போறான்னா.

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...