நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, December 21, 2011

'ஆன்லைனில்' குப்பையைக் கொட்டுங்க!





குப்பைகளை கொட்டுவது எங்கே என்று தவித்து வந்த தமிழக மக்களுக்கு நற்செய்தியாக, குப்பைகளை வீட்டிலேயே வந்து வாங்கி செல்ல வசதியாக ஒரு வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. குப்பைகளை வீ்ட்டில் வந்து வசூலிக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை என்பதுதான் இதில் விசேஷம்.

காய்கறி கழிவுகள், பழைய பேப்பர்கள், தேவையற்ற பொருட்கள் என்று வீடுகள், அலுவலகங்கள், கடைகளில் உருவாகும் கழிவுகள் ஏராளம். கழிவுகளை சேகரித்து அவற்றை அப்புறப்படுத்த அரசு பல திட்டங்களை திட்டி அதற்காக பணியாளர்களையும் நியமித்து உள்ளது.

ஆனாலும் குப்பைகள் முழுமையாக நீக்கப்பட்டது என்று கூற முடியவில்லை. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளை சேர்ந்த பல பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் சேகரிக்கப்படுவதில்லை என்று குற்றசாட்டு மக்களிடையே வலுத்து வருகின்றது.

இந்த நிலையில் குப்பைகளை சேகரிப்பதற்காக தனி வெப்சைட் ஒன்று துவக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த ஜெகன், அவரது மனைவி சுஜாதா உள்ளிட்டோர் இந்த வெப்சைட்டை துவக்கி உள்ளனர்.

எம்.சி.ஏ பட்டதாரிகளான ஜெகனும், சுஜாதா துவக்கி உள்ள இந்த வெப்சைட், http://www.kuppathotti.com/. வீ்டுகளில் சேகரமாகும் பழைய பொருட்கள், பால் பாக்கெட் கவர்கள், பழைய செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் கவர்கள், இரும்பு, அலுமனியம் கழிவுகளை உள்ளிட்டவற்றை பெற்று நெல்லையில் உள்ள பல குடோன்களில் சேகரிக்கப்படுகிறது.

இந்த புதிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சுஜாதா செயல்படுகிறார். கடந்த மாதம் 11ம் தேதி துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள், ஒவ்வொரு வீடுகளாக சென்று குப்பை கழிவுகளை சேகரித்து வருகின்றனர். குப்பைகளை தரும் வீட்டினருக்கு ஊக்கத் தொகையையும் அளிக்கின்றனர்.

இது குறி்த்து ஜெகன் கூறியதாவது,

நாங்கள் எந்த காரியத்தையும் புதுமையாகவும், சிறப்பாகவும் செய்ய விரும்புகிறோம். அதற்காக இந்த வெப்சைட் சேவையை துவக்கி உள்ளோம். இந்தியாவில் குவியும் குப்பைகளை அகற்ற தகுந்த நிறுவனம் எதுவும் செயல்படுவதாக தெரியவில்லை. இலவசமாக செய்யும் இந்த சேவைக்கு நாங்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.

எங்களின் கிளைகள் சென்னை அசோக் நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், கே.கே.நகர் பகுதிகளில் செயல்படுகிறது. எங்கள் நிறுவனத்தின் கிளைகளை மேலும் விரிவுப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். http://www.kuppathotti.com/ இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்வது இலவசம். இதுவரை எங்களிடம் 150 பேர் பெயர்களை பதிவு செய்து உள்ளனர், என்றார்.

1 comment:

  1. நல்ல தகவல் தான் ..சாத்தியாம என்று தெரியவில்லை..தகவலுக்கு நன்றி..

    வரவை எதிர்பார்க்கிறேன்..

    செத்தபின்புதான் தெரிந்தது..

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...