நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, December 21, 2011

தமிழ்நாடு சியெம் அதிரடிக்கு காரணம் குஜராத் சியெம்

 
 
சியெம்மின் அதிரடிக்கு காரணம், குஜராத் சியெம் மோடி என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலமாக ஒலிக்க துவங்கியுள்ளது. நம்ம சியெம்முக்கு மருத்துவ உதவிக்காக மோடி அனுப்பிய நர்ஸ், கார்டன்ல நடக்கிற விஷயத்தை மோடி தரப்புக்கு கொண்டு போயிட்டாராம்... இதனால, சியெம்முக்கு மோடி அட்வைஸ் பண்ணினாராம்...


அதுல சுதாரிச்சுக்கிட்டவங்க, எல்லாருக்கும் கல்தா கொடுக்க, வாய்ப்பை எதிர்பார்த்திட்டு இருந்தாராம்... வாய்ப்பு கிடைச்சதுமே கழற்றி விட்டுட்டார்னு கார்டனுக்கு நெருக்கமானவங்க, பேச ஆரம்பிச்சிருக்காங்களாம்... சியெம்மோட அண்ணன் மகள்தான், இப்போ அவருக்கு உதவியா கார்டன்ல தங்கியிருக்காராம்.

இந்த நடவடிக்கையால, அரசு லாயர்ஸ் ஒரு பகுதியினர் ஆடிப்போயி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் சசிகலா ரெகமண்ட்ல வந்தவங்களாம். உயிர் தோழி நீக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் சில வக்கீல்கள் ராஜினாமா செய்யற முடிவுக்குக் கூட வந்துட்டாங்களாம்... கலங்கிப் போனவங்க லிஸ்ட்ல சில அமைச்சர்களும், பல அரசு வக்கீல்களும்தான் முன்னணி இடத்துல இருப்பதாக கூறப்படுகிறது.


முதல்வர் ஜெயலலிதாவை சுத்தி இருந்த மன்னார்குடி கூட்டம் துரத்தப்பட்டதால் இனி அடிக்கடி எந்த மாற்றமும் நடக்காது என்று கட்சிக்காரங்க நம்புறாங்களாம்...’ ‘கட்சி வேலைகளை ஒழுங்கா செய்யலாம்... காங்கிரீட்டான நம்பிக்கையில பொறுப்பை வகிக்கலாம்னு முக்கிய நிர்வாகிகள் பேசிக்கிறாங்களாம்... இந்த அதிரடி நீக்கத்தால ரொம்ப சந்தோசமானது சியெம் குடும்பம்தானாம்...

அப்படி என்றால் தோழி ஆட்சி போயி இன்னும் ஜெ.யின் குடும்ப ஆட்சி ஆரம்பமாக போகுதோ...! இன்னும் தமிழக மக்கள் இதுவரை தெரியாத முதல்வர் ஜெயலலிதாவின் பல உறவுகளை, சொந்தங்களை தெரிந்து கொள்ளலாம்...!! என்ன தவம் செய்தாயோ தமிழா...!!! நீ விலக நினைத்தாலும் உறவுகள்...சொந்தங்கள்...(குடும்ப ஆட்சி) உன்னை விலக மறுக்கிறதே...!!!!

5 comments:

 1. நீ விலக நினைத்தாலும் உறவுகள்...சொந்தங்கள்...(குடும்ப ஆட்சி) உன்னை விலக மறுக்கிறதே...!!!!
  >>>
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 2. நீ விலக நினைத்தாலும் உறவுகள்...சொந்தங்கள்...(குடும்ப ஆட்சி) உன்னை விலக மறுக்கிறதே...!!!!//

  அப்பாடா மன்னார்குடி மாபியா போனது டும் டும் டும் அம்மா குடும்பம் வந்தது டும் டும் டும், ஆக தமிழ்நாட்டுக்கு விமோஷனமில்லை...!!!

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...