நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, November 16, 2011

திமுக எம்.பி. நடிகர் ரிதீஷ் குமார் கைது!

நில அபக‌ரி‌ப்பு வழ‌க்‌கி‌ல் ‌தி.மு.க. நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் நடிக‌ர் ‌ரி‌‌த்‌தீ‌‌ஷை காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.

‌த‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌ல் குறு‌கிய கால‌த்‌தி‌ல் கொடி க‌ட்டி பற‌ந்தவ‌ர் நடிக‌ர் ‌ரி‌த்‌தீ‌ஷ். இவ‌ர் நடி‌த்த நாயக‌ன் எ‌ன்ற பட‌ம் ‌மிக‌ப் பெ‌ரிய வெ‌ற்‌றி பெ‌ற்றது.

இதை‌த் தொட‌ர்‌ந்து ராமநாதபுர‌ம் நாடாளும‌ன்ற தொகு‌தி‌யி‌ல் ‌தி.மு.க. சா‌ர்‌பி‌‌ல் போ‌ட்டி‌யி‌ட்டு வெ‌ற்‌றியு‌‌ம் பெ‌ற்று ‌வி‌ட்டா‌‌ர். எ‌ம்.‌பி. ‌சீ‌ட்டை பல கோடி ரூபா‌ய் கொடு‌த்து வா‌ங்‌கியதாக அ‌ப்போது இவ‌ர் ‌மீது கு‌ற்ற‌ச்சா‌ற்று எழு‌ந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கா‌‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்‌ட‌ம் ஸ்ரீபெ‌ரு‌ம்புதூ‌ர் அருகே 90 ‌செ‌ன்‌ட் ‌நில‌த்தை அபக‌ரி‌த்ததாக நடிக‌ர் ‌‌‌‌ரி‌‌த்‌‌தீ‌ஷ் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்த கா‌ஞ்‌சிபுர‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்தன‌ர்.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட நடிக‌‌ர் ‌‌‌ரி‌த்‌தீ‌ஷ் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜ‌ர்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டு புழ‌ல் ம‌த்‌திய ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இதுவரை ‌தி.மு.க. மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர்களை கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்து வ‌ந்த முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா த‌ற்போது முத‌ன் முறையாக நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினரை கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌‌த்து‌ள்ளா‌ர் எ‌ன்பது ‌‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.

3 comments:

 1. அய்யய்யோ எங்க அண்ணனே கைது பண்ணிட்டாங்களே...அங்க போயி தாவி தாவி அடிப்பாரே ஹிஹி!

  ReplyDelete
 2. ஹா ஹா ஹா இது இரண்டாவதாக சிறைவாசம், தப்பு செய்தவன் பக்கோடா ஸாரி தண்டனை அனுபவிக்கிறான் ஹி ஹி...!!!

  ReplyDelete
 3. அய்யய்யோ எங்க அண்ணனே கைது பண்ணிட்டாங்களே...அங்க போயி தாவி தாவி அடிப்பாரே ஹிஹி!//

  பார்த்துய்யா குஞ்சை [[மைனர்]] சுட்டுரப்போராணுக....!!!

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...