நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, April 18, 2012

பெரியாரின் விடுதலை

     மனசாட்சியின்  250வது  பதிவு:


 


 

 இணைய தளங்களின்  வாயிலாக....., 

அண்மையில்  பெரியாரின் விடுதலையை வாசிக்க நேர்ந்தது..

அதில் இருந்து சில துளிகள்:  

 


 

       தமிழனுக்குத் தலைமை தாங்க யோக்கியதை இல்லை; தமிழன் பொறாமைக்காரன்; தன் இனத்தான் தலைமைப் பதவிக்கு வந்தால் தன் சுயநலத்திற்குக் காலை வாரிவிடவே பார்ப்பான்; அதனால்தான் தமிழ்த் தலைவன் இதுவரை ஏற்படவில்லை." - [பெரியார், 01.07.1954]

 
    "உள்ளபடியே வயிறு எரிந்து பேசுகிறேன் இவ்வளவு நடந்த பிறகும் மானமுள்ள தமிழன் எவனாவது காங்கிரசில் இருப்பானா? சும்மா சுயநலத்துக்கும், புகழுக்கு இருப்பவர்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை. மற்றவர்களைக் கேட்கிறேன்." - [பெரியார், 28.08.1953]

 

 
   இந்த அரசியல் கட்சி என்னும் நோய்க்கு ஆட்படாமல் தப்பித்து உள்ள மனிதர்களே மிக மிகக் குறைவு! எவனை எடுத்துக் கொண்டாலும் நான் அந்தக் கட்சி! நான் இந்தக் கட்சி! வெங்காயம் இப்படித்தான் கூறுவான்! இந்த அரசியல் கட்சிகளால் இந்த நாட்டுக்கு எந்தவித நன்மைகளும் ஏற்படவில்லை என்றாலும் - தீமைதான் மிகுதியாக ஏற்படுகின்றன. - [பெரியார், 'விடுதலை', 22.07.1960]  
      

 

பெண்களுக்கும் ஆண்களைப் போல சரி சமமான உரிமைகள் அத்தனையும் இருக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் சமுதாயம், உலக சமுதாயத்திற்குப் பயன்பெற முடியும். இப்போது பெண்கள், சமுதாயத்திற்கு பயன்படாமல் போய் விட்டார்கள். இது மாறினால் தான் நாடு முன்னேற்ற மடைய முடியும். - பெரியார், ['விடுதலை' 06.12.1968]


 
பெண்ணிற்குத் தான் பத்தினி, பதிவிரதை என்றானே ஒழிய, ஆணிற்குப் பதிவிரதன் - பத்தினன் என்று வரம்பு சொல்லக் கிடையாது. - பெரியார், ['விடுதலை' 06.12.1968]

 

நம் பெண்களுக்குத் தாலி எதற்குப் பயன்படுகிறது? 100-க்கு 90-தாலி அறுப்பதற்குத்தானே! பெண்ணை "முண்டச்சி"யாக்கவும், சகுனத் தடையாக்கவும், ஆண்கள் பெண்களை மிரட்டவும், அடிமைத்தனத்தை நிலைநிறுத்தவும் தான் பயன்படுகின்றன. - பெரியார், ['விடுதலை' 15.11.1968]

 

 
கண்ணகி : "நம் நாட்டிலிருக்கிற கோடிக்கணக்கான பெண்களில் அவள் ஒருத்திதான் பத்தினி என்றால் மற்ற பெண்கள் எல்லாம் யார்? உன் தாய், என் தாய், உன் தங்கை, என் தங்கை, மற்ற பெண்கள் அனைவரும் பத்தினித் தன்மை அற்ற விபசாரிகளா? இதை மக்கள் சிந்திக்க வேண்டும். எதற்காக ஒருத்தியை மட்டும் பத்தினி என்று புகழ வேண்டுமென்று கேட்கிறேன்." - பெரியார், ['விடுதலை' 15.11.1968]

 
நான் கடவுள் மறுப்புக் கூறுவது மனிதனின் அறிவைத் தூய்மைப்படுத்தி அவனது அறிவைக் கொண்டு எதையும் சிந்திக்க வேண்டும். மனிதனின் அறிவிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்கின்ற காரணத்திற்காகவே கூறுகின்றேன். - பெரியார், ['விடுதலை' 15.11.1968]



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

இல்லை.!  மனசாட்சி இடம் தரல....

32 comments:

  1. பெரியார் அன்றையகாலத்தில் தீர்க்கதரிசனத்துடனேயே அனைத்துவிடயங்களையும் அணுகினார். ஆனால் இன்று பெரியார்கோசமிடுபவர்களில் பலரும் வெறுமனே வேறு வேறு நோக்கங்களிற்கு அவரதுபெயரை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனைகலந்த உண்மை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் தீர்க்கதரசி

      வருகைக்கும் அருமையான கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  2. பெரியாரை பற்றி பற்றி நிறைய விடயங்கள் அறிந்ஆதன் சாதி ஒழிக்க பாடுபட்டவர்...அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  3. 250 க்கு வாழ்த்துக்கள்...100 க்கே எனக்கு மூச்சு வாங்குது....

    அவருடன் நிறைய விசயங்களில் எனக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும் அறிவை உபயோகம் செய்த வெகு சில தலைவர்களில் அவரும் ஒருவர் என்பதை மறுக்க முடியாது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

      Delete
  4. 250 க்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. படம் பார்க்க வந்த என்னை ஏமாற்றிவிட்ட உங்களுக்கு எனது கடும் கண்டணங்கள்

    ReplyDelete
    Replies
    1. சரிங் போட்ட்ருவோம் படத்தை.

      Delete
  6. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

      Delete
  7. முதலில் என் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  8. இந்த நட்சத்திரப் பதிவுக்கு பகுத்தறிப் பகலவனைத் தேர்ந்தெடுத்ததற்கு கோடி வணக்கங்கள்...

    ReplyDelete
    Replies
    1. கோடி வணக்கமா! மிக்க நன்றிங்க

      Delete
  9. தமிழகத்தில் ஏன் இந்தியாவிலே பெண் விடுதலைக்காக போராடிய முதல் போராளி அய்யா அவர்கள்.

    ReplyDelete
  10. அய்யாவின் போராட்டங்கள் எல்லாமே பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்தும்,தீண்டாமையை எதிர்த்தும் தான் இருந்தது.அவர் கடவுள் இல்லையென்ற ஆயுதத்தை கையில் எடுத்தது கடைசியில் தான். அதுவும் தீண்டாமை என்னும் பேயின் ஆரம்பமே கோயிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்ற தீர்க்கமான முடிவுக்குப் பின்.அவரின் நோக்கம் கடவுளை எதிர்ப்பதல்ல. அதனால் ஏற்படும் தீமைகளை எதிர்ப்பது.ஆனால் இன்று பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை ஒதுக்கித்தான் நிறைய பேர் பார்க்கிறார்கள்.அய்யாவை பற்றி பேச ஆரம்பித்தால் பேசிக்கிட்டேப் போகலாம்..அருமையானப் பதிவு...வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் ஆழமான உண்மையான் கருத்து

      வருகைக்கும் அருமையான கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  11. மூர்த்தி சிறியது கீர்த்தி பெரியது. அவரின் இந்த சிறிய அறிமுகமே போதுமானது, அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அருமையான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  12. சிறந்த கருத்துகளை தொகுத்து தந்திருக்கிறீர்கள்....படத்தை மெயில்ல அனுப்பிருங்கோ.....

    ReplyDelete
    Replies
    1. நண்பா, அனுப்பினேனே இன்னும் கிடைக்கலையா - ட்ராபிக் ஜாம் ஆகிருக்குமோ

      Delete
  13. சிறப்பான கருத்துக்களை தந்த பதிவு மிகவும் அருமை .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  14. 250 க்கு வாழ்த்துகள்

    நல்ல தொகுப்பு

    ReplyDelete
  15. nanpaa!

    arumaiyaana -
    varalaatru thokuppu!

    paaraattukal!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  16. 250க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. என்னாது லொள்ளு ஜொள்ளுக்கு மனசாட்சி இடம் தரலியா?! நேரம்தான்

    ReplyDelete
  18. 250௦க்கு வாழ்த்துக்கள் நண்பரே !

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...