நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, December 6, 2011

அணு.....அணுவாய்...

அணு.....அணுவாய்...

பவர் உற்பத்திக்கு
மட்டுமல்ல
உயிர் உற்பத்திக்கும்
உத்திரவாதம் தாருங்கள் !

தேச முன்னேற்றத்தில்
மக்கள் நலம் இல்லை
மக்கள் முன்னேற்றத்தில்தான்
தேச நலன் இருக்கிறது !

எங்கள் போராட்டமெல்லாம்
வாழ்க்கைத்தரத்தை
பெருக்கிக்கொள்ள அல்ல -
வாழ்வாதாரத்தை
உறுதிபடுத்திக் கொள்ள...

மனசிலிருந்து அல்ல
உயிரிலிருந்து எழுப்பப்படும்
எங்கள் வினாக்கள் இதுதான்.....

அச்சம் போக்காமல்
ஆலையைத்
தொடங்கலாமா.?

கொடும நோய் தொற்றும்கடும் பயத்தை
விதைக்கலாமா..?

வளர்ந்த நாடுகள் கூட
சாத்தும் கதவுகளை
வலியப்போய் திறக்கலாமா?

காலம் பார்க்காமல்
முத்துக் குளிக்கும் மக்களை
ஆழம் பார்க்கலாமா?

வேருக்கு
வெண்ணிர் ஊற்றுவதுதண்ணீர் ஊற்றுவதுஆகாது..! 

விரதத்தை
முடித்து வைக்க
பழச்சாறு
தராவிட்டாலும்
பாதரசம் தராதீர்கள்..!

மூச்சுப் பிரச்சனையை
வெறும்ஆட்சிப் பிரச்சனையாக மட்டும்பார்க்காதீர்கள்


எழுதியவர் அண்ணா சிங்காரவேலு - அதிராமபட்டினம்  

4 comments:

 1. சமூக சிந்தனையுள்ள , சவுக்கடி கவிதை..

  ReplyDelete
 2. அட்டகாசமான கவிதை.பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 3. வேருக்கு வெந்நீர் ஊற்றுவது தண்ணீர்ஊற்றுவதாகாது!!!

  ReplyDelete
 4. "மூச்சுப் பிரச்சனையை
  வெறும்ஆட்சிப் பிரச்சனையாக மட்டும்பார்க்காதீர்கள்"

  >>>>>

  கடைசி வரிகள் நச்!

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...