நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, October 22, 2011

'மறுமலர்ச்சி' திமுகவுக்கு

மதிமுகவினர் நிச்சயம் இந்தத் தேர்தலை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். காரணம் 3 மாநகரட்சிகளில் அக்கட்சிக்கு எதிர்பாராத அளவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. மேலும் பல இடங்களில் ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.

அனைவராலும் சீந்தப்படாத கட்சியாகவே இந்த தேர்தலை சந்தித்தது மதிமுக. இருந்தாலும் கூட்டணிக்காக யாரிடமும் போய் கெஞ்சாமல், அடிபணியாமல் துணிச்சலுடன் தனியாகவே தேர்தல் களத்திற்கு அனுப்பினார் வைகோ. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. தன்னந்தனியாக, எந்தவித பின்பலமும் இல்லாமல், தமிழ் ஆர்வலர்களையும், மதிமுக கொள்கைப் பிடிப்பாளர்களை மட்டுமே நம்பி நின்ற வைகோவுக்கு சந்தோஷச் செய்தியாக கணிசமான வாக்குகள் இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலி்ல அக்கட்சியின் வேட்பாளர் மிகப் பெரிய அளவில் 23,000க்கும் மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

கோவையில் 11,000க்கும் மேலாகன வாக்குகளையும், திருச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளையும், அக்கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.

மேலும் ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் தேர்தலில் மதிமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தது. கடைசி நேரத்தில் அது சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதுதவிர பல இடங்களில் மதிமுகவுக்கு அவர்களுக்கென்றே இருக்கும் 4000, 5000 வாக்குகள் அப்படியே கிடைத்துள்ளன. இந்த தேர்தலில் மதிமுகதான் தனது வாக்கு நிலை கரையாமல் நிலையாக உள்ளதை நிரூபித்துள்ள ஒரே கட்சி என்று சொல்ல முடியும் அளவுக்கு அதற்கான வாக்குகளை தொடர்ந்து பெற்று வருகிறது.

நிச்சயம் இந்த தேர்தல் மதிமுகவுக்கு நிச்சயம் மறுமலர்ச்சியைக் கொடுத்துள்ள தேர்தல் என்று கூறலாம். நிச்சயம், லோக்சபா தேர்தலில் மதிமுகவை கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதா முன்வருவார் என்பதில் சந்தேகமில்லை.

1 comment:

  1. http://rajamelaiyur.blogspot.com/2011/10/blog-post_22.html

    ""அடிக்கடி கூட்டணிக்கு குரங்கு சின்னம் ஒதுக்கபடும்” =தேர்தல் ஆணையம் # அப்ப பா. ம. க சின்னம் மாறிடுமா?'""

    //குரங்குகளை தவறாக கூறியது எந்த வகையில் ஞாயம் ஹிஹி!//
    //சூப்பர்மா..! எங்கே இன்னொரு தடவ சொல்லு..!!//
    //பின்னி பெடலெடுத்துட்டீங்கப்பு.......//
    //உங்கள் பதிவை படிச்சா சிலருக்கு டவுசர் கழலும் அது மட்டும் உண்மை //
    //குரங்குகளுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு போட்டா போச்சு//
    //குரங்குன்னா அவ்வளவு கேவலமா போச்சா....ராமதாஸ் கட்சி சின்னம்னா அதுங்கல்லாம் தேர்தல் கமிசனை கடிச்சி குதறிடும்..ராமரிடம் தூது போயாவது தடுத்துரும்//
    //ஹா ஹா செம கலக்கல்.. ஆல் ஜோக்ஸ் டைமிங்க்//
    //வயிறு வலிக்குது!பொறுங்க மொதல்ல சிரிப்போம்!!//
    //முதல்ல கட்சி பெயரை "குரங்கு கட்சி"ன்னு பாத்த சொல்லுங்க...//

    பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்கு முடிவு கட்டிவிட்டது. எனவே, இனி "அடிக்கடி கூட்டணி" மாறும் தேவை எதுவும் அக்கட்சிக்கு இல்லை. இந்த தேர்தல் முடிவில் அதிமுக, திமுக தவிர இதர கட்சிகளை மக்கள் "குறிப்பிடத்தக்க அளவில்" கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. எனவே, பாமக'வை மட்டும் தலைப்பிட்டு கேலிசெய்வது எதற்காக?

    குரங்கு கட்சி என்று நீங்களும் பின்னூட்டமிடுவோரும் பாமக'வை அழைப்பதில் உங்களின் மன'விகாரமே' வெளிப்படுகிறது. தண்ணீரை விட இரத்தம் திடமானது என்று சும்மாவா சொன்னார்கள்? ஆதிக்க கூட்டத்தினர் தங்கள் மன அரிப்பை தீர்த்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே இதை நான் பார்க்கிறேன்.

    உங்களுக்கு ஒரு தகவல் - அமெரிக்காவை ஆளும் ஒபாமா கட்சியின் சின்னம் கழுதை.

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...