நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Tuesday, April 9, 2013

பதினெட்டு வயது இளம் பெண்

வணக்கம்



டேய், ஏங் கேர்ள் பிரெண்டுக்கு பிறந்தநாள் வருது,  ஒரு பரிசு கொடுக்கணும் என்ன மாதிரி பரிசுன்னு தெரியல அவளுக்கு பிடிச்ச மாதிரியாவும் இருக்கணும் ஒரு ஐடியா சொல்லேன்


அவளுக்கு உன்னை பிடிக்குமா?

ஆமாம்...

அப்படின்னா நீ எதைவேனுமினாலும் வாங்கி கொடு.




பதினெட்டு வயது இளம் பெண்

அவளது தாய் சொல்கிறாள் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பிராத்தனை செய்தால் உன் கனவில் தேவதை வரும் உனக்கு மூன்று வரம் தரும் என்று, இதை புரிந்து உள்வாங்கி கொண்ட பெண் அதை நடைமுறை படுத்த தயாராகிறாள்

தினமும் தொடந்த பிராத்தனை நான்கு ஆண்டுகள் இடைவெளி இல்லாமல் பூர்த்தி செய்கிறாள்


அதற்கான தருணம்  வந்தது, மனதெல்லாம் பூரிப்புடன் சீக்கிரமாகவே படுக்கைக்கு சென்றால் அந்த பதினெட்டு வயது இளம் பெண் உண்மையிலேயே கனவில் தேவதை வந்தது

இப்ப இருவருக்கும் நடந்த உரையாடல்:

 
தேவதை:  பெண்ணே, கடந்த நான்கு ஆண்டுகளாக தொடந்து விடாமல் என்னை பிராத்தனை செய்தாய் மிக்க மகிழ்ச்சி


நான் உனக்கு மூன்று வரம் தருகிறேன்... கேள் உன் விருப்பபடி என்ன வேனுமினாலும்  ஆனா ஒரு நிபந்தனை

பெண் : நிபந்தனையா?!.... என்ன அது.


தேவதை:  உனக்கு பாய்பிரண்டு இருக்கா?

பெண் : ஆமா


தேவதை: பெண்ணே நீ பிராத்தனை செய்யும் பொது அவன் உனக்காக காத்திருந்தான் நேரத்தை தியாகம் செய்துள்ளான்..... 
ஆகையால்..... அதே நேரத்தில் அவனுக்கு இந்த மாதிரி வரம் பத்தி எதுவும் தெரியாது இருந்தாலும் நீ என்னவெல்லாம்  வரமாக  கேட்பாயோ உன்னில்  இருந்து பத்து மடங்கு அவனுக்கும்  போய்  சேரும் இதை நீ ஏற்றுகொண்டால் உன்னுடைய முதல் வரத்தை நீ கேட்கலாம்



பெண் : ( சிறிது நேர சிந்தனைக்கு பின்) சரி தேவதை ஒப்பு கொள்கிறேன்


பெண் : முதல் வரமாக என்னை இவ் உலகத்திலே உள்ள பணக்காரர்களை விட பத்து மடங்கு  பணக்காரியாக ஆக்கவும் 

தேவதை: ஆனா, உன் காதலன் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனாக ....

பெண் :பரவாயில்ல


தேவதை: சரி உன் விருப்பபடியே

பெண் : இரண்டாவது இவ் உலகிலேயே உள்ள அழகியை விட நூறு மடங்கு அழகியாகனும்   


தேவதை: ஆனா , உன் காதலன் உன்னை விட பத்து மடங்கு அழகான பையனாகி விடுவானே

பெண் : பரவாயில்ல


தேவதை: சரி உன் விருப்பபடியே



தேவதை: இப்ப கடைசியான வரம்.... கேள்

பெண் : தேவதையே எனக்கு மிதமான  இதய வலியை கொடு 

தேவதை: என்ன  உண்மையாகவேவா 

பெண் : ஆமாம் உண்மையாகவே

 தேவதை: சரி உன் விருப்பபடியே...

சிந்திக்கவும்

பாத்திங்களா....அந்த பையனின் நிலைமையோ பாவம் இதயவலி வந்து பரிதாபமாக.......................

ஆனா 

பதினெட்டு வயது இளம் பெண்ணோ 
மிதமான  இதயவலியுடன் பிழைத்துக்கொண்டாள் ஆக அவள் தான் உலகிலேயே அழகியும் பணக்காரியுமாக...


இக் கதையில் இருந்து தெரிந்து கொள்வது என்னான்னா

பெண்கள் புத்திசாலிகள் ஆண்களை விட மிகவும் தெளிவான புத்திசாலிகள் பசங்களே உஷார்


இதுக்கு மேல பெண்கள் படிக்க வேண்டாம்


ஆண்கள் மட்டும் தொடரவும்










நண்பர்களே கவலைபடாதீர்கள் நீங்க நினைத்தமாதிரி எதுவும் நடக்கல 

உண்மையிலே என்ன நடந்ததுன்னா


அந்த பெண்ணின் காதலனுக்கு மிதமான இதயவலி பத்து முறை  வந்தது ஆகையால் அந்த பெண்ணை விட பத்து மடங்கு காலம் உலகிலேயே ஆண் அழகனாகவும்  பணக்காரனாகவும் வாழ்ந்தான்.



இக் கதை மூலம், ஆக கவலைபடவேண்டாம் உங்களை விட உங்க கேர்ள் பிரெண்ட் புத்திசாலி.................
ஹலோ அதான் நான் அங்கேயே சொன்னேன்ல பெண்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்று (அவ்வ்வ்வ்வ்)





மனைவியை சமாளிப்பது எப்புடி?

அப்படின்னு கூகுளே தேடினாலும், தேடிய விடை அப்புடிதேன் வருது

நல்வரவு, நாங்களும் அதை தான் தேடுகிறோம்

எப்புடி ஹி ஹி ஹி ஹி ......வர்ர்ர்ட்டா

Sunday, August 12, 2012

உங்களுக்கு தெரியுமா அஞ்சலி

வணக்கம்

இந்த பதிவுக்கான  செய்தி சேகரித்து எழுதி சில மாதங்களாகவே
டிராப்டில் இருந்தது இன்று நண்பர் மணிமாறன் (மனதில் உறுதி வேண்டும்)
அவர்களின் பதிவு வாசித்தேன,மிகவும் வேதனையாக இருந்தது மனமோ பாரமானது.

உங்களுக்கு தெரியுமா??

10% மென்பொருள் தொழில்துறையில் உள்ளவர்களுக்கு
மணிக்கட்டு, வெப்ப நோய்த்தாக்கம் போன்ற  நோய்கள் பாதிக்க பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

20% மென்பொருள் தொழில்துறையில் உள்ளவர்கள்  அவர்களது துறையை சார்ந்தவர்களேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்/விரும்புகிறார்கள். 

30% மென்பொருள் தொழில் நிபுணர்கள்  இருபாலரும் அலுவலகம் மற்றும் வீட்டு  பொறுப்பை வெறுக்கிறேன்.

40% மென்பொருள் தொழில்துறை சார்ந்தவர்கள்  இந்தியா அல்லது வெளிநாடு எங்கு செட்டில் ஆவது என்ற குழப்பத்திலேயே வாழ்கிறார்
கள் 

50% மென்பொருள் நிபுணர்கள் தங்களின் வங்கி கணக்கில் எந்த சேமிப்பும் இல்லை.

60% மென்பொருள் தொழில் நிபுணர்கள்  அவர்கள் பெரும்  தற்போதைய ஊதியங்கள் திருப்தி இல்லை

70% மென்பொருள் தொழில்துறை சார்ந்தவர்கள்  உலகம் முழுவதும்  8 மணி நேரத்துக்கும் மேலேயே வேலை செய்கிறார்கள்

80% மென்பொருள் தொழில்துறை சார்ந்தோர்கள் பெற்றோர்கள் விட்டு விலகி வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்


90% மென்பொருள் தொழிலில்  அவர்களின் வாழ்க்கை கட்டமைப்பில் - காலக்கெடுக்கள்,  திருப்தி, ஊக்க தொகை, பதவி உயர்வுகள், சம்பள உயர்வு, ஆன்சைட் பயணங்கள், மனைவி, குழந்தைகள், விசா  மற்றும் கடமைகள் பற்றி மகிழ்ச்சியாக இல்லை.

100% மென்பொருள் தொழில்துறை சார்ந்தவர்கள் வாழ்நாளில் ஒரு நாளாவது குறைந்தது ஒரு முறையாவது கணினியை விடுத்து வேறு ஏதாவது செய்யனும் விருப்பம் / மற்றும் நினைகிறார்கள்  



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு 
அஞ்சலி! மச்சி........ அஞ்சலி மச்சி......... அய்யோ! அஞ்சலி! மச்சி!

ஷ்.........யபா முடியல

Monday, August 6, 2012

திருட்டு முழியிலும் திர்ல் இருக்கு

வணக்கம்


யாரோ ஒருவர் கேட்டார் ஒரு பெண்ணிடம்:

நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா அல்லது வீட்டில் இருக்கும் மனைவியா?


அந்த பெண் பதிலளித்தார்:

மனைவி - ஆமாம்,   24 மணிநேரம்  வீட்டில் முழு நேரம் வேலை செய்பவள்.



நான் ஒரு அம்மா ,ஒரு மனைவி, மகள் மற்றும் மருமகள்.

நான் ஒரு அலாரம் வைத்த கடிகாரம் தான்

ஒரு சமையல்காரி

வேலைக்காரி

ஒரு ஆசிரியர்

ஒரு பணியாளராக

ஒரு ஆயா

ஒரு நர்ஸ்

ஒரு பாதுகாப்பு அதிகாரி

ஒரு ஆலோசகரும்

ஒரு இன்ப நலம் பேணுபவர்

எனக்கு   விடுமுறை இல்லை

மருத்துவ விடுமுறையோ  அல்லது பாதி நாட்கள் வேலை அப்படி  எதுவும் இல்லை......

முழுவதும் வேலை வேலை மற்றும் இரவு பகல்  இல்லாமல், சொற்சொடர் தான் நான் வாங்கும் சம்பளம்..

நீங்கள் வீட்டில் எல்லா நாளும் என்ன பண்ணுவீர்கள் என இனி எவரேனும் கேட்டால்........................??       கேட்பாங்க...

எல்லா அம்மாக்களும், மகள்/மருமகளுக்கும் , சகோதரிககளுக்கும்
இது சமர்ப்பணம்.



மனபிராந்தி : காத்துவாகில & காதுல

வரலாற்று உண்மை,  உள்நாட்டு போர்கள் நடந்த போது,

அனைவரும் வாசித்து தெரிந்துக்கொள்ள, படைகள் எந்த சேதம் இல்லாமல் திரும்பி வந்தது என எழுதி வைப்பார்கள். 
 
O பேர் பலி (O கொல்லப்பட்டார்கள்), அதாவது O Killed இங்கிருந்து நாம் OK  என்ற சொல்லை பயன் படுத்த ஆரம்பித்தோம்.

அதாவது ஆல் இஸ் வெல்


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

                             திருட்டு முழியிலும் திர்ல் இருக்கத்தான் செய்து...

தூக்கமோ  கண்ணுக்கு எட்டா தொலைவு ... 



முக்கிய குறிப்பு: 

Wednesday, August 1, 2012

என் இதயம் என்ன சீனா தயாரிப்பா?

வணக்கம்


யாரு யாரை பிடிச்சிருக்காங்க


தற்கொலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்


கேர்ள் பிரண்டு போய்ட்டா...என் இதயம் ஓடைஞ்சிடுமா.. 

ஹே.. என் இதயம் என்ன சீனா தயாரிப்பா?

அப்பா சொல்லி இருக்கார் - பெண்களை நம்பாதேன்னு


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

உதடுகளால் செய்ய முடிந்த  இரண்டாவது 
சிறப்பு மிக்க  விஷயம் புன்னகை


விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு

கோடம்பாக்கமே திரண்டு  காலண்டர்  தயாரிப்பில் அதுவும் கவர்ச்சியான காலண்டர்  தயாரிப்பில் ஈடுபட்டது...  நம்ப முடிகிறதா?

சினிமா கிரிக்கெட்டுக்காக....அமலா பால், சமீராரெட்டி, ஸ்ரேயா, பிரியாமணி, ரிச்சா, சார்மி, பாவனா போன்ற தமிழ்சினிமாவில் ஜொலிக்கும் கனவுக் கன்னிகளின் போட்டோ சூட்டிங் காட்சிகளை நீங்களும் பாருங்கோ:


இலியானாவ  பாத்தாலே கடுப்பாகிடும் , குளிச்சிட்டு ஒரு துண்ட கட்டிட்டு  படுத்திற பாடு இருக்கே:


முக்கிய குறிப்பு:

Sunday, April 22, 2012

பெண்களின் சித்திரம்

அழகான  கவர்ச்சியான பெண்களை  முட்டைகோஸ்  மூலம் அற்புதமான படைத்துள்ளார்  சித்திரமாக, சீனாவை சேர்ந்த  கலைஞர் யூ டௌசி.

படைப்புகளில் சில:














விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு


ஆண் என்றால் வீரன் என்றும், பெண் என்றால் அன்பு  என்றும் சொல் வழக்கு: 

ஆண் அன்பு  காட்ட தொடங்கினால் எந்த பெண்ணாலும் ஈடுகொடுக்க முடியாது.

பெண் வீரம் காட்ட தொடங்கினால் எந்த ஆணாலும் ஈடுகொடுக்க முடியாது.

ஏன்னா,

ஆண் - வீரம் 40 % அன்பு 60  %

பெண் - வீரம் 60 % அன்பு 40  %