செம போர் என்ன செய்ருத்னே தெர்லபா....
ஆணியா புடுங் .... முடியல அப்படிக்கா பேஜாரு.....அப்பாலிக்க வந்துச்சு பாரு... ஐடியா அதான்
மொழி பெயர்ப்பு:
· கலாய்க்கிறது - கிண்டல் செய்வது
· வூட்டாண்டா - வீட்டிற்கு பக்கத்தில்
· குந்து - உட்கார்
· கன்பீஸ் - குழப்பம்
· டப்பு - பணம்
· கயித - கழுதை
· கம்னாட்டி - கோமாளி
· கஸ்மாலம் - முட்டாள்
· பீலா - பொய் சொல்வது
· டம்மி பீஸ் - ஒப்புக்கு சப்பாணி
· கீது - இருக்கு
· மெரிசிடுவேன் - மிதித்துவிடுவ
· இட்டுன்னு - கூட்டுக்கொண்டு
· அப்பால - அப்புறம்
· கிரஷ்னாயில் - மண்ணெண்ணெய்
· மாலு - கமிசன்
· மட்டை - போதையில் விழுவது
· மஜா - கேளிக்கை
· சொக்கா - சட்டை
· பீட்டர் - பெருமைக்காக ஆங்கிலம் பேசுபவர்
· சல்பேட்டா - மலிவு விலையில் மது
· தொங்குறது - ஒதுங்குதல்
· டபாய்க்குறது - ஏமாற்றுதல்
· அவுல் குடுக்குறது - ஏமாற்றுவது
· பல்பு வுட்டுடான் - இறந்துட்டான்
· பகிலு - இடுப்பு பகுதி
· பேஜார் - அறுவை
· டர், மெர்சல் - பயம்
· டுமீல் - பொய்
· டொச்சு - அழகில்லாத
· அட்டு - சுமாரான
· அப்பீட்டு - வெளியேறுதல்
· எகிறு - வேகமாக ஓடு
· காண்டு - கோபம்
· போங்கு - கள்ளத்தனமாக
· கலீஜ் - அசுத்தம்
· கப்பு - நாற்றம்
· கில்பான்ஸ் - பளபளப்பான ஆள்
· கில்லி - திறமையான ஆள்
· குஜால்ஸ் - கொஞ்சல்
· குஜிலி - இளம்பெண்
· இப்படிக்கா - இந்த வழியாக
· சோமாறி - ஒழுக்கமற்றவன்
· ஜாக வாங்குறது - பின் வாங்குவது
· ஜல்பு - ஜலதோஷம்
· ஜல்சா - சரசம்
· பிகிலு - விசில்
டிஸ்கி : சென்னை தமிழை ஏதோ எனக்கு தெரிந்த வரையில் தமிழில் மொழி பெயர்த்து விட்டேன் (ஏதாவது தவறு இருப்பின் மன்னிச்) இன்னும் வரும்.....(இன்னும் வரும்மா) .ஷ் ....அப்பாட.
விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு
விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு
முழுசா வேணும்னாங்கலேன்னு
முன் பக்கம் பார்த்தேன்
முள்ளா வைத்துள்ளாய் பார்வைக்குள்
முறுக்கேறுதே நாடி நரம்புகள்
முறையாகத்தான் பிடித்துள்ளான் உன் புகைப்படத்தை
மூச்சு திணறிப்போகட்டுமென.
|