நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label குஜிலி. Show all posts
Showing posts with label குஜிலி. Show all posts

Friday, May 18, 2012

சென்னை தமிழ் அகராதி

செம போர் என்ன செய்ருத்னே தெர்லபா....  
ஆணியா  புடுங் .... முடியல அப்படிக்கா பேஜாரு.....அப்பாலிக்க வந்துச்சு பாரு... ஐடியா அதான்

மொழி பெயர்ப்பு:  

· கலாய்க்கிறது - கிண்டல் செய்வது
· வூட்டாண்டா - வீட்டிற்கு பக்கத்தில்
· குந்து - உட்கார்
· கன்பீஸ் - குழப்பம்
· டப்பு - பணம்
· கயித - கழுதை
· கம்னாட்டி - கோமாளி
· கஸ்மாலம் - முட்டாள்
· பீலா - பொய் சொல்வது
· டம்மி பீஸ் - ஒப்புக்கு சப்பாணி
· கீது - இருக்கு
· மெரிசிடுவேன் - மிதித்துவிடுவ
· இட்டுன்னு - கூட்டுக்கொண்டு
· அப்பால - அப்புறம்
· கிரஷ்னாயில் - மண்ணெண்ணெய்
· மாலு - கமிசன்
· மட்டை - போதையில் விழுவது
· மஜா - கேளிக்கை
· சொக்கா - சட்டை
· பீட்டர் - பெருமைக்காக ஆங்கிலம் பேசுபவர்
· சல்பேட்டா - மலிவு விலையில் மது
· தொங்குறது - ஒதுங்குதல்
· டபாய்க்குறது - ஏமாற்றுதல்
· அவுல் குடுக்குறது - ஏமாற்றுவது
· பல்பு வுட்டுடான் - இறந்துட்டான்
· பகிலு - இடுப்பு பகுதி
· பேஜார் - அறுவை
· டர், மெர்சல் - பயம்
· டுமீல் - பொய்
· டொச்சு - அழகில்லாத
· அட்டு - சுமாரான
· அப்பீட்டு - வெளியேறுதல்
· எகிறு - வேகமாக ஓடு
· காண்டு - கோபம்
· போங்கு - கள்ளத்தனமாக
· கலீஜ் - அசுத்தம்
· கப்பு - நாற்றம்
· கில்பான்ஸ் - பளபளப்பான ஆள்
· கில்லி - திறமையான ஆள்
· குஜால்ஸ் - கொஞ்சல்
· குஜிலி - இளம்பெண்
· இப்படிக்கா - இந்த வழியாக
· சோமாறி - ஒழுக்கமற்றவன்
· ஜாக வாங்குறது - பின் வாங்குவது
· ஜல்பு - ஜலதோஷம்
· ஜல்சா - சரசம்
· பிகிலு - விசில்



டிஸ்கி : சென்னை தமிழை ஏதோ எனக்கு தெரிந்த வரையில் தமிழில் மொழி பெயர்த்து விட்டேன் (ஏதாவது தவறு இருப்பின் மன்னிச்)  இன்னும் வரும்.....(இன்னும் வரும்மா) .ஷ் ....அப்பாட.



விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு





முழுசா வேணும்னாங்கலேன்னு

முன் பக்கம் பார்த்தேன்

முள்ளா வைத்துள்ளாய்  பார்வைக்குள்

முறுக்கேறுதே  நாடி நரம்புகள்

முறையாகத்தான் பிடித்துள்ளான் உன் புகைப்படத்தை

மூச்சு திணறிப்போகட்டுமென.
 

Saturday, May 12, 2012

உண்மையான காதல் பயம்





ப்ளம்பர்: சார் உங்க பாத்ரூமில் பைப் வேலை முடுச்சிட்டேன் ஆயிரம் ரூபாய்  கொடுங்க

வீட்டுகாரர்: ஏம்பா நான் ஒரு இஞ்சினியர் இந்த அளவுக்கு சம்பாதிக்கலையே....?
ப்ளம்பர்: .ஹி ஹி   நானும் இஞ்சினியர் தான் சார் இஞ்சினியரா  இருந்த வரை சம்பாதிக்கல....



  
காதல் தோல்வி
நம் அன்பு தோல்வியடையும் போது மட்டும் தான்


உண்மையான பயம்
 இருட்டுக்கு பயப்படுவது கிடையாது

 இருட்டுக்குள் என்ன என்று பயப்படுகிறீர்கள்

 உயரத்தை கண்டு பயப்படுவது இல்லை

 உயரத்தில் இருந்து விழுந்து விட்டால் என்று  பயப்படுகிறீர்கள்

 உங்களை சுற்றி உள்ள மக்களை பற்றி  பயம் இல்லை

 நிராகரிப்பு படுவோமோ என்று பயப்படுகிறீர்கள்

 காதலிக்க பயப்படுவது கிடையாது

 நேசிப்பவர் உங்களை நேசிப்பாரா என்ற பயம்

 மீண்டும் முயற்சிக்க பயப்படுவது கிடையாது

மீண்டும் அதே  காரணத்திற்காக காயப்படணுமோ என்று பயப்படுகிறீர்கள்


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


கரு விழிகளும் கலைந்தாடும் கார் கூந்தலும் 
அழகு  வரிசையில்  பால்  பற்களும்
       ச்சே....ச்சை பச்சையாக மஞ்சளும்.... 
கலந்த நிற புடவையில் நித்திரை போக்க வந்தாயோ.



நன்றி படங்கள் கூகிள்