நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Wednesday, July 1, 2015

தொட்டால் தொடரும்

 
ஏம்மா நீங்க ரத்த அழுத்த மாத்திரை நிறுத்திட்டீங்கள
 
அந்த கெரகத்தை நிறுத்தி 4 வருசமாசிப்பா
 
ஏங் கண்ணு கேக்குற...
 
இல்ல நாங், ரத்த அழுத்த மாத்திரை நிறுத்தலாமுன்னு..
 
அந்த கெரகத்த வேணாமுன்னா .. கேக்கமாட்டங்குற...இப்ப ஏங்கண்ணு...திடீருன்னு
 
அது ஒண்ணுமில்லம்மா...ரத்த அழுத்த மாத்திரை எடுத்தது மொத நெஞ்செரிச்சல், மூச்சு இளைப்பு, உடம்பு எடை கூடுது, வயிறு உப்புசம்....
அப்பறம் அதுக்கு வேறு மாத்திரை ஒரே இம்சையா இருக்கு அதாங்.

அதுவும் செரிதேங்
 
நேத்து நெட்ல படிச்சேங்
 
நெட்ல?!
 
ஆமாம்மா இணையதளத்தில் 
 
சேரி சேரி
 
அந்த ரத்த அழுத்த மாத்திரை பக்க விளைவு அப்படின்னு நெஞ்செரிச்சல், மூச்சு இளைப்பு, உடம்பு எடை கூடுதல், வயிறு உப்புசம்......நாளடைவில் க்கல்லீரல் கூட கெட்டுபோகுமாம்.
 
அட கெரகமே
 
அதாங் அந்த கருமத்த தூக்கி வீசிப்புடலாமுன்னு...
 
கல்லீரல் கெட்டுபோச்சின்னு...மருத்துவர் கிட்ட போனா குடிப்பியான்னு கேப்பாங்க ..
 
மருத்துவர்க்கு  கல்லீரல்  கெட்டதுக்கு காரணம் மாத்திரைன்னு தெரியுங்... ஆனா பழிய தூக்கி குடிமேல போட்டுட்டு இவங்க தப்பிச்சுக்குவாங்க.
 
அதுக்காக குடிக்கிக்கு கொடிபுடிக்கலம்மா, எதுவும் அளவோட இருந்த நல்லதுதேங் - மாத்திரை அளவோடுதான் எடுத்துக்குறோம் ஆனா பாருங்க கல்லீரல் பாதிக்கும்றாங்க.
 
இடையில,.. அம்மணி, ஏனுங்க பி பி யை கண்ட்ரோல் பண்ணலாம்  க்யூர் பண்ண முடியாதுங்க - மாத்திரையை   'தொட்டால் தொடரும்' ...ஹாங்.

செரி செல்லம்.
 
 
ஏம்மா...இப்ப ரத்த அழுத்த  மாத்திரைக்கு பதிலா என்ன பண்ணுறீங்க
 
கண்ணு, நெல்லிக்காய் அளவுல இஞ்சி எடுத்து தட்டி சாறு எடுத்து
அதில ரெண்டு சொட்டு எலுமிச்சை சாறு கலந்து...
தல சுத்தற மாதிரி/படபடப்பு தோனுச்சின்னா குடிச்சிடுவேங் அம்ம்புட்டுதேங்...தினம் தயார் பண்ணி வச்சிருக்கேங் என்ர தேவைக்கு.
 
இம்புட்டு தானா..
 
கண்ணு அப்படியே கொஞ்சம் தேன் கலந்துக்கோ
 
ஏம்ம்மா
 
காராமா இருக்கும்பா
 
நாங் என்ன சின்ன பையனா
 
ஹா ஹா எனக்கு எப்பவும் கொழந்தை தானே நீயி
 
வூருக்கே நாட்டாமையானாலும் வூட்டுக்கு புள்ளதானே.
 
ம்ம்.. 
 
ஆம்மா,,.. கண்ணு சின்ன புள்ளைய இருக்கும் பொது இஞ்சி சாறு குடிக்க
எம்புட்டு அழுவே காரம் கண்டு..
 
ம்ம்
 
கண்கண்ட தெய்வம் தாய் - நாங் குடியிருந்த கோவில் அல்லவா... சொன்னா செரியாதாங் இருக்கும் .
 
ஏனுங்க எனக்கும் செரி, உங்கம்மா சொல்றதுக்கும் செரின்னா என்னங்க அர்த்தம்
 
ரெண்டு பெரும் சொல்றது செரிதேங்
 
தலைப்புக்கா உனக்கு செரின்னேன்
 
 
பதிவுக்காக அம்மாவுக்கு செரின்னேன்
 
பதிவுக்குதேங் இந்த பில்டப்பா - ஒங்க பதிவுல  தீய வைக்க.... க்ஹும்.


ஆத்தீ...இந்த வெட்டு வெட்டிட்டு போறா .......
போச்சா இன்னைக்கு ராத்த்ரி போச்சா............

...சாப்பாட்ட சொன்னேங்க.

Monday, August 6, 2012

திருட்டு முழியிலும் திர்ல் இருக்கு

வணக்கம்


யாரோ ஒருவர் கேட்டார் ஒரு பெண்ணிடம்:

நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா அல்லது வீட்டில் இருக்கும் மனைவியா?


அந்த பெண் பதிலளித்தார்:

மனைவி - ஆமாம்,   24 மணிநேரம்  வீட்டில் முழு நேரம் வேலை செய்பவள்.



நான் ஒரு அம்மா ,ஒரு மனைவி, மகள் மற்றும் மருமகள்.

நான் ஒரு அலாரம் வைத்த கடிகாரம் தான்

ஒரு சமையல்காரி

வேலைக்காரி

ஒரு ஆசிரியர்

ஒரு பணியாளராக

ஒரு ஆயா

ஒரு நர்ஸ்

ஒரு பாதுகாப்பு அதிகாரி

ஒரு ஆலோசகரும்

ஒரு இன்ப நலம் பேணுபவர்

எனக்கு   விடுமுறை இல்லை

மருத்துவ விடுமுறையோ  அல்லது பாதி நாட்கள் வேலை அப்படி  எதுவும் இல்லை......

முழுவதும் வேலை வேலை மற்றும் இரவு பகல்  இல்லாமல், சொற்சொடர் தான் நான் வாங்கும் சம்பளம்..

நீங்கள் வீட்டில் எல்லா நாளும் என்ன பண்ணுவீர்கள் என இனி எவரேனும் கேட்டால்........................??       கேட்பாங்க...

எல்லா அம்மாக்களும், மகள்/மருமகளுக்கும் , சகோதரிககளுக்கும்
இது சமர்ப்பணம்.



மனபிராந்தி : காத்துவாகில & காதுல

வரலாற்று உண்மை,  உள்நாட்டு போர்கள் நடந்த போது,

அனைவரும் வாசித்து தெரிந்துக்கொள்ள, படைகள் எந்த சேதம் இல்லாமல் திரும்பி வந்தது என எழுதி வைப்பார்கள். 
 
O பேர் பலி (O கொல்லப்பட்டார்கள்), அதாவது O Killed இங்கிருந்து நாம் OK  என்ற சொல்லை பயன் படுத்த ஆரம்பித்தோம்.

அதாவது ஆல் இஸ் வெல்


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

                             திருட்டு முழியிலும் திர்ல் இருக்கத்தான் செய்து...

தூக்கமோ  கண்ணுக்கு எட்டா தொலைவு ... 



முக்கிய குறிப்பு: 

Tuesday, July 3, 2012

அந்த பதிவுக்கு எதிர் பதிவு அல்ல

வணக்கம்


எலி பிடிப்பது எப்பூடின்னு மாப்ளே ஜீவா (கோவை நேரம்) ஒரு பதிவு போட்டாருங்க எலிய புடிச்சி காக்காவுக்கு போடணுமாம் சின்ன்ன புள்ள தனமாலே இருக்கு,          மாப்ளேயே, எலி வேட்டை ன்னு ஒரு பதிவ தேத்தும் போது  நாங்கெல்லாம்  யாரு  விடுவோமா  தேத்திடோம்ல ஒரு பதிவ ஹி ஹி ஹி.,

எலிய  புடிச்சி பயபுள்ள என்ன பண்ணுது வாங்க பாக்கலாமா:

இதயம் பலகீனம் உள்ளவர்கள்  நேரடியாக,..

மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல பகுதிக்கு செல்லவும்


(வழக்கம் போல் படங்களை பெரிது பண்ணி  பார்க்கவும்)





புடிச்சாச்.....


கிழிச்சாச்

யப்பா... சுத்தம் செய்தாச்

குச்சியில் சொறுகியாச் அதான்  கப்பாப்  கப்பாப்...

சுட்டாச்...... அப்பறமென்ன ஹி ஹி ஹி


இப்பூடி  சுட்டு  மக்காள்,  சைனாக்காரன் சாப்புடுறான்.












மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல


உங்களை நேசிக்கும் ஒருவர் தான் நித்தம் உங்களுடன் சண்டை போடுவார் எந்த காரணமும் இல்லாமலே,..

ஆனால்,

எப்ப எல்லாம் நீங்கள் கவலையுடன் சோர்வுற்று இருப்பிர்களோ

அப்போதெல்லாம் உங்களை நேசிப்பவர் உலகத்துடன் போராடி உங்களின் கவலையை போக்குவார்.

அதுக்கு பெயர் தான் உண்மையான நேசிப்பு



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

எலி பதிவுல என் படமா மனசாட்சியே இது முறையா???

விழியே  விழியே உனக்கிந்த கோபம்

விருந்துக்கு வாரீய்யா எலிக்கறி சாதம் 




டிஸ்கி : விரைவில் உங்கள் மனசாட்சி வெளியீடும் பதிவுகள்  


காமம் காதல்  சிறப்பு பதிவு.

போதை சரக்கு  ஆய்வு பதிவு.