நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

Tuesday, August 26, 2014

அந்த ஏழு இரவுகள்

திங்கள் இரவு
 
 
மனைவி : இன்னைக்கு என்ன குடிச்சிட்டு வந்தீங்களா? 

கணவன் : ஆமான்டா செல்லம் ஆபிஸ்ல வெளிநாட்டு வாடிக்கையாளருடன் சந்திப்பு அப்படியே குடிக்க வேண்டியதா போச்சி


  
செவ்வாய் இரவு
மனைவி: என்ன இன்னைக்கும் குடிச்சிட்டு வர்றீங்களே
 
கணவன் : ஆமான்டா செல்லம் நண்பனுக்கு நிச்சயம் பண்ணியதுக்கு பார்ட்டி கொடுத்தான் அதான் அப்படியே தவிர்க்க முடியல...


 
புதன் இரவு
 

மனைவி: இன்னைக்கும் குடிச்சிட்டு வர்றீங்க
 
கணவன் : ஒரு நண்பனுக்கு டிவேர்ஸ்...மனஉளைச்சல் அவனை ஆசுவாச படுத்தி அப்படியே....

 
 
வியாழன் இரவு
 
மனைவி: இன்னைக்குமா..... இப்ப எந்த நண்பனுக்கு டிவேர்ஸ் ஆச்சு
 
கணவன் : டிவோர்ஸ் இல்லமா...ஆபிஸ்ல வேலை பளு ஒரே டென்சன் அதனால...


 
வெள்ளி இரவு
 

மனைவி : இன்னைக்கு ஏங்..
 
கணவன் : செவ்வாகிழம நண்பனுக்கு நிச்சயம் பண்ணாங்களா இன்னைக்கு அவனுக்கு கல்யாணம்,,, மகிழ்ச்சியில் பார்ட்டில கலந்துகிட்டு குடிச்சி...


 
சனி இரவு
 

மனைவி : ம்ம்ம்...இப்ப
 
கணவன் : பழைய நண்பனை சந்தித்தேன்..என்னை விடாபிடியாக டிஸ்கோவுக்கு அழைத்து சென்று வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க...முடியாமல் குடிச்சி...


 
ஞாயிறு இரவு

மனைவி : சரி இன்னைக்கு என்னாச்சி

கணவன் : என்னடா இது மனுசன்  ஒரு நாளாவது...... எங் இஸ்ட்படி குடிக்க கூடாதா.............ச்சே என்ன மாதிரி சமூகத்துல வாழுறோம் 


&&&


மனைவி : ஏங்க...ஏனுங்க தோட்டத்துல கூடமாட ஒத்தாச பண்ணுங்களேன் ?
 
கணவன் : என்ன நெனச்சுட்டு இருக்கே ஓங் மனசுல நாங் என்ன தோட்டகாரனா..?
 
மனைவி :என்னங்க இந்த கதவுல கைப்பிடி ஒடஞ்சுடுசி மாட்டி கொடுங்களேன்?
 
கணவன் : என்ன நீயீ, என்னைய தச்சுவேலை செய்யரவன் மாதிரியா தெரியுது ஒனக்கு
 
மாலையில் ஊர்சுற்றி விட்டு வீடு திரும்பிய கணவன்....  எல்லாமே சரி செய்யப்பட்டு இருப்பதை கண்டு 
 
கணவன் : ஏய்....என்னாதிது ஆரூ செய்தது இந்த வேலை எல்லாம்
 
மனைவி : பக்கத்து வீட்டுகாரார்....ஆனா பாருங்க ஒரு  கண்டிசன் போட்டாரு
 
முட்ட புரோட்டா அல்லது முத்தம் வேணும்னு கேட்டாரு 
 
கணவன் : ஹா ஹா எனக்கு நிச்சயமா தெரியும் முட்ட புரோட்டா கொடுத்து இருப்பேன்னு
 
மனைவி : என்ன நெனசிகிட்டு இருக்கீக என்னைய பத்தி...நா என்ன புரோட்டா கடையா வச்சிருக்கேன்..
 
கணவன் : ங்..ஞே 
 
 
  

Tuesday, June 24, 2014

ப்பா.....! எ'மது' பலமும் பலவீனமும் ஆளுமையும்...

பத்து கேள்விகள்  எ'மது'  பதில்கள்
 
 
இந்த களத்தில் எம்மை எறக்கிவிட்ட ச்சே கோத்துவிட்ட தோழர் இல்யாஸ்.....வாழ்க வளமுடன்.
 
 
1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்கொண்டாட விரும்புகிறீர்கள்? 
 
எ'மது'  ஆரோக்கியத்தின் மீது கொண்ட நம்பிக்கைக்கு நன்றிகள் - ஒங்களுடன் சேர்ந்து கொண்டாடவே விருப்பம்.
 
 
2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
 
தெனம் தெனம் புதுசு புதுசா கத்துக்கிட்டுதான்  இருக்கேன் - (இந்தா, 10 கேள்வி 10 பதில்கள் புதுசு தானே)
 
 
3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
 
 
மணி நேரத்துக்கு  முன்னாடி - கடந்த 21.9.2013  நீச்சல் குளத்தில் போட்டா எடுத்தது அதை இன்று காண நேர்ந்து அதை பேஸ்புக்குல பதிவு பண்ணுனேன்.
 
 
4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
 
 ஹிக்கும் அப்படி ஒரு நெலமை வராதுங்க 
 
 
5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
 
(எனது மகளுக்கும் - மருமகளுக்கும்) பொறந்த வீட்டு குல  பெருமையை பீத்திக்காம மனதில் நிறுத்தி, புகுந்த வீட்டு குல பெருமையை நிலைநாட்டு - வாழ்க வளமுடன்.
 

 
6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
 
எல்லாப்பிரச்சனையும்.....

 
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
 
சூழ்நிலை, காரண காரியங்களை பொருத்து மாறுபடும்
 

 
8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
 
பரப்புவோரின்  இயலாமை எண்ணி வருந்தும் அதே வேளையில்......,
எம்மை பிரபலபடுத்தும் அந்த நல்லவர்களை மனதார வாழ்த்துவேனுங்க
 
 
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

 
எமது நண்பர்......ம்.,    நண்பருக்கு நண்பர் எமது சொல் மாறுபடும்
 

 
10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
 
சமையல் செய்வேன்

ப்பா.....! எ'மது' பலமும் பலவீனமும் ஆளுமையும் யாமே

Tuesday, April 9, 2013

பதினெட்டு வயது இளம் பெண்

வணக்கம்



டேய், ஏங் கேர்ள் பிரெண்டுக்கு பிறந்தநாள் வருது,  ஒரு பரிசு கொடுக்கணும் என்ன மாதிரி பரிசுன்னு தெரியல அவளுக்கு பிடிச்ச மாதிரியாவும் இருக்கணும் ஒரு ஐடியா சொல்லேன்


அவளுக்கு உன்னை பிடிக்குமா?

ஆமாம்...

அப்படின்னா நீ எதைவேனுமினாலும் வாங்கி கொடு.




பதினெட்டு வயது இளம் பெண்

அவளது தாய் சொல்கிறாள் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பிராத்தனை செய்தால் உன் கனவில் தேவதை வரும் உனக்கு மூன்று வரம் தரும் என்று, இதை புரிந்து உள்வாங்கி கொண்ட பெண் அதை நடைமுறை படுத்த தயாராகிறாள்

தினமும் தொடந்த பிராத்தனை நான்கு ஆண்டுகள் இடைவெளி இல்லாமல் பூர்த்தி செய்கிறாள்


அதற்கான தருணம்  வந்தது, மனதெல்லாம் பூரிப்புடன் சீக்கிரமாகவே படுக்கைக்கு சென்றால் அந்த பதினெட்டு வயது இளம் பெண் உண்மையிலேயே கனவில் தேவதை வந்தது

இப்ப இருவருக்கும் நடந்த உரையாடல்:

 
தேவதை:  பெண்ணே, கடந்த நான்கு ஆண்டுகளாக தொடந்து விடாமல் என்னை பிராத்தனை செய்தாய் மிக்க மகிழ்ச்சி


நான் உனக்கு மூன்று வரம் தருகிறேன்... கேள் உன் விருப்பபடி என்ன வேனுமினாலும்  ஆனா ஒரு நிபந்தனை

பெண் : நிபந்தனையா?!.... என்ன அது.


தேவதை:  உனக்கு பாய்பிரண்டு இருக்கா?

பெண் : ஆமா


தேவதை: பெண்ணே நீ பிராத்தனை செய்யும் பொது அவன் உனக்காக காத்திருந்தான் நேரத்தை தியாகம் செய்துள்ளான்..... 
ஆகையால்..... அதே நேரத்தில் அவனுக்கு இந்த மாதிரி வரம் பத்தி எதுவும் தெரியாது இருந்தாலும் நீ என்னவெல்லாம்  வரமாக  கேட்பாயோ உன்னில்  இருந்து பத்து மடங்கு அவனுக்கும்  போய்  சேரும் இதை நீ ஏற்றுகொண்டால் உன்னுடைய முதல் வரத்தை நீ கேட்கலாம்



பெண் : ( சிறிது நேர சிந்தனைக்கு பின்) சரி தேவதை ஒப்பு கொள்கிறேன்


பெண் : முதல் வரமாக என்னை இவ் உலகத்திலே உள்ள பணக்காரர்களை விட பத்து மடங்கு  பணக்காரியாக ஆக்கவும் 

தேவதை: ஆனா, உன் காதலன் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனாக ....

பெண் :பரவாயில்ல


தேவதை: சரி உன் விருப்பபடியே

பெண் : இரண்டாவது இவ் உலகிலேயே உள்ள அழகியை விட நூறு மடங்கு அழகியாகனும்   


தேவதை: ஆனா , உன் காதலன் உன்னை விட பத்து மடங்கு அழகான பையனாகி விடுவானே

பெண் : பரவாயில்ல


தேவதை: சரி உன் விருப்பபடியே



தேவதை: இப்ப கடைசியான வரம்.... கேள்

பெண் : தேவதையே எனக்கு மிதமான  இதய வலியை கொடு 

தேவதை: என்ன  உண்மையாகவேவா 

பெண் : ஆமாம் உண்மையாகவே

 தேவதை: சரி உன் விருப்பபடியே...

சிந்திக்கவும்

பாத்திங்களா....அந்த பையனின் நிலைமையோ பாவம் இதயவலி வந்து பரிதாபமாக.......................

ஆனா 

பதினெட்டு வயது இளம் பெண்ணோ 
மிதமான  இதயவலியுடன் பிழைத்துக்கொண்டாள் ஆக அவள் தான் உலகிலேயே அழகியும் பணக்காரியுமாக...


இக் கதையில் இருந்து தெரிந்து கொள்வது என்னான்னா

பெண்கள் புத்திசாலிகள் ஆண்களை விட மிகவும் தெளிவான புத்திசாலிகள் பசங்களே உஷார்


இதுக்கு மேல பெண்கள் படிக்க வேண்டாம்


ஆண்கள் மட்டும் தொடரவும்










நண்பர்களே கவலைபடாதீர்கள் நீங்க நினைத்தமாதிரி எதுவும் நடக்கல 

உண்மையிலே என்ன நடந்ததுன்னா


அந்த பெண்ணின் காதலனுக்கு மிதமான இதயவலி பத்து முறை  வந்தது ஆகையால் அந்த பெண்ணை விட பத்து மடங்கு காலம் உலகிலேயே ஆண் அழகனாகவும்  பணக்காரனாகவும் வாழ்ந்தான்.



இக் கதை மூலம், ஆக கவலைபடவேண்டாம் உங்களை விட உங்க கேர்ள் பிரெண்ட் புத்திசாலி.................
ஹலோ அதான் நான் அங்கேயே சொன்னேன்ல பெண்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்று (அவ்வ்வ்வ்வ்)





மனைவியை சமாளிப்பது எப்புடி?

அப்படின்னு கூகுளே தேடினாலும், தேடிய விடை அப்புடிதேன் வருது

நல்வரவு, நாங்களும் அதை தான் தேடுகிறோம்

எப்புடி ஹி ஹி ஹி ஹி ......வர்ர்ர்ட்டா

Monday, March 25, 2013

நடுவுல கொஞ்ச நாளா காணோம்

வணக்கம்


பையன் : உனக்கு ABCD ல A to Z, நல்லா தெரியுமா?

பொண்ணு : ஆமா

பையன் : “ABCDEFGHIJKLMNOPQRSTVWXYZ” இதுல எந்த எழுத்து இல்ல?

பொண்ணு : ம் ம் .........  ".U "

பையன் : கரைக்ட்டு.....எங்கே போச்சி அது?


பொண்ணு : எனக்கு தெரியாது..... ஆமா எங்கே போச்சி..

பையன் : "U" எங்  இதயத்துல இருக்கு


ஹே..... நாங்கெல்லாம் அப்பவே அப்பூடி......இப்படியும் லவ்வ  சொன்னோமுல்ல.



இவள் அண்டை வீட்டு பெண்

இவள் தனியாகத்தான் இருக்கிறாள்

இவள் வீடு இருப்பது எனது வீட்டுக்கு நேர் எதிரே

இவள் வீட்டை  எனது அறையில் இருந்து கொண்டு தெளிவாக பார்க்கலாம்

இவளை  நான் தினமுன் எனது அறையில் இருந்து பார்ப்பேன் வேலைக்கு போகும் போதும் வேலை முடித்து வரும் போதும்..

ஒருநாள்..........

எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவள் என் வீடு நோக்கி வருவதை கண்டு.....

என் வீட்டு கதவை தட்டியதும்....

துள்ளி குதித்து ஓடி கதவை திறேந்தேன்

என்னை நேருக்கு நேராக பார்த்து :- இப்ப தான் வந்தேன் ரொம்ப ஜாலி மூடில் இருக்கேன் இன்று இரவு முழுவதும் சந்தோசமாக இருக்கணும்
இன்று இரவு நீங்க ப்ரீயா?

உடனடியாக சொன்னேன் : ஆமாம் நான் ப்ரீதேன் எந்த வித வேலையும் இல்ல 

அவ சொன்னா : நல்லது மிக்க மகிழ்ச்சி எனது நாயை பார்த்து கொள்ளுங்கள் 


ஹா ஹா ஹா முதுமை....எல்லோருக்கும் வரும். 

தலைப்பு : நடுவுல கொஞ்ச நாளா காணோம்.... அட எங் பதிவ சொன்னேனுங்கோ...

=========================================

இன்று நான் அப்பாவாகிய தினம்

ஆமுங்க.. என்ற மகனுக்கு பொறந்தநாளுங்கோ......

====================================================


வாழ்க்கையில் இந்த நாலு விடயத்தில் முழுமையாக திருப்தி எந்த மனிதனாலும் அடைய முடியாது
1. கைபேசி (மொபைல்)
2. வாகனம் (ஆட்டோமொபைல்)
3. தொலைக்காட்சி பெட்டி (டி வி)
4. மனைவி /கணவன்
ஏன்னா,.... பக்கத்துலையே வேறு நல்ல மாதிரிகள் இருப்பதால்/தெரிவதால்.


Wednesday, August 8, 2012

முந்தானை முடிச்சி

வணக்கம்


   ஒரு நாட்டில்........, மிகவும் குழப்பமான நாள்

தந்தையர் தினம் 

80%  யாருக்கு வாழ்த்து தெரிவிப்பதுன்னு தெரியாது

20%  பயந்து நிலையில்.. யாரேனும் வந்து வாழ்த்தி விடுவார்களோன்னு.



புரிதல் இல்லை என்றால் நாய் கூட குடும்பத்தை சின்னா

 பின்னாமாக்கும்.


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

எல்லோரும், நேசத்தால் காயம்/ரணம்   என்கிறார்கள் 

ஆனால் அது உண்மை இல்லை

தனிமை காயப்படுத்துகிறது

நிராகரிப்பு காயப்படுத்துகிறது

யாரோயோ இழந்தது காயப்படுத்துகிறது

பொறாமை காயப்படுத்துகிறது

எல்லோரும்   இந்த விஷயங்களால்  குழப்பி, பலியோ நேசத்தின் மேல்


ஆனால் உண்மையில்

நேசம் என்ற ஒன்று தான் உலகில் அனைவரையும் எவ்வளவு வலிகளுக்கு இடையுளும் ஓன்று சேர்க்கிறது


( குறிப்பு _ நேசம் = அன்பு ஆனால், இங்கு காதலை  குறிப்பிடவில்லை)


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

சேலையில் பார்த்ததுண்டு பல வகையான முந்தானைகள்...

இப்பதான் பாக்க நேர்ந்தது புது வகையான  முந்தானை

Wednesday, June 27, 2012

பொண்ணுங்க Vs பசங்க முத்தம்

வணக்கம்


இவர் யாருன்னு தெரியுதா???? (மனசாட்சியை மாதிரி மூஞ்சியை மறைச்சிக்கிட்டு.... யாருல அங்க முனுமுனுக்கிறது) ஹி ஹி ஹி முடியல.


 மக்காஸ்,            தலையை ஆட்டி ஆட்டி பாருங்க...கண்ணை சிமிட்டி சிமிட்டி பாருங்க   



தேர்வு அறையில் 7 விஷயங்களை தான் நம்ம  பொண்ணுக, பசங்க  செய்கிறார்கள்:

பொண்ணுங்க      
                                                                      
1 எழுதுவது 
 2 முடியை காதுகளுக்கு பின்னல் எடுத்து விடுவது 
3 மீண்டும் எழுதுவது                                                         
4 பேனாவில் மை இருக்கா சோதனை செய்வது       
5  மீண்டும் எழுதுவது                                                        
6 கூடுதலாக காகிதம் கேட்பது           
7 மீண்டும் எழுதுவது                                            
             
  பசங்க
1 எத்துனை பொண்ணுங்க இருக்காங்க என்று எண்ணுவது
2 பெண் மேற்பார்வையாளரை நோட்டம் விடுவது
3 அறையில் உள்ள ஜன்னல் கதவுகளை எண்ணுவது
4 பேனா எந்த கம்பனி என்று பார்ப்பது
5 அமர்ந்த இடத்தில் மாற்றி அமர்வது
6 மணியை பார்ப்பது எப்படா வெளியில் போவோம்
 7 அடுத்த தேர்விலாவது குறைந்த பட்சம் நல்லா படிக்கோணும் நினைப்பது


திருமணபந்தம் அதிகாரபூர்வமான அனுமதி பெற்ற உண்மையான முத்தம் மத்ததெல்லாம் பித்தம்.  


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

காதல்....,

காதல்ன்னா கூந்தல் மாதிரி..

அள்ளி முடியலாம் பின்னி சடையும் போடலாம்..,

ஹிம்....தலை குளிக்கும் வர.




விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

 வந்'தார(கை)'யும் வாழவைக்கும்   தமிழக
  
சந்தைக்கு வந்த சந்தனக்கட்டையே.


நன்றி படங்கள் கூகிள்

Sunday, April 22, 2012

பெண்களின் சித்திரம்

அழகான  கவர்ச்சியான பெண்களை  முட்டைகோஸ்  மூலம் அற்புதமான படைத்துள்ளார்  சித்திரமாக, சீனாவை சேர்ந்த  கலைஞர் யூ டௌசி.

படைப்புகளில் சில:














விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு


ஆண் என்றால் வீரன் என்றும், பெண் என்றால் அன்பு  என்றும் சொல் வழக்கு: 

ஆண் அன்பு  காட்ட தொடங்கினால் எந்த பெண்ணாலும் ஈடுகொடுக்க முடியாது.

பெண் வீரம் காட்ட தொடங்கினால் எந்த ஆணாலும் ஈடுகொடுக்க முடியாது.

ஏன்னா,

ஆண் - வீரம் 40 % அன்பு 60  %

பெண் - வீரம் 60 % அன்பு 40  %