நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label நேசம். Show all posts
Showing posts with label நேசம். Show all posts

Wednesday, February 6, 2013

ஒக்காந்து ஓசிப்பம்ல

வணக்கம்

இது ஒரு காதல் கதை அல்ல காவியம்.... ஆம், ஓவியம்  

இந்த பதிவில் உள்ள காவியம்  எவர் மனதையும் புண்படுத்த அல்ல...(ஒ... டைட்டில் கார்டு) இந்த பதிவுக்கும், இந்த லவ் பண்ணலாமா  பதிவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல. (எல்லாம் ஒரு மார்க்கமாத்தேன் திரியுராங்களோ) மைண்ட் வாய்ஸ் கேட்குது...

சரியி கதைக்கு ச்சே காவியத்துக்கு போவோமா ....வாங்க  


நா 12ம் வகுப்பு படிச்சேன்

அவளும் 12ம் வகுப்பு படிச்சா

நா பிஎஸ்சி போனேன் 

அவ பிசிஎ போனா

நா எம் எஸ் சி பண்ணும்போது

அவ கல்யாணம் பண்ணா

நா ஜே ஆர் ப் தயாராகும் போது

அவ ஒரு குழந்தைக்கு தாயான

நா பி எச் டி சீட் கிடைக்கும் போது 

அவ இரு கொழந்தைக்கு தாய் ஆனா

நா பி எச் டி பண்ணும் போது

அவ கொழந்த 1ம் வகுப்பு போச்சி

நா டாக்டரேட்  ஆனேன்

அவ கொழந்த 10ம் வகுப்பு பாஸ்சானா

நா ஒரு வேலையில்  சேர்ந்தேன்

அவ பொண்ணு காலேஜ்ல சேர்ந்தா

முக்கியமான விசேசம் என்னான்னா!!

இன்னைக்கு எனக்கு என்கேஜ்மென்ட் 

அவ பொண்ணு என்னோட பியான்சி 

(ஏலேய்...டாக்டரேட் படிப்பே.......அவ்வ்வ்வ்வ்வ்)

(மன்னிக்கணும் ஒரு டாக்டரேட் நிலையில், இடையிடையே ஆங்கிலம் கலந்து)   


என்ன.. காதல் காவியம் இனிமேதேன் ஆரம்பம். கல்யாணம் பண்ணியும் காதல் பண்ணலாம் என்ன புரியுதா...வர்ட்ட்டா 






Wednesday, September 26, 2012

ஏனப்பு, அது ஏன்னு உனக்கு தெரியுமா

வணக்கம்
வாழ்க்கையில் சில சுவராஜ்யமான விடயங்கள்

எதிர்பாரா சமயத்தில் உங்களை பற்றி ஒருவர் இன்னொருவரிடம் நல்லவிதமாக சொன்னதாக கேள்விப்படும் போது

தூக்கத்தில்  இருந்து   விழித்து ஒ.. இன்னும் விடிய நேரமிருக்கா என்று தூங்குவது

முதல் நேசம் கொள்வது 

முதல் முத்தம் கொடுப்பது /பெறுவது 

புதிய நண்பர்கள் பெறுவதும்  மற்றும் பழைய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது.

பாத்ரூமில் பாடுவது

அழகான  கனவுகள் அசைபோடுவது

உச்சி வெயிலில் ஐஸ் கிரீம்  சாப்பிடுவது

குளிர்ந்த அந்த காலை பொழுதில் உங்கள் நேசத்துடன் சேர்ந்து காப்பி பருகுவது

உங்களுக்கு பிடித்தவருடன் கைகோர்த்து நடப்பது

சூரியன் மறைவதை பார்ப்பது 

மனதுக்கு பிடித்தவரின் தோளிலோ /மடியிலோ தலை சாய்ந்து படுப்பது 

நம்மை பிரிந்து ஒரு உள்ளம் ஏங்குது  என தெரியும் போது 

பிறந்த குழந்தையை தடவுவது, முத்தம் கொடுப்பது 

விழும் கண்ணீர் துளி   ஆறுதலுக்கு ஆதரவுக்கோ கட்டி தழுவும் போது. 


இதுல ஒரு நுணுக்கம் எல்லாமே 'து' வில் முடியுது. 
(என்னா ஒரு கண்டுபுடிப்புடா)

(இன்னும் எதாவது இருந்தா சொல்லுங்க இத்துடன் சேர்த்துடுவோம்)




ஸ்டார் பிஷ்க்கு மூளை கிடையாதாம்.


என்னமோ உனக்கு மூளை இருக்குற மாதிரி பில்டப்பை பாரு
  



மைன்ட் வாய்ஸ்  கேக்குதுப்பா கேக்குது




 மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

பூங்காக்களில் பார்க்கலாம் இப்படி ராணுவவீரன் / அரசன்  சுமந்தபடி குதிரை சிலைகளை, அதில் உள்ள நுணுக்கமான ஓன்று:

குதிரை இரண்டு கால்களை தூக்கியவாறு சிலை இருந்தால் சிப்பாய் / அரசன் போரில் இறந்ததாக அர்த்தம்.

குதிரை ஒரு  காலை தூக்கியவாறு சிலை இருந்தால்
சிப்பாய் / அரசன் போரில் காயம் பட்டு சிரமப்பட்டு இறந்தான்

குதிரை நான்கு கால்களின் பாதங்களும் தரையில் ஊன்றி  சிலை இருந்தால் சிப்பாய் / அரசன் இயற்கை மரணம் அடைந்தார்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
 தலைக்கி  குளிச்சி, தலை சீவி  ஜாக்கெட் போட்டு, தாவணியோ சேலையோ கலாச்சாரம்மா உடை அணிந்து, கண்ணுக்கு மை இட்டு, பூ வைச்சி,  பவ்டர் பூசி,
பொட்டும்  வைச்சி, உதட்டுக்கு சாயம் பூசி ,  அலங்காரம் பண்ணி நகை போட்டு நெத்திசூடி அழகு படுத்தி....தேவதை  போல சிங்காரிச்சி.........

கடைசியிலே கொஞ்சூண்டு முன் தலைமுடியை எடுத்து முகத்துல வுட்டுகுறாங்களே...

ஏம்பு அது ஏன்னு உனக்கு  தெரியும்..

அத  தான் சித்தப்பு  பல வருசமா மோட்டு வலய  பாத்து 

ஒசிச்சுட்டு இருக்கேன் ஒரு மண்ணும் புரியல..  

ஏங்.. மாப்ள உங்களுக்காவது தெரியுமா??







Wednesday, August 8, 2012

முந்தானை முடிச்சி

வணக்கம்


   ஒரு நாட்டில்........, மிகவும் குழப்பமான நாள்

தந்தையர் தினம் 

80%  யாருக்கு வாழ்த்து தெரிவிப்பதுன்னு தெரியாது

20%  பயந்து நிலையில்.. யாரேனும் வந்து வாழ்த்தி விடுவார்களோன்னு.



புரிதல் இல்லை என்றால் நாய் கூட குடும்பத்தை சின்னா

 பின்னாமாக்கும்.


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

எல்லோரும், நேசத்தால் காயம்/ரணம்   என்கிறார்கள் 

ஆனால் அது உண்மை இல்லை

தனிமை காயப்படுத்துகிறது

நிராகரிப்பு காயப்படுத்துகிறது

யாரோயோ இழந்தது காயப்படுத்துகிறது

பொறாமை காயப்படுத்துகிறது

எல்லோரும்   இந்த விஷயங்களால்  குழப்பி, பலியோ நேசத்தின் மேல்


ஆனால் உண்மையில்

நேசம் என்ற ஒன்று தான் உலகில் அனைவரையும் எவ்வளவு வலிகளுக்கு இடையுளும் ஓன்று சேர்க்கிறது


( குறிப்பு _ நேசம் = அன்பு ஆனால், இங்கு காதலை  குறிப்பிடவில்லை)


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

சேலையில் பார்த்ததுண்டு பல வகையான முந்தானைகள்...

இப்பதான் பாக்க நேர்ந்தது புது வகையான  முந்தானை