நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label அறியாமை. Show all posts
Showing posts with label அறியாமை. Show all posts

Monday, April 29, 2013

நேற்று இன்று நாளை


வணக்கம்











ஆகையால், யாருக்கெல்லாம் மகன்கள் உள்ளார்களோ அவர்களுக்கு அனுதாபங்களையும் - யாருக்கெல்லாம் மகள்கள் உள்ளார்களோ அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்

Wednesday, February 6, 2013

ஒக்காந்து ஓசிப்பம்ல

வணக்கம்

இது ஒரு காதல் கதை அல்ல காவியம்.... ஆம், ஓவியம்  

இந்த பதிவில் உள்ள காவியம்  எவர் மனதையும் புண்படுத்த அல்ல...(ஒ... டைட்டில் கார்டு) இந்த பதிவுக்கும், இந்த லவ் பண்ணலாமா  பதிவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல. (எல்லாம் ஒரு மார்க்கமாத்தேன் திரியுராங்களோ) மைண்ட் வாய்ஸ் கேட்குது...

சரியி கதைக்கு ச்சே காவியத்துக்கு போவோமா ....வாங்க  


நா 12ம் வகுப்பு படிச்சேன்

அவளும் 12ம் வகுப்பு படிச்சா

நா பிஎஸ்சி போனேன் 

அவ பிசிஎ போனா

நா எம் எஸ் சி பண்ணும்போது

அவ கல்யாணம் பண்ணா

நா ஜே ஆர் ப் தயாராகும் போது

அவ ஒரு குழந்தைக்கு தாயான

நா பி எச் டி சீட் கிடைக்கும் போது 

அவ இரு கொழந்தைக்கு தாய் ஆனா

நா பி எச் டி பண்ணும் போது

அவ கொழந்த 1ம் வகுப்பு போச்சி

நா டாக்டரேட்  ஆனேன்

அவ கொழந்த 10ம் வகுப்பு பாஸ்சானா

நா ஒரு வேலையில்  சேர்ந்தேன்

அவ பொண்ணு காலேஜ்ல சேர்ந்தா

முக்கியமான விசேசம் என்னான்னா!!

இன்னைக்கு எனக்கு என்கேஜ்மென்ட் 

அவ பொண்ணு என்னோட பியான்சி 

(ஏலேய்...டாக்டரேட் படிப்பே.......அவ்வ்வ்வ்வ்வ்)

(மன்னிக்கணும் ஒரு டாக்டரேட் நிலையில், இடையிடையே ஆங்கிலம் கலந்து)   


என்ன.. காதல் காவியம் இனிமேதேன் ஆரம்பம். கல்யாணம் பண்ணியும் காதல் பண்ணலாம் என்ன புரியுதா...வர்ட்ட்டா 






Monday, October 8, 2012

உசுர சுண்டி இழுக்குறா..

வணக்கம்

இம்புட்டு நாளா அப்படி எனக்கு தோனலங்க ஏன்னா, பதிவுகள் மூலமே தொடர்புகள்  இருந்ததால்.

சமீபகாலத்தில் பதிவுலகில் நண்பர்கள் பலருடன் சாட்டிங்/ தொலைபேசி/ மின்னஞ்சல் தொடர்புக்கு பின் பதிவுலக  நண்பர்கள் எனது பெயர் என்ன? உங்களை எப்படி அழைப்பது என்று கேள்வி  கேட்டார்கள்.. அவர்களின் அன்பு அந்த நட்பு என் உசுரை  சுண்டி இழுத்தது. பின்ன இருக்காதா, எல்லோருக்கும் ஒரு பேரு இருக்க...  நானோ     வலைபூவின்  (ப்ளாக்) பேரில்.. அதானே நான் ஏன் என் பெயரை சொல்லாமல்  விட்டேன்... ஙே.

அந்த கேள்விக்கு விடையாக:

நண்பர்களே, சிறு வயது முதல் எனது பெற்றோர் அன்பாக செல்லமாக அழைத்த   முத்தரசு.....ஆம், இனி முதல் பதிவுலக நண்பர்களாலும் அவ்வாறே அழைக்க வேண்டுகிறேன்.  (அப்பாட ஒரு வழியா பேர  சொல்லிடான்டா...எலேய் நல்லா வருவல)

தெரியும் அடுத்து நீங்க என்ன எதிர்பாப்பிங்கன்னு...கேப்பிங்கன்னு......ம்  -எனது போட்டோ? வரும்... நேரம் வரும் போது அதுவும் வரும் -இப்பதானே  பாஸ்  பேர  சொல்லி  இருக்கோம்.

மனசாட்சி என்பது  ப்ளாகின் தலைப்பு -இன்னும்  சில  நாட்களுக்கு  எனது  பின்னூட்டங்கள் அதாங்க  உங்களின் வலைப்பூவில் நான்  இடும்  கருத்துக்களில்  எனது பெயருடன் அதாவது, முத்தரசு (மனசாட்சி) என்று இருக்கும் அப்புறம் முத்தரசு ஆக  இருக்கும்.

தொடர்ந்து உங்களின்  நல்ஆதரவுடன்......

புரிதலுக்கு நன்றி  

நேசமுடன்

கோவை முத்தரசு



ரொம்பவே ஒசந்தவங்க - வாழ்க வளமுடன்
 
வித்தியாசமான நிஜ ஜோடிகள்






வாழ்க பல்லாண்டுகள்



பார்ரா....., இப்பூடி கூட ?? 

இது கூட நல்லாத்தாம்யா இருக்க்கு 

மனபிராந்தி: காத்துவாக்கில & காதுல

நட்புக்கு மரணம் இல்லை

அப்படி இறந்தால்,

அது இயற்கையான மரணம் இல்லை

கொலை செய்யப்பட்டுள்ளது..

மனப்பாங்கு

அறியாமை

நான் என்னும் அகங்காரம்.

இவைகளால்.


விஸ்கி :  லொள்ளு & ஜொள்ளு

அச்சச்சோ அச்சச்சோ  கெளப்புறா கெளப்புறா

பழைய  நெனப்ப  கெளப்புறா

உசுப்புறா உசுப்புறா உசுர  சுண்டி இழுக்குறா

அச்சச்சோ அச்சச்சோ.... 




 நன்றி படங்கள் முகநூல் மற்றும் கூகிள்