நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label கணவர். Show all posts
Showing posts with label கணவர். Show all posts

Tuesday, August 26, 2014

அந்த ஏழு இரவுகள்

திங்கள் இரவு
 
 
மனைவி : இன்னைக்கு என்ன குடிச்சிட்டு வந்தீங்களா? 

கணவன் : ஆமான்டா செல்லம் ஆபிஸ்ல வெளிநாட்டு வாடிக்கையாளருடன் சந்திப்பு அப்படியே குடிக்க வேண்டியதா போச்சி


  
செவ்வாய் இரவு
மனைவி: என்ன இன்னைக்கும் குடிச்சிட்டு வர்றீங்களே
 
கணவன் : ஆமான்டா செல்லம் நண்பனுக்கு நிச்சயம் பண்ணியதுக்கு பார்ட்டி கொடுத்தான் அதான் அப்படியே தவிர்க்க முடியல...


 
புதன் இரவு
 

மனைவி: இன்னைக்கும் குடிச்சிட்டு வர்றீங்க
 
கணவன் : ஒரு நண்பனுக்கு டிவேர்ஸ்...மனஉளைச்சல் அவனை ஆசுவாச படுத்தி அப்படியே....

 
 
வியாழன் இரவு
 
மனைவி: இன்னைக்குமா..... இப்ப எந்த நண்பனுக்கு டிவேர்ஸ் ஆச்சு
 
கணவன் : டிவோர்ஸ் இல்லமா...ஆபிஸ்ல வேலை பளு ஒரே டென்சன் அதனால...


 
வெள்ளி இரவு
 

மனைவி : இன்னைக்கு ஏங்..
 
கணவன் : செவ்வாகிழம நண்பனுக்கு நிச்சயம் பண்ணாங்களா இன்னைக்கு அவனுக்கு கல்யாணம்,,, மகிழ்ச்சியில் பார்ட்டில கலந்துகிட்டு குடிச்சி...


 
சனி இரவு
 

மனைவி : ம்ம்ம்...இப்ப
 
கணவன் : பழைய நண்பனை சந்தித்தேன்..என்னை விடாபிடியாக டிஸ்கோவுக்கு அழைத்து சென்று வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க...முடியாமல் குடிச்சி...


 
ஞாயிறு இரவு

மனைவி : சரி இன்னைக்கு என்னாச்சி

கணவன் : என்னடா இது மனுசன்  ஒரு நாளாவது...... எங் இஸ்ட்படி குடிக்க கூடாதா.............ச்சே என்ன மாதிரி சமூகத்துல வாழுறோம் 


&&&


மனைவி : ஏங்க...ஏனுங்க தோட்டத்துல கூடமாட ஒத்தாச பண்ணுங்களேன் ?
 
கணவன் : என்ன நெனச்சுட்டு இருக்கே ஓங் மனசுல நாங் என்ன தோட்டகாரனா..?
 
மனைவி :என்னங்க இந்த கதவுல கைப்பிடி ஒடஞ்சுடுசி மாட்டி கொடுங்களேன்?
 
கணவன் : என்ன நீயீ, என்னைய தச்சுவேலை செய்யரவன் மாதிரியா தெரியுது ஒனக்கு
 
மாலையில் ஊர்சுற்றி விட்டு வீடு திரும்பிய கணவன்....  எல்லாமே சரி செய்யப்பட்டு இருப்பதை கண்டு 
 
கணவன் : ஏய்....என்னாதிது ஆரூ செய்தது இந்த வேலை எல்லாம்
 
மனைவி : பக்கத்து வீட்டுகாரார்....ஆனா பாருங்க ஒரு  கண்டிசன் போட்டாரு
 
முட்ட புரோட்டா அல்லது முத்தம் வேணும்னு கேட்டாரு 
 
கணவன் : ஹா ஹா எனக்கு நிச்சயமா தெரியும் முட்ட புரோட்டா கொடுத்து இருப்பேன்னு
 
மனைவி : என்ன நெனசிகிட்டு இருக்கீக என்னைய பத்தி...நா என்ன புரோட்டா கடையா வச்சிருக்கேன்..
 
கணவன் : ங்..ஞே 
 
 
  

Monday, August 13, 2012

அவளது பார்வை

வணக்கம்


மனசாட்சியின் பஜ்ஜிகடையில், பஜ்ஜியை (பதிவுகள்)  சுவைத்து    விரும்புவோர்கள்   இதுவரையில் 100..

ஆரம்பித்து வைத்த முதல்வர்   எங்கள்  சித்தப்பு சி.பி.செந்தில் குமார் (அட்ரா சக்க) அவர்களுக்கும், அதை தொடர்ந்து 98 உறுப்பினர்கள்  அனைவருக்கும்   மற்றும் 100 வது உறுப்பினராக  இணைந்த மாணவி சிவரஞ்சனி சதாசிவம் (சிவரஞ்சனி சதாசிவம்) அவர்களுக்கும் கோடி நன்றிகள்.

ஒரு சிறப்பான ஆச்சரியம் என்னவென்றால்....உங்களுக்கே தெரியும் மனசாட்சிக்கு  கோவை தான்  பூர்வீகம்.  மனசாட்சியின் பஜ்ஜியை (பதிவு) விரும்புவோர் வரிசையில் முதல் மற்றும் 100 வது  இருவரும் அதே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் (ஈரோடு)  மிக்க மகிழ்ச்சி.

இது வரை நம்ம கடைக்கு வந்து சுவைத்து சென்றவர்கள் மற்றும் விரும்பி  சுவைத்து கொண்டு இருப்பவர்கள் - காரம், மணம், குணம், உப்பு, குறை, நிறைகளை பின்னூட்டங்களில் கூறி  செம்மை படுத்தும் அனைத்து நட்புகளுக்கும் கோடான கோடி நன்றிகளை மகிழ்ச்சியுடன்  இங்கே பதிவு செய்கிறது  மனசாட்சி.  எல்லாம் உங்கள் வரவாலே... ஆதரவாலே.


பொன்வண்டு:  ஊருக்குள்ள ஒரு வதந்தி தெரியுமா?

தவளை: கொய்யால, அதனால தானே நான் இங்கே வந்து தொங்கிட்டு இருக்கேன்.


எப்போதும் நினைவில் கொள்ளவும்

உங்களை ஒருவர் முட்டாள் ஆக்குகின்றார் எனில்

அவரது முன்னிலையில் சிரித்து விடுங்கள்
  
நிச்சயமாக, நீங்கள்  அவர் இல்லாத போது அழுவீர்கள்

ஏனெனில்,

அந்த முட்டாள்கள் நமது உண்மையான நண்பர்கள்



மனபிராந்தி: காத்துவாக்கில & காதுல  

அவளது பார்வை:

உலகின் மிக சரியான மனிதன் அவளுடைய தந்தை

உலகின் மிக தவறாக பயன்படுத்தபடுபவன் அவளுடைய சகோதரன்

உலகின் மிக அழகான மனிதர் அவளுடைய  மகன்

உலகத்திலேயே அதிர்ஷ்டமான மற்றும் மகிழ்ச்சியான மனிதன் அவளுடைய சகோதரியின்  கணவன்

உலகின் மிக நன்றி உள்ள, நம்பிக்கை உள்ள   மனிதன் அவளுடைய மரூமகன்

ஆனால், உலகின் மோசமான நடத்தை மற்றும்  மிகவும் சுயநலமான, இதயமற்ற, மொத்த இழுபறியா  மனிதன் அவளுடைய  கணவர்.



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

ஆடி மாசத்துல பிரிச்சி வச்சிபுடாங்கலேன்னு

எம்புட்டு சோகம், வருத்தம் பயபுள்ள முஞ்சில

ஏக்கத்துல்ல உர்ருன்னு........... அடி.....ஆத்தி....