நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label புன்னகை. Show all posts
Showing posts with label புன்னகை. Show all posts

Tuesday, August 26, 2014

அந்த ஏழு இரவுகள்

திங்கள் இரவு
 
 
மனைவி : இன்னைக்கு என்ன குடிச்சிட்டு வந்தீங்களா? 

கணவன் : ஆமான்டா செல்லம் ஆபிஸ்ல வெளிநாட்டு வாடிக்கையாளருடன் சந்திப்பு அப்படியே குடிக்க வேண்டியதா போச்சி


  
செவ்வாய் இரவு
மனைவி: என்ன இன்னைக்கும் குடிச்சிட்டு வர்றீங்களே
 
கணவன் : ஆமான்டா செல்லம் நண்பனுக்கு நிச்சயம் பண்ணியதுக்கு பார்ட்டி கொடுத்தான் அதான் அப்படியே தவிர்க்க முடியல...


 
புதன் இரவு
 

மனைவி: இன்னைக்கும் குடிச்சிட்டு வர்றீங்க
 
கணவன் : ஒரு நண்பனுக்கு டிவேர்ஸ்...மனஉளைச்சல் அவனை ஆசுவாச படுத்தி அப்படியே....

 
 
வியாழன் இரவு
 
மனைவி: இன்னைக்குமா..... இப்ப எந்த நண்பனுக்கு டிவேர்ஸ் ஆச்சு
 
கணவன் : டிவோர்ஸ் இல்லமா...ஆபிஸ்ல வேலை பளு ஒரே டென்சன் அதனால...


 
வெள்ளி இரவு
 

மனைவி : இன்னைக்கு ஏங்..
 
கணவன் : செவ்வாகிழம நண்பனுக்கு நிச்சயம் பண்ணாங்களா இன்னைக்கு அவனுக்கு கல்யாணம்,,, மகிழ்ச்சியில் பார்ட்டில கலந்துகிட்டு குடிச்சி...


 
சனி இரவு
 

மனைவி : ம்ம்ம்...இப்ப
 
கணவன் : பழைய நண்பனை சந்தித்தேன்..என்னை விடாபிடியாக டிஸ்கோவுக்கு அழைத்து சென்று வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க...முடியாமல் குடிச்சி...


 
ஞாயிறு இரவு

மனைவி : சரி இன்னைக்கு என்னாச்சி

கணவன் : என்னடா இது மனுசன்  ஒரு நாளாவது...... எங் இஸ்ட்படி குடிக்க கூடாதா.............ச்சே என்ன மாதிரி சமூகத்துல வாழுறோம் 


&&&


மனைவி : ஏங்க...ஏனுங்க தோட்டத்துல கூடமாட ஒத்தாச பண்ணுங்களேன் ?
 
கணவன் : என்ன நெனச்சுட்டு இருக்கே ஓங் மனசுல நாங் என்ன தோட்டகாரனா..?
 
மனைவி :என்னங்க இந்த கதவுல கைப்பிடி ஒடஞ்சுடுசி மாட்டி கொடுங்களேன்?
 
கணவன் : என்ன நீயீ, என்னைய தச்சுவேலை செய்யரவன் மாதிரியா தெரியுது ஒனக்கு
 
மாலையில் ஊர்சுற்றி விட்டு வீடு திரும்பிய கணவன்....  எல்லாமே சரி செய்யப்பட்டு இருப்பதை கண்டு 
 
கணவன் : ஏய்....என்னாதிது ஆரூ செய்தது இந்த வேலை எல்லாம்
 
மனைவி : பக்கத்து வீட்டுகாரார்....ஆனா பாருங்க ஒரு  கண்டிசன் போட்டாரு
 
முட்ட புரோட்டா அல்லது முத்தம் வேணும்னு கேட்டாரு 
 
கணவன் : ஹா ஹா எனக்கு நிச்சயமா தெரியும் முட்ட புரோட்டா கொடுத்து இருப்பேன்னு
 
மனைவி : என்ன நெனசிகிட்டு இருக்கீக என்னைய பத்தி...நா என்ன புரோட்டா கடையா வச்சிருக்கேன்..
 
கணவன் : ங்..ஞே 
 
 
  

Monday, January 28, 2013

தல, இரகசியசந்திப்பு

இன்றைய சுற்றுச்சூழல்



அப்போது ஏழு வயசிருக்கும் எனக்கு. மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றார்கள் என்னை 
அப்பாவும் அம்மாவும். அந்த வளாகத்தை நான் ரசிக்கவில்லை . எந்த மிருகத்தின் முகத்திலும் சிரிப்பில்லை; பறவைகளுக்கு உடல் நலமில்லை. மிருகங்களைப்  பார்க்க வந்த மனிதர்களையெல்லாம் கூண்டிலடைத்து  அவர்களை வேடிக்கை பார்க்க மிருகங்களை திறந்துவிட 
வேண்டுமென்று தோன்றியதெனக்கு   - எமிலி 
(வைரமுத்துவின்....மூன்றாம் உலகப்போர் நூலில்  பக்கம் 61 - 62ல்- நன்றி)




பேசும் படம்

ஒரு தல..... ஈருடல்.........



இரகசியசந்திப்பு இரகசியசந்திப்புன்னு சொல்வாய்ங்க....
அதானா இது



(நகைச்சுவைக்கு மட்டுமே)



மனபிராந்தி: காத்துவாக்குல & காதுல


நீங்கள் விரும்பும்/நேசிக்கும் ஒருவர் உங்களை விரும்பாது/நேசிக்காது  இருப்பது -  விமானநிலையத்தில் கப்பலுக்காக காத்திருப்பது போன்றது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

வாழ்க்கையில் மிக உன்னதமான ஒரு மகிழ்ச்சி என்பது, என்ன பண்ணினாலும்..... சுற்றி உள்ளவர்கள் - உன்னால் செய்ய முடியாது என்று சொல்வதே. 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இரண்டு சிறந்த ஆலோசனைகள்:

அனைத்து விதமான கேள்விகளுக்கும் சிறந்த பதில் மௌனம்

அனைத்து விதமான  சூழ்நிலைகளிலும் சிறந்த எதிர்வினை புன்னகை

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





அறியாமல் நடக்கும் ஒரு சம்பவம்...

அதுல, கழுதை கிராபிக்ஸ்...  டேய் நீ எல்லாம் நல்லா வருவீடா