நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Friday, May 18, 2012

சென்னை தமிழ் அகராதி

செம போர் என்ன செய்ருத்னே தெர்லபா....  
ஆணியா  புடுங் .... முடியல அப்படிக்கா பேஜாரு.....அப்பாலிக்க வந்துச்சு பாரு... ஐடியா அதான்

மொழி பெயர்ப்பு:  

· கலாய்க்கிறது - கிண்டல் செய்வது
· வூட்டாண்டா - வீட்டிற்கு பக்கத்தில்
· குந்து - உட்கார்
· கன்பீஸ் - குழப்பம்
· டப்பு - பணம்
· கயித - கழுதை
· கம்னாட்டி - கோமாளி
· கஸ்மாலம் - முட்டாள்
· பீலா - பொய் சொல்வது
· டம்மி பீஸ் - ஒப்புக்கு சப்பாணி
· கீது - இருக்கு
· மெரிசிடுவேன் - மிதித்துவிடுவ
· இட்டுன்னு - கூட்டுக்கொண்டு
· அப்பால - அப்புறம்
· கிரஷ்னாயில் - மண்ணெண்ணெய்
· மாலு - கமிசன்
· மட்டை - போதையில் விழுவது
· மஜா - கேளிக்கை
· சொக்கா - சட்டை
· பீட்டர் - பெருமைக்காக ஆங்கிலம் பேசுபவர்
· சல்பேட்டா - மலிவு விலையில் மது
· தொங்குறது - ஒதுங்குதல்
· டபாய்க்குறது - ஏமாற்றுதல்
· அவுல் குடுக்குறது - ஏமாற்றுவது
· பல்பு வுட்டுடான் - இறந்துட்டான்
· பகிலு - இடுப்பு பகுதி
· பேஜார் - அறுவை
· டர், மெர்சல் - பயம்
· டுமீல் - பொய்
· டொச்சு - அழகில்லாத
· அட்டு - சுமாரான
· அப்பீட்டு - வெளியேறுதல்
· எகிறு - வேகமாக ஓடு
· காண்டு - கோபம்
· போங்கு - கள்ளத்தனமாக
· கலீஜ் - அசுத்தம்
· கப்பு - நாற்றம்
· கில்பான்ஸ் - பளபளப்பான ஆள்
· கில்லி - திறமையான ஆள்
· குஜால்ஸ் - கொஞ்சல்
· குஜிலி - இளம்பெண்
· இப்படிக்கா - இந்த வழியாக
· சோமாறி - ஒழுக்கமற்றவன்
· ஜாக வாங்குறது - பின் வாங்குவது
· ஜல்பு - ஜலதோஷம்
· ஜல்சா - சரசம்
· பிகிலு - விசில்



டிஸ்கி : சென்னை தமிழை ஏதோ எனக்கு தெரிந்த வரையில் தமிழில் மொழி பெயர்த்து விட்டேன் (ஏதாவது தவறு இருப்பின் மன்னிச்)  இன்னும் வரும்.....(இன்னும் வரும்மா) .ஷ் ....அப்பாட.



விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு





முழுசா வேணும்னாங்கலேன்னு

முன் பக்கம் பார்த்தேன்

முள்ளா வைத்துள்ளாய்  பார்வைக்குள்

முறுக்கேறுதே  நாடி நரம்புகள்

முறையாகத்தான் பிடித்துள்ளான் உன் புகைப்படத்தை

மூச்சு திணறிப்போகட்டுமென.
 

Thursday, May 17, 2012

திருமணம் ஒரு தரம், ஒரே தாரம் போதுமா?


எப்போதும் நிரந்தரமாக ஒன்றாக இருப்பது


அவளை மட்டும் நினைத்து கொண்டும்

ஒன்றாக ஷாப்பிங் செய்து
ஒரே  வழியில் கொண்டு
ஒரே  தொலைக்காட்சி சானெல் பார்த்து

பொறுமையாக காத்திருந்து


விவாதங்கள்.....  பிரச்சினைகள்.....





விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு



 வளைக்கரங்கள் மீட்டுவது  வீணையின் நரம்புகள்


 வாசிப்பில் மயங்குவது  மனிதனின் நரம்புகள் 


Wednesday, May 16, 2012

டைரக்டர் ஷங்கர் படம் பார்க்கலாமா..

கொஞ்சம் நீளமான   பதிவு  அத்துடன் ஆங்கிலமும் (தவிர்க்க முடியல) இடங்களை குறிக்கும் வகையில் - மன்னிச்சு.

இயற்கைவளம், இயற்கை கொடுத்த வரம் பிரமாண்டமாகவும் சும்மா மிரள வைக்குதுல்ல....


படங்களை பெரிது படுத்தி கண்டு மகிழுங்கள்.


Riomaggiore, Cinque Terre, இத்தாலி

Keukenhof Tulip Gardens, Lisse, ஹால்லாந்து 


Son Doong Cave, வியட்நாம்

Tunnel of Love in Kleven, உக்ரைன்

Terraced Rice Field, Yunnan, சீனா 


Salt Desert of Uyuni, பொலிவியா




Sagano Bamboo Grove, ஜப்பான் 


Pamukkale Travertine Pools,  துருக்கி

Cenotes, Yucat'n Peninsula, மெக்ஸிகோ




Skogarfoss Waterfall, ஐஸ்லேன்ட் 



Palominito Island,  போர்ட்ரிகோ 


Isle of Skye, ஸ்காட்லான்ட் 

Dunn's River Falls, ஜமைக்கா  


Sea Caves, Benagil, போர்சுக்கல்

Capilano Suspension Bridge, Vancouver, பிரிட்டிஷ்  கொலம்பியா  


Lucca, இத்தாலி  


Ilhu da Vila, போர்சுக்கள்  


San Marco, Venice, இத்தாலி

Thor's Well, Cape Perpetua, ஒரேகான் 


Maldives,  இந்தியா 


Lake Powell, Utah, அமெரிக்கா


Six Senses Yao Noi, தாய்லாந்து  


Portillo Ski Resort, சிலி 


Lofoten, நோர்வே  


El Escorial, Madrid, ஸ்பெயின்  



டிஸ்கி : பிரமாண்டமான மிளரவைக்கும் படங்களை தமிழில் தருபவர் இயக்குனர் ஷங்கர் தானே ஷ்... அபா, தலைப்புக்கு விளக்கம் சொல்லியாச்சி....ஜூட்.



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு



ஜொள்ளு இல்ல லொள்ளு மட்டுமே வர்து
தலை சாய்ந்து நோக்கும் அர்த்தம் என்ன?
 கீழ் நோக்கி தொங்...கம்மல்  ஏன் அப்பூடீ?
வெட்ட வெளியில் தலைக்கேசம் கலையாமல்  எப்படி?
ஆடைகளையும் நோக்கம்? காற்று இல்லையோ?
இன்னும்   லொள்ளுகனைகள் உண்டு இப்போதைக்கு இது போதும்.