நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, December 11, 2011

உலகின் விநோதங்கள் பல! கண்களில் பட்டவை சில!


உலகத்தில் மிக அழகான விலங்குகள் என்றால் பிறந்த குட்டிகள் தான். அவற்றை கையில் எடுத்து கொஞ்சும் அளவுக்கு அவ்வளவு அழகாக தோற்றமளிக்கும்.

அவற்றின் சில விலங்குகளை மிருகக்காட்சிசாலையிலும், பூங்காவிலும் கண்டிருப்போம். இவை பார்ப்பதற்கு மிக அழகாகவும், மனதை கவரும் விதமாக அமையும். நாம் எதிர்காணாத தருணங்களில் எடுக்கப்பட்ட சில வித்தியாசமான விலங்குகளை படத்தில் காணலாம்.












ஓ.பன்னீர் செல்வம் கார் சரமாரி தாக்குதல்




குமுளியில் ஓ.பன்னீர் செல்வம் கார் மீது சரமாரி தாக்குதல்

தமிழ்நாடு சட்டசபை சிறப்புக் கூட்டம்..





முல்லைப் பெரியாறு குறித்து விவாதிக்க டிச 15ம் தேதி தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம்..

தமிழர்களை சுட கேரள போலீசாருக்கு உத்தரவு



கேரளாவில் உள்ள குமுளிக்குள் அத்துமீறி நுழையும் தமிழக போராட்டக்காரர்களை கண்டதும் சுட இடுக்கி மாவட்ட எஸ்.பி. ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் எல்லையில் குவிந்த தமிழக மக்கள் யாரும் குமுளிக்குள் செல்ல வேண்டாம் என்று தமிழக போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். எல்லையில் குவிந்த கிராம மக்களை அவரவர் ஊர்களுக்கு திருப்பி அனுப்ப சிறப்பு பேருந்துக்கு தமிழக போலீசார் ஏற்பாடு செய்தனர்.

வாடகைத் தாய் மூலம் ஆண் குழந்தை - அமீர்கான்



பாலிவுட் நடிகர் அமீர் கான்-கிரண் ராவ் தம்பதியருக்கு வாடகைத்தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறந்துள்ள இந்தக் குழந்தை எங்களுக்கு மிகவும் விசேஷமானது, சிறப்பானது என்று அமிர்கான் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.  தற்போது 46 வயதாகும் அமீர் கானுக்கும், அவரது மனைவி கிரண் ராவுக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற அமிர்கான் - கிரண் முடிவு செய்தனர்.

அதன்படி செயற்கை முறையில் கருத்தரிப்பு நடத்தப்பட்டு, வாடகைத்தாயின் கருவறையில் அமிர்கான் தம்பதியின் குழந்தை வளர்ந்து வந்தது. தற்போது அழகான ஆண் குழந்தையை அந்த வாடகைத்தாய் பெற்றுள்ளார். இதுகுறித்து அமிர்கான் அளித்துள்ள பேட்டியில், கடவுளின் அருள், அறிவியலின் அற்புதம், எங்களது குடும்பங்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு, அன்பு ஆகியவற்றுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்த, எங்களின் உணர்வுகளை மதித்த அனைவருக்கும் நன்றி கூறுகிறோம், என்று கூறியுள்ளார்.

Wednesday, December 7, 2011

செய்திகளும் மனசாட்சியும் - 1

  • கேரளாவில் தொடர்ந்து தமிழர்கள் தாக்கப்பட்டால் திமுக முக்கிய முடிவை எடுக்கும்- கருணாநிதி
        எப்போ எல்லாம் முடிந்த பின்னயா?

  • கேரளாவின் தாக்குதலை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை- ராஜ்யசபாவில் சிபிஐ, சிபிஎம் குற்றச்சாட்டு
போங்கையா போங்க கண்ணாடியை கலட்ட சொல்லுவே ... ங்கொய்யால

  • தமிழ்ப் பெண்களைத் திட்டி, சேலைகளைக் கிழித்து மானபங்கப்படுத்திய கேரளாக்கார்ரகள்

தமிழன் எங்கு போனாலும் அடி வாங்கி/அவமானப்பட்டு  பழகி போச்சி
டிஸ்கி:செய்திகளும் மனசாட்சியின் ஆதங்கமும்

யு ட்யூப்பின் கொலவெறி?

தனுஷ் எழுதிப் பாடி இன்று மிகப் பிரபலமான வீடியோ எனப் பேசப்படும் கொலவெறி என்ற தமிங்கிலீஷ் பாட்டுக்கு யு ட்யூப்பின் கோல்ட் விருது கிடைத்துள்ளது.

தமிழும் இல்லாமல், ஆங்கிலத்திலும் சேராமல் இரண்டும் கெட்டானாக தனுஷ் எழுதிப் பாடிய இந்தப் பாடல் ஊடகங்களின் தயவால் மிகப் பிரபலமாகிவிட்டது.

இணைய செய்தித் தளங்கள் பற்றி மிகத் தவறான கண்ணோட்டம் கொண்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு, இணைய வலிமை குறித்து புரிய வைக்க ஒரு வாய்ப்பாகவே இந்தப் பாடல் பார்க்கப்படுகிறது.

ஒரு கோடி பேருக்கும் மேல் பார்க்கப்பட்ட இந்தப் பாடல் குறித்து டைம் பத்திரிகையே தனது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த கொல வெறி பாடலுக்கு யு ட்யூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற வகையில் 'யு ட்யூப்கோல்ட்' விருது வழங்கப்பட்டுள்ளது.

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. விரைவில் படத்தின் முழு ஆடியோவும் வெளியாக உள்ளது.

இந்தப் பாடலுக்கு இசையமைத்த அனிருத், ரஜினி குடும்பத்துக்கு மிக நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது!

டிஸ்கி - அது என்ன படத்தின்  தலைப்பு '3' - தமிழில் '௩' இது தான் ஏன் ஆங்கில தலைப்பு? (why this kolaveri) - சரி பெரிய எடத்து பொல்லாப்பு நமக்கேன் கொலவெறி.

'இது' தமிழ்நாட்டில் இல்லிங்கோ!

கடந்த 2009ம் ஆண்டு குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 136 பேர் பலியாகினர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான சட்டம் தேவை என்று குஜராத் முதல்வர் மோடி தலைமையிலான அரசு தீர்மானித்தது. தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ 1 ஆண்டு சிறை தண்டனை தான் என்பதால் பலரும் துணிச்சலாக கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர்.

இந்த நிலையை மாற்ற கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் குஜராத் சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. அதன்படி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் 7 முதல் 10 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும். கள்ளச்சாராயத்தை குடித்து யாராவது இறந்தால் அதை விற்றவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்ட திருத்தத்திற்கு குஜராத் ஆளுநர் கமலா ஒப்புதல் அளித்துள்ளார். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கிறது.

குஜராத்தில் முழுமையான மதுவிலக்கு இருக்கையில் இவ்வாறு கள்ளச்சாராயம் விற்கப்படுவதைத் தடுக்க தான் இந்த கடுமையான சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

பலவீனம் கேரள அரசியல்வாதிகளிடம்தான்- தமிழ்நாடு எதிர் கட்சி தலைவர்

விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களை கேரள சமூக விரோதிகள் அடித்து துன்புறுத்துகிறார்கள் என்றும், அதனால் பக்தர்கள் பாதிப்புக்கும், தவிப்புக்கும் உள்ளாகி உள்ளனர். அதோடு பஸ் பயணிகளும் தாக்கப்படுகிறார்கள் என்றும் அறிய வருகிறேன்.

இது மிகுந்த வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. இது தமிழ்நாடு, கேரளாவுக்கும் இடையே நிலவி வரும் உறவுக்கு நல்லதல்ல.

மக்களுடைய உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசின் கடமையாகும். பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுத்தாலும் கேரளாவைச் சேர்ந்த காவல்துறையினர் கண்டு கொள்ளாமல், அங்குள்ள சமூக விரோதிகளுக்கு அவர்கள் உடந்தையாகவும் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைப்பதாகும்.இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசோ மௌனம் காக்கிறது. பிரச்சினை இந்த அளவுக்கு வளர மத்திய அரசுதான் காரணம். 2006 ஆம் ஆண்டே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை இந்திய அரசு நிறைவேற்றி இருந்தால் இன்று இந்த கலவரம் ஏற்பட்டு இருக்காது.

இந்திய அரசும் காங்கிரஸ் கட்சியின் கையில் தான் உள்ளது. கேரளாவிலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கின்றன. இருப்பினும் அப்பாவித் தமிழ் மக்கள் கேரளாவில் தாக்கப்படுவதை இந்திய, கேரள அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கேரளாவைச் சேர்ந்த சமூக விரோதிகள் மீதும், இப்பிரச்சினைக்கு காரணமானவர்கள் மீதும் இந்திய அரசும், கேரள அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழக மக்கள் தாக்கப்படுவதை நிறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பலவீனம் அணையில் இல்லை, கேரள அரசியல் வாதிகளிடம்தான் உள்ளதோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஏய், நேத்து பக்கத்து வீட்டுல என்ன நடந்துச்சு தெரியுமா?

பெண்களால் ரகசியத்தை ரகசியமாக வைக்கவே முடியாது என்பது ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதுக்கு ஆய்வு எங்களுக்கே நன்றாகத் தெரியும் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

ஆனால் தெரிந்த விஷயத்திற்காகவும் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 3,000 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் 10ல் ஒரு பெண் தன்னால் ரகசியத்தை மனதில் வைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் ரகசியமாக வைக்க வேண்டும் என்று சொன்னால் கூட அவர்களால் ரகசியத்தை காப்பாற்ற முடியதாம்.

ஆய்வில் கலந்து கொண்ட பெண்களில் 85 சதவீதம் பேருக்கு அடுத்தவர்களைப் பற்றிப் பொறணி பேசுவது என்றால் அலாதிப் பிரியமாம். 13 சதவீதம் பேருக்கு வேண்டும் என்றே பொறணியைக் கிளப்பிவி்டுவதில் ஒரு ஆத்ம திருப்தி.

ஒரு படத்தில் வடிவேலு அரஜுனிடம் தான் எப்படி ஒரு பேக்கரி உரிமையாளரானார் என்பதை கூறிவிட்டு இல்லை உளறிவிட்டு அது பரம ரகசியம் யாரிடமும் சொல்லிவிடாதே என்பார். விடிந்து பார்த்தால் ஊருக்கே அந்த ரகசியம் தெரிந்திருக்கும்.

நம்ம பெண்களும் அப்படி தான் இருக்கிறார்கள். அதனால் ஆண்கள் ஒரு டெக்னிக்கை பின்பற்றுகிறார்கள். ஏதாவது ஒரு விஷயத்தை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றால் அதை ஒரு பெண்ணிடம் கூறி யாருக்கும் சொல்லிவிடாதே என்று கூறுகிறார்கள். உடனே அந்த விஷயம் ஊருக்கே பரவி விடுகிறது.

கூடி, கூடிப் பொறணி பேசுவதில் பெண்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம் கிடைக்கிறது.

உலக விஷயங்களைத் தெரிந்து கொள்வதை விட அக்கம்பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில்தான் பெரும்பாலான பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்களாம். நமக்குத் தெரியாதது கூட நம்ம வீட்டுப் பெண்களுக்குத் தெரிந்திருக்கிறதே என்று ஆண்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு பெண்களின் கியூரியாசிட்டி இருக்கிறதாம்.

பகலில் பார்த்துப் பேசணும், ராத்திரியில் அதுவும் பேசக் கூடாது என்பார்கள். இந்த வரிசையில், பெண்களிடம் பேசவே கூடாது என்பதையும் சேர்க்கலாம்

நமக்கே கொலவெறி வரும்

வாழ்கையில் சந்தோசம் வேண்டுமா?

உள்ளத்தில் இருக்கும் சோகத்தை மறைக்க உதடுகள் நடத்தும் நாடகம் தான் - புன்னகை..!

வெற்றி வரும் வரை குதிரை வேகத்தில் ஓடு.
வெற்றி உன்னிடம் வந்தவுடன் குதிரையை விட வேகமாக ஓடு.
அப்போது தான் வெற்றி உன்னிடமே நிலைத்திருக்கும்..!

விட்டு கொடு விருப்பம் நிறைவேறும்.
மன்னிப்பு கொடு தவறு குறையும் .
மனம் விட்டு பேசு அன்பு பெருகும் ..!

வாழ்கையில் சந்தோசம் வேண்டுமென்றால் உன்னை நேசி.!
சந்தோசமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் மற்றவர்களை நேசி..!

நமக்காக காத்திருக்கும் அன்பும், நம்மை காக்க வைக்கும் அன்பும் என்றுமே இனிமை தான் ..!


உன் நினைவு இல்லாத நாள் , என் நினைவு நாள் ..!

சிந்தித்து செய்தால் கிடைப்பது வெற்றி - செய்துவிட்டு சிந்தித்தால் கிடைப்பது அனுபவம்..!

சந்தோசமாக வாழ முயற்சி செய்யாதே- நிம்மதியாக வாழ முயற்சி செய் : சந்தோசம் தானாகவே வந்துவிடும்..!

பிரிவு என்பது உறவின் முடிவல்ல -அது நினைவுகளின் ஆரம்பம்..!



நன்றி மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்ட நண்பருக்கும் படைப்பாளிக்கும்.

ஒய் திஸ் கொலவெறி...






என்னா ஒரு ஒத்துமை

Tuesday, December 6, 2011

அணு.....அணுவாய்...

அணு.....அணுவாய்...

பவர் உற்பத்திக்கு
மட்டுமல்ல
உயிர் உற்பத்திக்கும்
உத்திரவாதம் தாருங்கள் !

தேச முன்னேற்றத்தில்
மக்கள் நலம் இல்லை
மக்கள் முன்னேற்றத்தில்தான்
தேச நலன் இருக்கிறது !

எங்கள் போராட்டமெல்லாம்
வாழ்க்கைத்தரத்தை
பெருக்கிக்கொள்ள அல்ல -
வாழ்வாதாரத்தை
உறுதிபடுத்திக் கொள்ள...

மனசிலிருந்து அல்ல
உயிரிலிருந்து எழுப்பப்படும்
எங்கள் வினாக்கள் இதுதான்.....

அச்சம் போக்காமல்
ஆலையைத்
தொடங்கலாமா.?

கொடும நோய் தொற்றும்கடும் பயத்தை
விதைக்கலாமா..?

வளர்ந்த நாடுகள் கூட
சாத்தும் கதவுகளை
வலியப்போய் திறக்கலாமா?

காலம் பார்க்காமல்
முத்துக் குளிக்கும் மக்களை
ஆழம் பார்க்கலாமா?

வேருக்கு
வெண்ணிர் ஊற்றுவதுதண்ணீர் ஊற்றுவதுஆகாது..! 

விரதத்தை
முடித்து வைக்க
பழச்சாறு
தராவிட்டாலும்
பாதரசம் தராதீர்கள்..!

மூச்சுப் பிரச்சனையை
வெறும்ஆட்சிப் பிரச்சனையாக மட்டும்பார்க்காதீர்கள்


எழுதியவர் அண்ணா சிங்காரவேலு - அதிராமபட்டினம்  

இணையதளங்களில் கருத்துகளுக்கு தணிக்கையா? தடையா?

இணைய கருத்துகளை தணிக்கை செய்ய அரசு முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் நிராகரித்துள்ளார்.


ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் முன்பு நாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒத்துழைப்பு தரவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.


அரசின் நடவடிக்கை குறித்து பேசிய கபில்சிபல், இந்தியர்களின் உணர்வுகளையும், மத உணர்வுகளையும் காயப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.


ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் போன்றவற்றில் வெளியிடப்படும் சில கருத்துகளும், படங்களும் இந்தியாவில் உள்ள மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது என்றார் அவர்.


இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை கண்காணித்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு செப்டம்பர் மாதம் முதல் ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட் மற்றும் யாகூ நிறுவனங்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதியுள்ளேன். அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளிடமும் பேசியிருக்கிறேன் என அவர் கூறினார்.


நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இதுதொடர்பாக தங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று இந்த நிறுவனங்கள் கூறிவிட்டன என்றார் அவர்.


இதையடுத்து இதுபோன்ற நிறுவனங்களின் பயனாளர்கள் கருத்துக்களை வெளியிடும் முன்பு கண்காணித்து, முன்கூட்டியே தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு ஆராய்ந்து வருகிறது என கபில் சிபல் கூறினார்.

டிஸ்கி - அப்ப இதுக்கு என்ன அர்த்தம்னேன் 

புகை பிடிக்க கூடாது

Smoking



Monday, December 5, 2011

இந்தியர்களிடம் 1 கோடியே 80 லட்சம் கிலோ தங்கம்

"இந்தியர்களிடம், 50.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 18 ஆயிரம் டன் தங்கம் (ஒரு கோடி 80 லட்சம் கிலோ) உள்ளது' என, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.


உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான மேக்குவாரி கூறியுள்ளதாவது: தங்கம் நுகர்வு, இந்தியர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தோடு ஒன்றிப் போனது. உலகளவில் தங்கம் நுகர்வில், முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா. இதற்கு, அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் அளவு, 18 ஆயிரம் டன் இருக்கும்.

 இது, உலகளவில் உள்ள தங்கத்தில், 11 சதவீதம். இந்தத் தங்கத்தின் மதிப்பு, 50.35 லட்சம் கோடி ரூபாய். டாலர் மதிப்பில் பார்த்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம். கடந்த 2009 -10ம் ஆண்டில், இந்தியர்களின் சேமிப்பில், 7 முதல் 8 சதவீதம் தங்கமாக இருந்தது.

தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அதை ஒரு சொத்தாக சேமித்து வைப்பதில், இந்தியர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஐய்யோ சாமி - பதிவர்களே உங்களுக்காவது புரியுதா??

முல்லை பெரியாறு விவகாரத்திற்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது :

முல்லை பெரியாறு அணை விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம்; முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக 1998ம் ஆண்டு நாள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தேன்; அந்த வழக்கில் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அணையின் நீர் தேக்கும் உயரத்தை 124 அடியாக உயர்த்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது; இதனை எதிர்த்து இதுவரை யாரும் தடை வாங்கவில்லை; அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதியும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; தற்போது அணை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதுவது வேடிக்கையாக உள்ளது;

இதே போன்று கூடங்குளம் அணுமின் நிலையம் வர கூடாது என சிலர் பிரச்னை செய்து வருகின்றனர்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்;

தமிழக, கேரள மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்;

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது;

சிறையிலிருந்து திரும்பிய கனிமொழிக்கு திமுக அளித்த வரவேற்பு தேவையற்றது; அவரது ஜாமீன் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம்;

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா எந்த அளவிற்கு குற்றம் செய்துள்ளாரோ அதே அளவிற்கு உள்துறை அமைச்சர் சிதம்பரமும் குற்றம் செய்துள்ளார்.

 இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.