நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, May 2, 2012

முக்கிய குறியீடுகள்

மனிதகுலத்தின் முக்கிய கடன் காலைக்கடன் என்ன நான் சொல்றது - கிராமங்களில் ஆத்தாங்கரை,குளத்துகரை, கம்மாக்கரை ,  பொட்டல் காடு, வெட்டவெளி  இப்படி.... இயற்கை உபாதைகளுக்கு இயற்கையாய்...., ஆனா பட்டணத்து பக்கம் வந்தால் இந்த படத்தில் உள்ளது போல


ஆண் பெண் உருவ படங்களுடன் ஆண்கள் பெண்கள் என்று எழுதியும் வைத்து இருப்பார்கள் (சரி அதுக்கு என்னாங்கிற?)

காசு வாங்கி கொண்டு அனுமதிப்பார்கள்  இது நம்மூருங்க:

மேலை நாடுகளையும் மற்றும் உலக அளவில் அதுக்கான குறியீடுகளை (அப்படீன்னா)  தெரிந்து கொள்ளனும், 

பொதுஅறிவு வளர்த்துகோணும்  அதாங்க ஜி கே,

( ஜி கேன்னு சொன்னா  தான் பய புள்ளைக்கு புரியுது)

சரி இப்ப ஒரு ஷார்ட் டூர் போவோமா வாங்க:

 விமானநிலையம், ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், பொது இடங்கள், மால்ஸ், சூப்பர் மற்றும் ஹைப்பர் மார்ட்டுகளில்

 (வேறு எதாவது விடு பட்டுஇருக்கா!?)  உள்ள கழிப்பிடம்,

அதாங்க பாத்ரூம் (அ) ரெஸ்ட் ரூம் (அ) டாய்லெட்ஸ் (ஷ்.... அபா) களில் ஆண் பெண் என்பதை குறிக்கும் அடையாளமாக அதன்  ஐகான்ஸ், சாரிபா..குறியீடுகளை பார்ப்போமா:

முக்கியமான விடயம் எந்த எந்த நாட்டில் என்று குறித்து  சொல்ல வில்லை குறியீடுகளை மட்டும் குறிப்பாக  கொடுத்துள்ளேன்..


நிஜத்துக்கு நிழல்

ஆழமான உண்மை

கஷ்டமாகத்தான் இருக்கு

எலும்பு கூடு மாதிரி

ரொம்பவே டிசன்ட்

வித்தியாசமான சிந்தனை

எண்ணத்தா சொல்றது போங்கு

துருகீஸ் நல்லாத்தான் யோசிச்சு இருக்கு

என்னா  ஒரு கொல வெறி

யதார்த்தமாக


காலாத்துக்கு ஏற்றவாறு சூப்பர்ரா 

நிலவுக்கு போறாங்களோ

விளையாட்டு விரும்பிகள் போல 


அந்த காலத்து பூட்டுக்கு  சாவி போல


இலகுவா புரியற அளவில்

சோ, குடுமியை  வைத்துதான் கண்டுகோணும்

என்ன ஒரு கலைநயம்!!

சிம்பிள்

கொய்யால....பளிச்சின்னு புரியற மாதிரி

நல்ல ரசனை ஐபாட், ஆப்பிள் மாதிரி  

டேய் எட்ரா கையை என்ன ஒரு லொள்ளு

ரொம்ம கவர்ச்சியா இருக்குல்ல

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

காமடியா இருக்கு போங்க

இவ்வளவு கலை & கற்பனை திறனுடன் படைத்துள்ளார்கள் இந்த படங்களுக்கு உடமஸ்தன் மனசாட்சி அல்ல..படங்களை படம் பிடித்தவர்களுக்கு நன்றி - சும்மாவே கூகிளாண்டவர்  இமேஜ் பக்கங்களை நோட்டுற மனசாட்சிக்கு இப்படி சொளையா மின்னஞ்சல் மூலம் படம் அனுப்பி வைத்தால்

 ( மின்னஞ்சல் அனுப்பிய சகோவுக்கு நன்றி) 

தேத்திடுவோம்ல ஒரு பதிவு .....சரி இனி நீங்க கும்முங்க பின்னுட்டத்தில்

ஒரு நிமிஷம்......ஹி ஹி ஹி இதுவும்  முக்கியமுங்கோ:


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


நாடெல்லாம் உன் பேச்சு

நாடி நரம்பெல்லாம்  உன் மூச்சு

ஒக்கே ஒக்கே

ஒரு விநாடி உற்று பார்த்தேன்

உன் புன்னகையில் புல்லரித்து போகிறேன்



Monday, April 30, 2012

வாழ்க்கை பொய்யானது

நல்ல  நீண்ட கால நட்புக்கு இரண்டு கோல்டன் சொற்றொடர்கள்:

  • நம்புகிறவர்களை சந்தேகபடாதே...
  • சந்தேகபடுபவர்களை  நம்பாதே... 


     
                       
நான் பிறந்த பொழுது,
என்னை தாங்கி பிடித்து இருந்தாள் ஒரு பெண் - என் அம்மா.

நான் குழந்தை பருவத்தில்  என்னுடன் அக்கறையாக  & விளையாடி  இருந்தாள் ஒரு பெண்  - என் சகோதரி

நான் பள்ளி சென்று பலதும் கற்க உதவியாக இருந்தாள் ஒரு பெண்  - என் ஆசிரியர்

நான் மனம் வாடி, சோர்ந்த தருணங்களில்  தோள் கொடுத்தால் ஒரு பெண் - என்  தோழி

நான் இணக்கத்தன்மையுடனும்  துணையுமாக  & காதலுடன் ஒரு பெண் இருந்தாள்  - என் மனைவி

நான் எவ்வளுவு உறுதியாக மனநிலையில் இருந்தாலும் என்னையும் 
உருக்கி விடும்
  ஒரு பெண்  - என் மகள்

நான் எப்போது இறப்பேன் என்று காத்திருந்து கிரகித்து கொள்ளும்  ஒரு பெண் - என் தாய்மண் (நிலம்,மதர் லேன்ட்)

நீங்கள் ஒரு ஆண் ஆக இருந்தால்  பெண்களை மதியுங்கள். 
 
அல்லது

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் பெருமை பட்டுக்கொள்ளுங்கள்.


                                            

வாழ்க்கை பொய்யானது எப்போ உன்னுடன் "F" இல்லையோ.

"F" ஒண்ணுமே இல்ல ஆனா அதுவும் முக்கியம். 
வாழ்வில் ஒருபோதும் "F" இல்லாமல் இருக்க வேண்டாம் !!

"F" ? = Female , Friendship , Family , Faith, Food,,,,,,


  


நிலவு தூரத்தில் உள்ள போதும்

நட்சத்திரங்கள் என்னை வழி நடத்தும்
போதும்


மின்மினி பூச்சி என்னை சுற்றி பறக்கும் போதும்

என் அறையில் அமர்ந்தும் உன்னை நினைத்து கனவு கண்டு, ,


நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்?


 


 விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு




அட....பார்ரா எம்புட்டு   அழக்கா இருக்காங்ங்ங்..

 பார்த்துண்டே  இருக்கலாம்னு தோணுதுங்..

 யாருங்ங்? இவுங்?

தெரிஞ்சவங்... சொல்லுங்ங்ங்.


 
நன்றி படங்கள் - முகநூல் &  கூகிள்