நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, February 11, 2012

இலியானா..... இடுப்பு வேணுமா!? வேணும்னா எதை எல்லாம் செய்யக்கூடாது

உடல் பருமன் என்பது இன்றைக்கு அதிகம் பேசப்படக்கூடிய விசயமாக உள்ளது. எடை குறைப்பு விளம்பரங்கள் ஒரு பக்கம் காசை கறக்க போட்டி போட்டுக்கொண்டிருக்கையில் தாங்களாகவே எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர் பலர். உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம் என்பதை விட எதை செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர் உணவியல் வல்லுநர்கள்.

காலை உணவுக்கு கட் கூடாது

எடை குறைப்பு முயற்சிக்கு முதலில் செய்வது உணவை தவிர்ப்பது. அதுவும் பெரும்பாலோனோர் காலை உணவை கட் செய்துவிட்டு அலுவலகம் செல்கின்றனர். இது தவறான பழக்கம் என்கின்றனர் உணவியலாளர்கள்.
, இரவில் உண்ட உணவு ஜீரணமாகி உடலானது சக்தியை எதிர்நோக்கி காத்திருக்கும் போது அதற்கு தேவையான ஆகாரத்தை அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக திகழும். எனவே காலை நேரத்தில் அதிக அளவில் உணவுகளை உண்ணாமல் ஜூஸ், பழங்கள் போன்றவற்றை உண்ணலாம். இதனால் சரிவிகித சக்தி கிடைக்கும்.

மாவுச்சத்து உணவுகள்

உடல் எடைக்கு மாவுச்சத்துள்ள உணவுகள்தான் எதிரி என்று நினைத்துக் கொண்டு அனைத்துவகையான கார்போஹைட்ரேட் உணவுகளையும் தவிர்த்து விடுவர். இது தவறானது என்கின்றனர் வல்லுநர்கள். ஏனெனில் கார்போ ஹைடிரேட்தான் நமது இயக்கத்திற்கு தேவையான சக்தியைத் தருகிறது. அதேசமயம் உடலுக்கு தீங்கு விளைக்கு விளைக்கும் சோடா
, குளிர்பானங்கள் போன்றவைகளை தவிர்க்கலாம். அதேசமயம் புருக்கோலி, உருளைக்கிழங்கு, உள்ளிட்ட காய்கறிகள்,
மேலும் பழங்களில் உள்ள கார்போ ஹைட்ரேட் பொருட்களை சேர்த்துக்கொள்ளவேண்டும். மேலும் ஐஸ் கிரீம் உள்ளிட்டவைகளை உட்கொண்டால் உடல் எடைக் கூடும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

ஜங்க் ஃபுட்
, நொறுக்குத்தீனி



உடல் எடையை குறைப்பதற்காக மாலை 6 மணிக்கு மேல் உணவைத் தவிர்ப்பவர்கள் பலர் உண்டு. அதேசமயம் தொலைக்காட்சி பார்க்கும் சாக்கிலோ
, திரைப்படம் பார்க்கும் போதோ கிலோ கணக்கில் சிப்ஸ், பர்க்கர், உள்ளிட்ட ஜங்க் ஃபுட்களை உள்ளே தள்ளுவார்கள். இதுவும் உடல் நலத்திற்கு தீங்கானது என்கின்றனர் ஆய்வாளர்கள். சாதமாக உட்கொள்ள முடியாதவர்கள் காய்கறி சாலட்ஸ், பழங்கள் போன்றவைகளை உட்கொள்ளலாம் இது உடல் எடையை குறைக்கும்.

சரிவிகித கலோரி

அதிக கலோரி தரும் உணவுகளை தவிர்க்கிறேன் பேர்வலி என்று எதையாவது உண்ணக்கூடாது. பாதாம் பருப்பு
, மூன்று ஆப்பிள் பழங்களை உண்ணும் போது கிடைக்கும் கலோரி சீஸ்பர்கரும்,
கோக் குடிப்பதன் மூலமும் ஏற்படும். எனவே எந்த விகிதத்தில் கலோரி உணவுகளை உட்கொள்கிறோம் என்பது முக்கியம் என்கின்றனர் உணவியலாளர்கள்.

எடைக் குறைப்பு சாதனங்கள்



உடல் எடையை குறைப்பதற்காக விற்பனை செய்யப்படும் சாதனங்கள் , மாத்திரைகள் போன்றவைகளைப் பயன்படுத்தினால் உடல் எடை குறையும் என்பது அனைவரின் நம்பிக்கை. இந்த பொருட்கள் உடல் எடைக்குறைப்பிற்கு உதவி புரியுமே தவிர முழுவதுமாக அவற்றை மட்டுமே நம்பக்கூடாது என்கின்றனர் உணவியலாளர்கள். நமது உடலை கட்டுப்பாட்டிற்குள் வைக்க நாம் சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டு உடல் எடையை குறைக்கலாம் என்பதே அவர்களின் அறிவுரை.

விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு



பதிவின் தலைப்புக்கு ஹி..ஹி...ஹி....ஹி


Thursday, February 9, 2012

ஓவர் கொழுப்பு ஒடம்புக்கு ஆகாது


மஞ்சள்

 இந்திய உணவுகளில் மஞ்சளுக்கு தனி மகத்துவம் உண்டு. மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் கொழுப்பு சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை குறைத்து உடல் பருமனில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட மஞ்சள் கொழுப்பு சக்தியை குறைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

கொத்தமல்லி


உடலின் கொழுப்பை குறைப்பதில் கொத்தமல்லிக்கு சிறந்த பங்கு உண்டு. உண்ட உணவை ஜீரணப்பதில் கொத்தமல்லி சிறந்த மூலிகையாக செயல்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரித்து உடலை ஸ்லிம் ஆக்குகிறது.

கறிவேப்பிலை


உடலின் கொழுப்பை குறைப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையில் டாக்ஸின்கள் உள்ளன. தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலைகளை உட்கொண்டால் கொழுப்பு படிப்படியாக குறையும். மோர், காய்கறி சாலட், போன்றவைகளில் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.

வெள்ளைப்பூண்டு

கொழுப்பை எரிப்பதில் வெள்ளைப்பூண்டுக்கு முக்கிய பங்குண்டு. இது கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே இது உடலின் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கடுகு எண்ணெய்

சமையல் எண்ணெயானது உடலில் கொழுப்பு சேருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே குறைப்பு கொழுப்பு அமிலங்கள் உள்ள எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். கடுகு எண்ணெயில் ஆண்டி ஆக்ஸிடென்ஸ்,வைட்டமின்கள் போன்றவை காணப்படுகின்றன. இது இதயத்திற்கு இதமானது.


முட்டைக்கோஸ்

உடல் கொழுப்பை கட்டுப்படுத்தும் உணவுகளில் முட்டைக்கோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் குறைப்பில் சாலட் வகைகளில் முட்டைக்கோஸ் பயன்படுத்தப்படுகிறது. முட்டைக்கோஸ் உடலில் கொழுப்பு, சர்கரை போன்றவற்றை சரிசமமாக தக்கவைக்கிறது.

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் ஏ,பி,சி, மற்றும் ஈ வைட்டமின்கள் உள்ளன. இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. இது குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவு. உணவியல் நிபுணர்கள் உடல்குறைப்பு தொடர்பான உணவாக பாசிப்பருப்பினை பரிந்துரைக்கின்றனர். இது உயர் ரகமான நார்ச்சத்து கொண்டுள்ளது. உடலில் ரத்த அழுத்தம் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.

தேன்

உடல்பருமனை குறைப்பதில் தேனின் பங்கு முக்கியம்மானது. தினமும் காலை நேரத்தில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பருமன் குறையும்.

மோர்

உடலுக்கு தேர்வையான நீர் சத்தை அளித்து, கொழுப்பை குறைப்பதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான கலோரிகளை மட்டுமே அளிக்கும் தன்மையுடையது என்பதால் தேவையற்ற கொழுப்பை உடலில் தங்கவிடாது.

சிறு தானியங்கள்


நார்ச்சத்து நிறைந்த கம்பு, சோளம், ராகி, தினை போன்றவை உடம்பில் கொழுப்பை ஏற விடாது. விலைகுறைவானதும் சத்து நிறைந்த்துமான இந்த தானிய உணவுகளையே பண்டைய காலத்தில் உணவாக உட்கொண்டனர்.


பட்டை, கிராம்பு


கறி சமையலுக்கு வாசனைக்காக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு போன்றவை கொழுப்புச்சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை உடம்பில் தங்கவிடாமல் செய்து, டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துகிறது.



 





Wednesday, February 8, 2012

மணப்புரம் பைனான்ஸ் - சட்டவிரோதம்


மலையாளிகளின் நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் சட்டவிரோதமாக டெபாசிட்டுகளை வசூலிப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இனி மணப்புரம் பைனான்ஸ் அல்லது மணப்புரம் அக்ரோ பார்ம்ஸ் நிறுவனங்களின் பெயரில் பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டுகளை வசூலிப்பது குற்றம்
, கடும் தண்டனைக்குரியது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்
, "விபி நந்தகுமாரை எக்ஸிக்யூடிவ் சேர்மனாகக் கொண்டு இயங்கும் மணப்புரம் பைனான்ஸ், தனது அனைத்து கிளைகளிலும் பொதுமக்களிடமிருந்து டெபாசிட் வசூலிக்கிறது. அதற்கு, மணப்புரம் அக்ரோ பார்ம்ஸ் எனும் பெயரில் ரசீதும் தருகிறது. மணப்புரம் அக்ரோ பார்ம்ஸ் என்பது விபி நந்தகுமாருக்கு முழுமையாக சொந்தமான நிறுவனம். இது கார்ப்பரேட் சட்டப்படி பதிவு பெறாதது.

ரிசர்வ் வங்கி சட்டம் 45-
S படி இது குற்றச் செயலாகும்.பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். மீறி டெபாசிட் வாங்கினால் மணப்புரம் பைனான்ஸ் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என அறிவித்துள்ளது.


கேரளாவின் திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மணப்புரம் பைனான்ஸ் தங்க நகைக் கடன்களைத்தான் பிரதானமாக வழங்குகிறது (இருக்கிற நகை நட்டுகளை அடமானம் வைக்க சொல்லி விக்ரம் அட்வைஸ் பண்ணுவாரே... அந்தக் கம்பெனிதான்!). ஆரம்பத்தில் வங்கியல்லாத நிதி நிறுவனமாக பதிவு செய்திருந்த மணப்புரம் பைனான்ஸ்
, 2011-லிருந்து 'டெபாசிட் பெறாத வங்கியல்லாத நிதி நிறுவனம்' என்ற பிரிவின் கீழ் மாற்றிக் கொண்டது.

ஆனாலும் டெபாசிட் பெறுவதை தொடர்வதாக ரிசர்வ் வங்கிக்கு ஆதாரங்களுடன் தகவல் கிடைத்ததால்
, இந்த எச்சரிக்கையை ரிசர்வ் வங்கி விடுத்துள்ளது.

ஐஸ்வர்யா - சமீரா ரம்மியமாக இருக்கு!?



லவ்ன்னா சும்மாவா - காதலில் வலி சுகமானது
 
காஸ்ட்யுமர் ஆகி இருக்கலாமோ?? ஹிம்...


விபத்து,  ஏன் ஏற்படுதுன்னு இப்ப புரியுதுங்களா...



அம்மாவா ஐஸ்வர்யாபச்சன் 




ரொம்ப அழகா ரம்மியமாக இருக்கு - இடம் தெரியவில்லை



 விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு



உன்னை மதிச்சி Tag பண்ணுனா, நீ என்ன பண்ணனும்?
சொல்லு செல்லம் நீ என்ன பண்ணனும்??
ஒன்னு கமெண்ட் பண்ணனும் இல்ல லைக் பண்ணனும்!!
அத விட்டுட்டு ஏன் untag  பண்ணுற? இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்.
நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடாக்கரா????
வருசத்துக்கு ஒரு தடவ லாக்-இன் பண்ணுற உனக்கே, அவளோ அதப்புன்னா, டெய்லி லாக்-இன் பண்ணுற எங்களுக்கு எவ்ளோ அதப்பு இருக்கும்!!!
ஒழுங்கா கமெண்ட் பண்ணு இல்ல மூஞ்சில புரான் விட்ருவேன்.


Monday, February 6, 2012

உடலுக்கு நல்லதாம்...

நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு. நாம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.


இதனிடையே தினந்தோறும் இருமுறை உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தநோய் குறையும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதனால் இதயநோய் பாதிப்பும் ஏற்படாது என்றும் உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உருளைக்கிழங்கை வெண்ணெய் அல்லது எண்ணெய் போட்டு சாப்பிடுவதை விட வேக வைத்து உண்ணவேண்டும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் இந்த ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டனர். ஆய்வின் போது மதிய உணவு நேரத்தில் தினமும் 100 கிராம் அளவு உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது. அதேபோன்று இரவு நேரத்திலும் கொடுக்கப்பட்டது. ஒருமாதம் தொடர்ந்து உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவர்களின் உயர்ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. அவர்களின் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.

உடல் எடை அதிகரிக்காதது மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறைந்தது உள்ளிட்ட காரணங்களினால் உருளைக்கிழங்கானது உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

Sunday, January 29, 2012

அரசியலில் இது எல்லாம் சாதரணமப்பா.

எல்லோருக்கும் வணக்கம்


 

ஒரு நிமிஷம்....இந்த சூழ்நிலையில் நீங்களா இருந்தால்.???


எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா...


யானை:  அந்த பயம் இருக்கட்டும்..!  
ஓட்டுனர்:  தள்ளிவிட்டாலும் சட்டினிதான்.


பாம்பன் பாலம்:  ரயில் பாலம் மற்றும் தரைவழி பாலம்    பார்த்து இருப்போம்....இரண்டும் சேர்ந்தாற்போல்...



கட்டுமான தவறு..  ஹிம்....என்னத்தை சொல்ல


  கட்சி கூட்டம்?! இது எல்லாம் சாதரணமப்பா  




விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு


யாரு? யாரு??

Wednesday, January 25, 2012

ஸ்ருதி கரெக்டா இருக்கு - விளையும் பயிர் முளையிலே தெரியும்

வருங்கால பயில்வான் வாழ்த்துக்கள் அம்பி வாழ்த்துக்கள்

 அழகா இருக்கு அருவி.. நீர்வீழ்ச்சி உண்மையா இல்ல கிராபிக்ஸா # சிரியஸ் டவுட்டு

கற்பனைக்கும் எல்லை இல்லை தான் - வாழ்த்துக்கள் யு கண்டிநியூ

விளையும் பயிர் முளையிலே தெரியும்

பெருசை பார்த்தா பெரியமனுசன் மாதிரி தோணுது பட்  பார்வையில் கோளாறு

iPAD நிலைமையை பாரு...

ரிஸ்க் தான் ஓசி பயணத்தில் இது எல்லாம் சாதரணமப்பா

நண்பர்களுடன் உற்சாகபானம் அருந்தி சுதி ஏற்றுவது யாருன்னு...அட கப்புன்னு புடிச்சிடியலே.


செம காமடி போங்க

விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு


அழகு மயில்.. மேக்அப்புக்கு முன்னாடியா? பின்னாடியா? # டவுட்டு 


நடிகை திரிஷாவுக்கு பணம் வேண்டாமாம் சும்மாவே வருவாங்கலாம்.


அமெ‌ரிக்க தமிழ் சங்கத்தின் 25வது ஆண்டு விழா வரும் ஜூலை மாதம் நடக்கிறது. இதில் த்‌ரிஷா கலந்து கொள்கிறார்.


சொந்த மகளின் காது குத்துக்குக்கூட காசு கொடுத்தால்தான் வருவேன் என்பவர்கள்தான் நமது சினிமாக்காரர்கள். விதிவிலக்கு ஒன்றிரண்டு இருக்கலாம். எந்த விழாவுக்கு என்றாலும் பயணப்படியுடன் லம்பாக ஒரு அமௌண்ட் வெட்டுவது இவர்களின் வாடிக்கை.



அமெ‌ரிக்க தமிழ் சங்கம் த்‌ரிஷாவை சீஃப் கெஸ்டாக அழைத்தபோது, பெ‌ரிய தொகை ஒன்றை அவர் கேட்பார் என்றுதான் நினைத்தார்களாம்.
ஆனால் த்‌ரிஷாவோ, இந்த விழாவில் கலந்து கொள்வது எனக்குப் பெருமை, அதனால் எனக்கு பணம் எதுவும் வேண்டாம் என்றிருக்கிறார்.

 தமிளு தமிளு என்று பேசும் நடிகர்களைவிட இவர் எவ்வளவோ மேல்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


ஹல்லோ...எஸ் குஷ் மீ இவங்களும் த்ரிஷா தான் ப்ரீயா ரிலாக்ஸ்சா பீச்ல் இருக்கும் பொது எடுக்கப்பட்ட படம் ( யாரு எடுத்தா? எந்த பீச்? அப்படி எல்லாம் கேட்கபடாது ஒக்கே.)

16 வயது பெண் தனியாக வந்தால்!? உற்சாகத்துடன் வரவேற்பு.




நெதர்லாந்தைச் சேர்ந்த லாரா டெக்கர் என்ற 16வயது பெண் உலகம் முழுவதையும் படகு மூலமாக சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.


இவர் தனது 14வது வயதில் ஒரு படகு மூலம் தனியாக உலகை சுற்றி வர விரும்பினார். அதற்கு நெதர்லாந்து அரசு சம்மதிக்கவில்லை. எனவே அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்து குழந்தைகள் நல மையத்தின் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


வழக்கின் தீர்ப்பு இவருக்கு சாதகமாக அமையவே கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்டு 21-ந் தேதி கிப்ரால்டார் என்ற இடத்தில் இருந்து 38 அடி நீள குப்பி என்ற எந்திர படகின் மூலம் தனது பயணத்தை தொடங்கினார்.



8 மாதங்கள் கழித்து கரீபியன் கடலில் உள்ள செயின்ட் மார்டினை வந்தடைந்த டெக்கரை அவரது பெற்றோர் உட்பட சுமார் 500 பேர் உற்சாகத்துடன் வரவேற்றனர். தற்போது உலகை தனியாக சுற்றி முடித்த இளம் வயது வீராங்கனை என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

ஒரு பெண் அழுதால்
அதுக்கு பல காரணங்கள்
இருக்கலாம்.
ஆனால் ஒரு ஆண் அழுதால்
அதுக்கு ஒரே காரணம் தான்
இருக்க முடியும்.
 பெண்.



இம்புட்டு அழகா இருந்தா...!!!???


Monday, January 23, 2012

பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கும்

உடுத்தும் உடைகளுக்கு ஏற்ப இன்றைக்கு நகைகளை அணியும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வீட்டில் நகை இருக்கிறதே என்பதற்காக அள்ளிப் போட்டுக்கொண்டு போவது அழகையே மாற்றிவிடும். அது ஆபத்தானதும் கூட. எனவே எந்த நேரத்தில் என்ன நகைகளை அணியலாம் என்பதை தெரிவித்துள்ளனர் அழகியல் நிபுணர்கள்.


நகைகளைத் தேர்வு செய்யும் பொழுது உங்கள் வயதைக் கவனத்தில் கொள்வது அவசியம். வயதானவர்கள் அளவில் பெரிய நகைகளையும், சிறியவர்கள் சின்னநகைகளையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும். சீரான நடுத்தர நகைகளை அணியலாம். அது இருவருக்குமே பொருத்தமானது.

வெரைட்டியா போடுங்க


எ‌ப்போது‌ம் ஒரே மா‌தி‌ரியான தங்க நகைகளையே அ‌ணியாம‌ல், மு‌த்து, க‌ல் வை‌த்தது, த‌ங்க நகை எ‌ன்று ‌வித‌விதமாக நகைகளை வா‌ங்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். நா‌ம் செ‌ல்லு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ன் வகை‌க்கு‌ம், கால நேர‌த்‌தி‌ற்கு‌ம் ஏ‌ற்றபடி இ‌தி‌ல் ஒ‌ன்றை தே‌ர்வு செ‌ய்து அ‌ணி‌ந்து செ‌ல்லலா‌ம்.

பாரம்பரிய நகைகள்


பாரம்பரிய உடைகளுடன் பாரம்பரிய நகைகளை அணிந்தால் அது வித்தியாசமான தோற்றத்தை அளிக்கும். அவற்றுடன் எங்கு பார்த்தாலும் கவரிங் நகைகள் கிடைக்கின்றன. இவை விலை மலிவாக இருப்பதோடு அழகாகவும் ஈர்க்கக் கூடியவையாகவும், தொலைந்து போனால் கூட அதிகம் கவலைப்படத் தேவையில்லை.


ஆக்ஸிடைஸ்ட் நகைகள் எந்த விதமான உடையோடும் அழகாகத் தோன்றும். தங்க நகைகள் போல் இல்லாமல் இவற்றை மார்டன் உடைகளோடும்; அதிக அளவிலும் அணியலாம்.

பகலில் குறைவான நகை

காலை நேரங்களில் நகைகளை குறைவாகவும், இரவில் அதிகமான நகைகளையும் அணியவேண்டும் அப்பொழுதுதான் நகையின் அழகானது அணிபவருக்கு கூடுதல் அழகு தரும்.


உயரமான பெண்கள் சின்னச் சின்ன நகைகளை அணிந்தால் எடுப்பாக தெரியாது. எனவே அதற்கேற்ப தேர்வு செய்து அணியவேண்டும். நீண்ட கழுத்து கொண்ட பெண்கள் உயரம் குறைந்த கழுத்து ஒட்டிய நெக்லெஸ் அணிவது அழகாக்கி காட்டும் .

கலந்து அணியக்கூடாது


வெளிர் சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுக்கு வெள்ளி நகைகளும், சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளுக்கு தங்க நகைகளும் கச்சிதமாகப் பொருந்தும். முக்கியமான விசயம் தங்க நகைகளை தனியாக அணிய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தங்கத்தோடு, வெள்ளி, கவரிங் போன்ற நகைகளை இணைத்து அணியக்கூடாது.



வெளிநாட்டுத் துணி வகைகளை அணிபவராக இருந்தால் அதிகமான நகைகளை அணிய வேண்டாம் அவற்றுடன் மெல்லிய செயின் சின்ன சின்ன ஜிமிக்கியே போதுமானது. அனைத்தையும் விட முக்கியமான விசயம் பொன்னகை அணிவதோடு உதட்டில் புன்னகையும் இருந்தால்தான் அழகை அதிகரித்துக் காட்டும் இல்லையில் வெறும் அலங்கார பதுமையாக மட்டுமே இருக்க நேரிடும் என்கின்றனர் அழகியல் வல்லுநர்கள்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


சிம்ப்ளா நகை போட்டு இருக்கு அழகு.. அழகு.. இல்ல அஞ்சலி.. அஞ்சலி.