நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, January 4, 2012

படித்த முட்டாளுக்கு ஐவர் குழு வைத்த மொத ஆப்பு


முல்லைப் பெரியாறு அணையில் சமீபத்தில் நேரடியாக ஆய்வு நடத்திய தொழில்நுட்ப உறுப்பினர்கள் சி.டி.தத்தே, டி.கே.மேத்தா ஆகியோர் அடங்கிய குழு அளித்த ஆய்வறிக்கை நேற்று ஐவர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழக, கேரள வக்கீல்களின் வாதங்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதன் முடிவில் கேரள அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட அனைத்து வாதங்களும் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் அறிவித்தார்.

அப்போது நீதிபதி கூறுகையில், தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் சி.டி.தத்தே மற்றும் டி.கே. மேத்தா ஆகியோர் ஆராய்ந்து அளித்த அந்த அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், இடுக்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அணைக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை.



மேலும், முல்லைப் பெரியாறு, வைகை, சிறுதோணி உள்ளிட்ட அணைகள் சமீபத்திய நில அதிர்வுகளால் பாதிக்கப்பட்டனவா என்று பார்த்த போது, எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. மேலும், முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது. இக்கருத்தை ஐவர் குழுவும் ஏற்கிறது.

தத்தேயும், மேத்தாவும் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டனர் என்று கூறி, அவர்களை நீக்க வேண்டுமென்று கேரளா சார்பில் கூறிய புகாரில், உண்மையில்லை. எனவே இரு உறுப்பினர்களையும் குழுவிலிருந்து நீக்க முடியாது. கேரளாவின் புகார் நிராகரிக்கப்படுகிறது.



மேலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போதைய 136 அடி என்பதிலேயே நீடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே அணையின் நீர்மட்டத்தை குறைப்பதா, வேண்டாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பது தொடர்பாக கேரள எம்.பிக்கள் பிரதமருக்கு அளித்த மனு விவரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.



முல்லைப் பெரியாறு அணையில் உடைப்போ, விரிசலோ இல்லை என்று கேரள அரசின் வக்கீல்களே தெளிவாக கூறியுள்ளனர். எனவே இதையும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் ஐவர் குழு தனது அறிக்கையை தாக்கல்செய்ய கால அவகாசம் கேட்கப் போவதில்லை. பிப்ரவரி 28ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தனது இறுதி அறிக்கையை குழு தாக்கல் செய்யும். அடுத்த கூட்டம் ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் நடைபெறும். அதன் பின்னர் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.



தமிழகத்திற்குப் பெரும் சாதகம்

ஐவர் குழுவின் இந்த முடிவு தமிழகத்திற்கு பெரும் சாதகமானதாக கருதப்படுகிறது. கேரளா கூறிய அனைத்துப் புகார்களும், குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என்பது அம்பலமாகி விட்டதாலும், அதன் குற்றச்சாட்டுக்கள், கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டதாலும், உச்சநீதிமன்றத்திலும் தமிழகத்திற்குச் சாதகமாகவே தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் பெண்ணையா அழகி என்றீர்கள்!!



அழகான பெண்களைக் கண்டால் எல்லோருக்கும் மனம் எங்கெங்கோ எகிறிக்குதிக்கும், அதுவும் சில பெண்கள் கிளாமராக வருவார்கள் பாருங்கள் அவர்களை ஊரே கூடிநின்று வேடிக்கை பார்ப்பதைக்கூடத் தெரியாதவர்கள் போல சும்மா அசால்டாக நடந்துசெல்வார்கள்.

இங்கேயும் ஒரு பெண்தான் சில்மிசம் காட்டுகின்றாள், இதைப் பார்த்தபின் சொல்லுங்கள் இவள் அழகியா இல்லையா என்று, அதைப்பற்றி தெரிந்துகொள்ள சில விதிமுறைகள் உள்ளன.

முதலில்  பெண்ணின் படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள், என்ன அழகாகத் தெரிகிறாளா? பின்னர் அப்பெண்ணின் படத்தை பதிவிறக்கிக் கொள்ளுங்கள், இப்போது அந்தப் படத்தை திறந்து அதனை 180டிகி்ரிக்கு திருப்புங்கள்…

என்ன கொடுமை சார் இது!!!




Tuesday, January 3, 2012

சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காகவா? ஃப்ரிட்ஜ்.


உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே ஃப்ரிட்ஜ். ஆனால் சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது ஃப்ரிட்ஜ். நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என சகலத்தையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை கதற அடித்துவிடுவார்கள். இது மிகவும் தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.



காய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் பிரிட்ஜில் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். குறிப்பாக ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியை பயன்படுத்துவது வேண்டவே வேண்டாம் என்பதுதான் அவர்களின் முக்கிய அறிவுரை.


நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் மாமிசத்தில் பாக்டீரியா உருவாகிவிடும் .அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் உண்டுவிட்டால், இரைப்பையில் நோய் தாக்கிவிடும். இதுபோன்ற இறைச்சியை உண்பதினால் இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, ஈரல், சிறு நீரகம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

விஷமாகும் உணவு

இறைச்சியை உடனடியாக கடைகளில் வாங்கிய உடனே வெட்டி வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினால்தான் அதில் உள்ள புரத சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அவ்வாறு இல்லாமல் வார கணக்கில் இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து, பின்னர் அதனை சமைப்பதினால் அதிலுள்ள புரத சத்துக்கள் அழிந்துவிடுவதோடு மட்டுமல்லாது, அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு, சமயங்களில் அது விஷ உணவாக மாறவும் வாய்ப்புண்டு என்கின்றனர்

உணவியல் வல்லுநர்கள். மொத்தத்தில் ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியே சமைக்கப்படுவதால், ஓட்டல்கள், சிற்றுண்டியகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்களில் வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கைவிடுவதே நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்!

எளிதில் நோய் தாக்கும்

அதேபோன்று நோய் தாக்கிய ஆடு, மாடு அல்லது கோழி போன்ற இறைச்சியில் வைட்டமின், புரத சத்துக்கள் சிதைந்து போயிருக்கலாம். எனவே இத்தகைய இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைத்து உண்பதனால் நோய் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது என்பதே மருத்துவர்களின் எச்சரிக்கை.

அதேபோல் நாட்கணக்கில் சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்த உணவை பின்னர் அடிக்கடி எடுத்து சூடு செய்து சாப்பிடுவதை நோய்களை நாமே காசு கொடுத்து அழைப்பதற்கு சமம். எனவே உணவுகளை தினசரி சமைத்து உண்பதே ஆரோக்கியம் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

நடிகர் சங்கத்தின் அவசரக் கூட்டம்

முல்லைப் பெரியாறு பிரச்சினை:  

சமீபத்தில் மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த உண்ணாவிரதம் வருகிற 8-ந்தேதி முல்லைப் பெரியாறு அணை அருகில் நடக்கிறது.

இயக்குனர்கள் அனைவரும் பஸ், வேன்களில் சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்கின்றனர். உண்ணாவிரதத்தில் நடிகர்கள்,

பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் இயக்குனர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்து கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

இதுபற்றி ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு தியாகராயநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் (நோட் தி பாயிண்ட்) நடக்கிறது. இதில் இயக்குனர்களுடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதா? அல்லது தனியாக போராட்டம் நடத்துவதா? என்று விவாதித்து முடிவு செய்யப்படுகிறது.


மனசாட்சி: சோத்திலே மண்ணு விளுந்திடும்னு பயம் - அந்த பயம் இருக்கட்டும். பார்க்கலாம் - முடிவு என்னன்னு.

Sunday, January 1, 2012

மனித (இனம்) உயிர் உருவாகிறது




மனித உயிர் எவ்வாறு உருவாகிறது. 

 தொழிற்சாலை போன்ற உடலின் செயல்பாட்டில் மனித(இனம்) உயிர்  எவ்வாறு உருவாகிறது என்பதை கிராபிக்ஸ் செய்யப்பட்ட குறும் படம்:

இதோ:

http://www.youtube.com/watch?v=sdZZmClD-rQ&feature=player_embedded#!

Saturday, December 31, 2011

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.



உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்,  நண்பர்களுக்கும் மற்றும்  உறவுகளுக்கும்:

மனசாட்சியின்:

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்






















Thursday, December 29, 2011

ஓவியரின் அதிநுட்பமான கலைப்படைப்பு!



 உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஓவியரின் (John Lennon) கைவண்ணத்தில் உருவான இந்த ஓவியம் முற்றிலும் வித்தியாசமானது, ஒரு ஓவியத்திற்குள் பல ஓவியங்கள் மறைக்கப்பட்டுள்ளன அதாவது பல சிறிய உருவங்களை வரைவதன் மூலம் பெரிய உருவமொன்று தோற்றம்பெற்றுள்ளது.

சாதரணமாக பார்க்கும்போது பெரிய உருவம் தெரிந்தாலும் சற்று உற்று நோக்கினால் அதன் உண்மைத்தன்மை நன்கு புலப்படும், நீங்கள் இருக்கும் இருக்கையை விட்டு சற்று பின்னோக்கி சென்று இந்த படங்களை பாருங்கள் பெரிய உருவம் தெளிவாகத் தெரியும்





Tuesday, December 27, 2011

அழகிய பெண் கண்ணை மூடினால்?




முதலில் எனக்கும் விளங்கவில்லை அப்படி என்னதான் அதிசயம் இருக்கிறது என்று. பார்த்த பிறகுதான் உன்மையிலேயே இது ஒரு அதிசயம் என்று உணரமுடிந்தது. கண்ணை மூடினா கனவில நீதானே என்ற பொன்மொழியை உண்மையாக்கும் விதத்தில் இருக்கிறது இந்தப் புகைப்படத்தின் சிறப்பு.



முதலில் இந்தப்படத்தில் இருக்கும் பெண்ணின் மூக்கில் இருக்கும் சிவப்புப் புள்ளியை ஒரு 30 செக்கன்களுக்கு உற்று நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும்,

பின்னர் உங்கள் கண்களை வேறு எங்காவது உள்ள ஒரு முகப்பரப்பை நோக்கித் திருப்புங்கள், அடுத்து கண்களை மூடுங்கள், மூடியவண்ணம் சிறிந்துநேரம் காத்திருங்கள்.

இப்போது உங்கள் நினைவுகளில் தெரிபவள் யார் எனச் சொல்லுங்கள்உங்கள் விழித்திரையில் அழகிய பெண் உருவம் அசைந்தபடி வருவதை அவதானிக்கலாம்அப்படி இல்லையாயின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யுங்கள்.. உங்கள் கனவு தேவதை காட்சி தருவாள்..

வேதாளத்தின் கேள்வி!



தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், வேதாளத்தை இறக்கி தோளில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்தார். வழக்கம்போல கலகலவென சிரித்த வேதாளம், ‘விக்கிரமாதித்தா... உனக்கும் எனக்கும் நடக்குற இந்த நீயா, நானா போட்டி ரொம்ப சுவாரஸ்யமா இருக்குல்ல...” என் பேச்சை ஆரம்பித்தது.
 

“விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! ஊழலுக்கு பெயர் போன ஒரு தேசம். அந்நாட்டைச் சேர்ந்த ஒரு மாநிலத்தில் வயதான ஒரு குறுநில மன்னன் பல்லாண்டுகளாக ஆட்சி செய்து வந்தார். மத்திய கூட்டாட்சியிலும் பங்கு வகித்து வந்தார்! கருணைக்கும் நிதிக்கும் தாந்தான் அதிபதி என்று சொல்லிக் கொள்ளும் அவர், தனது வாரிசு அரசியலுக்கும் பெயர்போனவர்! மகன்கள், மகள், பேரன்... என் ஒருவர் விடாமல் பதவி வழங்கி மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்தார்! வாரிசு அரசியல் என்றாலே ‘அடுத்த வாரிசு யார்?’ என்ற கேள்வி எழுவது இயற்கைதானே? ‘அடுத்த வாரிசு யார்?’ என் அவர் பேரனது பத்திரிகை, கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டது!

இது போதாதா? வாரிசுகளுக்குள் கடும் போர் மூண்டது! ஒரு நகரமே தீப்பற்றி எரிந்தது! போரில் 3 அப்பாவிகள் பலியாகினர்! கோபமடைந்த தாத்தா எவ்வளவு சொல்லியும் கேட்காத அந்த பேரனின் மத்திய மந்திரி பதவியைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், தனது குடும்பத்தை விட்டே ஓரம் கட்டினார்! பதிலுக்கு தனது மகளின் நம்பிக்கையைப் பெற்ற ராசா என்பவரை மத்திய மந்திரியாக்கினார்! அதிர்ச்சி அடைந்த பேரனோ தனது குடும்ப ஊடகங்கள் மூலம் ராசாவின் ஊழல்களை உலகிற்கே வெளிச்சம் போட்டுக்காட்டினார். முடிவில் ராசாவும், தாத்தா மன்னரின் மகளுமே சிறைத்தண்டனைக்கு ஆளாக வேண்டிய நிலை வந்தது!

ஆனால் அந்த ஊழல் சம்பந்தப்பட்ட புலனாய்வில்தான் தெரியவந்தது பேரனும் ஊழலில் சளைத்தவர் அல்ல என்று! பேரன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை எனது குடும்ப வியாபாரத்திற்கு திருப்பி விட்டிருக்கிறார் என்று!

குறுநில மன்னரின் மகள் மட்டும் ஜாமீனில் வந்திருக்கிறார்! ராசா எப்போது வெளியில் வருவார் என்று யாருக்கும் தெரியாது! ஆனால் மகளின் மீதும் ராசா மீதும் கோபம் கொண்ட, நடவடிக்கை எடுக்க கோரிய மத்திய ஆட்சியாகட்டும், அந்நாட்டின் புலனாய்வுத் துறையாகட்டும், எதிர்க்கட்சிகளாகட்டும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளாகட்டும் கைநிறைய ஆதாரங்கள் இருந்தும் - பேரன்கள் செய்த மோசடிகளை மட்டும் மறந்தும், மறைப்பதும் ஏன்? நாடே கைகட்டி வாய்பொத்தி நிற்கும் மர்மம் என்ன? விக்ரமாதித்தா!இந்த வருடத்தின் மிகப்பெரிய இந்த கேள்விக்கு விடை தெரிந்தும் நீ வாய்திறக்காமல் இருந்தால் உனது தலை வெடித்து சிதறிவிடும்” - என்று எச்சரித்த வேதாளம், மெளனம் கலைந்து விர்ர்ர்... என் மீண்டும் மரத்தை நோக்கி பாய்ந்தது!


நன்றி : தினமணி

அன்னை சொன்னால் ஒழிய விலகமாட்டேன்!






மனசாட்சி : அன்னை குரங்கும் பதவியினைப் பிடித்து தொங்குதே???

Monday, December 26, 2011

ஜாம்பவான்களே...உங்களால் முடியும்!?

ஒரு வாய்க் கொழுப்பெடுத்தா அடுத்தவன் வரட்டிழுப்பிழுத்தா
அவன் தோலுரிப்பவண்டா தமிழச்சி பால் குடிச்சவண்டா
அட விஷயங்கள் பல அறிஞ்சவன் நான் வெவரங்கள் பல புரிஞ்சவன் நான்
சண்டைக்கு வந்தா சவால் விட்டா
தடியத்தான் புடிச்சித்தான்
கை விரலில சுத்துற சுத்துல 
அண்ணாச்சி உன்ன நான் புண்ணாக்கு தின்ன வப்பேன் - தேவர் மகனில் கமலஹாசன்.

மனசாட்சி: இப்படி தமிழனை உசுபேத்தியே..., எந்த ஏரியாவை காட்டி கல்லா கட்டினிகளோ அந்த ஏரியாவில்தான் தண்ணி பிரச்னை - ஒரு குரல் கொடுங்களேன். (முடியுதான்னு பார்ப்போம், விஷயங்கள் பல அறிஞ்சவர் - வெவரங்கள் பல புரிஞ்சவர்) 
   

பத்துமாடி வீடு கொண்ட சொத்து சொகம் வேண்டாம்
பட்டங்களை வாங்கித் தரும் பதவியும் வேண்டாம்
மாலைகள் இடவேண்டாம் தங்க மகுடமும் தர வேண்டாம்
தமிழ்த் தாய்நாடு தந்த அன்பு போதுமே
என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா.
என் உடல்பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா - படையப்பாவில் ரஜினிகாந்த்.

மனசாட்சி: சார், அவ்வளவு எல்லாம் வேணாம். முல்லை பெரியாருக்காக
 ஒரு குரல் கொடுங்களேன். (எல்லாம் வீண் ஜம்பம்.  தமிழனின் காசு வேணும். தமிழனை வைத்து பிழைக்கணும்).
எல்லாம் காலம் கடந்து புரியுது - புரிய வைத்தமைக்கு நன்றி   

டிஸ்கி - எதுக்காக தமிழ் நடிகர் திலகம் போட்டோ கேட்பவர்களுக்காக - இந்த இரு படங்களிலும்  ஒரு ஒற்றுமை  என்னனா தமிழ் நடிகர் திலகம் இவங்களோட நடித்து இருப்பார்.. நடிகர் திலகம் போட்டாவை பார்த்தாவது தமிழ் நடிகர் நடிகைளுக்கு தமிழ் உணர்வு வருதான்னு பாப்போம்

தமிழச்சி பால் குடிச்சவண்டா.....தமிழன் பாரதிராஜா





முல்லைப் பெரியாறு அணையைக் காக்கவும், கேரள அரசின் அநியாயப் போக்கைக் கண்டித்தும் மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் கூட்டம் நடைபெற்றது.


இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "நான் வரலாறு, இலக்கியம் படித்ததில்லை. ஆனால் மக்களை உணர்வுப்பூர்வமாக படித்தவன். தமிழர்கள் பெருந்தன்மையானவர்கள். அந்தப் பெருந்தன்மை காரணமாகவே இன்று தன் உரிமைகளையும் இழந்து வருகின்றனர். இனியும் இந்த நிலை தொடர வேண்டுமா?

முல்லைப் பெரியாறு பிரச்சினை என்பது 5 மாவட்ட மக்களின் பிரச்சினை மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை. இந்த பிரச்சினையில் மத்திய அரசு தந்திரப்போக்கை கையாள்கிறது.


ஆனால், முல்லைப் பெரியாறு பிரச்சினையில், தமிழக நடிகர்கள் இன்னும் குரல் கொடுக்கவில்லை. உங்கள் உதிரத்தை, பணத்தைச் சாப்பிடுபவர்கள், ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நீங்கள்தான் கேட்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகம் இனி ஏமாந்தால் பாலைவனமாகிவிடும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடிகர்கள் சங்கம் ஏன் குரல் கொடுக்கவில்லை? எதற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பெயர்? இனி இந்தப் பெயரே இருக்கக்கூடாது. தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் எனப் பெயரை மாற்றுங்கள்.
 


முல்லைப் பெரியாறு அணையைக் காக்கக் கோரி தேனி மாவட்ட மக்கள் நடத்தும் போராட்டங்கள், வன்முறைச் செயல்களாக கேரளத்தில் சித்திரிக்கப்படுகின்றன. தமிழர்கள் கேரள மாநிலத்தில் தாக்கப்படுவதும், விரட்டப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன. இனியும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.



கொசுறு:  

தனது கொடிவீரனும், அன்னக்கொடியும் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளாராம் பாரதிராஜா. மேலும், தனது இரு மலையாள நாயகிகளையும் அனுப்பி வைத்து விட்டாராம்.

முல்லைப் பெரியாறு விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், தானே மலையாள நடிகைகளை வைத்து படத்தை தொடர்ந்து இயக்கினால் சரியாக இருக்காது - பாரதிராஜா.


மனசாட்சி:

தமிழன்டா.. இவர் கேட்பதை தான் தமிழ் நாட்டு மக்களும் கேட்கின்றனர் - அடியே, ஆப்பு இருக்குடி. 

தமிழன் முன்னுக்கு வர சினிமா மாயை விட்டாலே போதும்.

நன்றி - படங்கள் கூகிள்

அமைச்சரவை விரைவில் மாற்றம்



தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் அதிமுகவை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவரால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இன்னும் ஏன் மாற்றப்படவில்லை என்று பொது மக்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆளும் கட்சி வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த அதிரடி மாற்றப் பட்டியலில் ஹிட் லிஸ்டில் இருப்பவர்கள்:

போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,

பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம்,
தொழில்துறை அமைச்சர் வேலுமணி,

வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி

வனத்துறை அமைச்சர் பச்சமால்,

வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி,

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய்

உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மாற்றப்படலாம் அல்லது அமைச்சர்கள் வகிக்கும் துறைகளாவது மாற்றப்படும் என்று கூறப்படுகின்றது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டெல்லி புறப்பட்டதும் இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

மனசாட்சி : 6 மாதத்தில் 7வது முறையாக மாற்றம் 

செயலற்ற பிரதமரால் சென்னை செயலிழந்தது.



வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறை செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.

பாதுகாப்பு கருதி வாகனப் போக்குவரத்தை போலீஸார் முற்றிலும் நிறுத்தியதால் கிண்டி ராஜ்பவன் முதல் கடற்கரை காமராசர் சாலை முழுவதும் ஒரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா சாலை, அதன் பக்கவாட்டுச் சாலைகள், மீனம்பாக்கம், பல்லாவரம் வரை வாகனங்கள் ஆயிரக்கணக்கில் தேங்கி நின்றன.

எந்த வாகனமும் போக முடியாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட போக முடியாமல் திணறி விட்டன. அலுவலகளுக்குச் செல்ல கிளம்பியோர் வாகனங்கள் தேங்கிப் போனதால் பெரும் சிரமத்திற்குள்ளாகி விட்டனர்.

பிரதமர் வருகைக்காக இப்படியா போக்குவரத்தை முற்றிலும் நிறுத்துவது என்று மக்கள் குமுறித் தள்ளி விட்டனர்.

மனசாட்சி: செயலற்ற பிரதமரால் சென்னை செயலிழந்தது.

இவரு தான் செயல் படலைனா போற இடம் எல்லாமுமா # டவுட்டு

பாப்பாவுக்கு இப்படி படுத்தால்....வருதாம்.






பாப்பாவுக்கு இப்படி படுத்தால் தான் தூக்கம் வருதாம்






சின்ன வயதில் விளையாடிய கன் அதாங்க துப்பாக்கி.

தமிழ்நாடு எதிர் கட்சி தலைவர் கைது



பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை விஜயகாந்த் அறிவித்திருந்தார்.அதன்படி கருப்புக் கொடி காட்டுவதற்காக இன்று காலை கிளம்பிய விஜயகாந்த்தை புறப்பட்ட இடத்திலேயே கைது செய்து கொண்டு சென்று விட்டது போலீஸ்.

இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கோவை, கரூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, திருச்சி, திண்டுக்கல், அவினாசி, கிருஷ்ணகிரி, ஓசூர், ராமேஸ்வரம், சிதம்பரம் உள்ளிட்ட பல ஊர்களிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சென்னையிலும் தேமுதிகவினர் சில இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கைதானார்கள்.


மனசாட்சி: அரசியலுக்குப் புகுந்த பின்னர், அரசியல்வாதியாக மாறிய பின்னர், எம்.எல்.ஏவான பின்னர், எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் முதல் முறையாக கைதாகியுள்ளார் விஜயகாந்த்

Saturday, December 24, 2011

மனசாட்சியின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 2011



கிறிஸ்துமஸ்  நல்வாழ்த்துக்கள் 2011







அணையுடைப்பும் கடையடைப்பும்

 



இது... நியாயத்தை உணர்ந்ததாலா?
வாழ்க்கையை நடத்த வேண்டியிருப்பதாலா?
எப்படியோ... எதிர்ப்பைப் பதிவு செய்தாயிற்று!





டேம் 999 படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது - கடவுளை வேண்டுகிறேன் ஏ.ஆர்.ரஹ்மான்



தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும், குமுறலையும் சம்பாதித்த, தமிழக அரசால் திரையிட தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய டேம் 999 படத்துக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.

ரஹ்மானின் இந்த வேண்டுதல், முல்லைப் பெரியாறு அணைக்காக போராடி வரும் அனைவருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் அளித்துள்ளது. ஒரு தமிழராக இருந்து கொண்டு ரஹ்மான் இப்படிச் சொல்லலாமா என்று அனைவரும் குமுறுகின்றனர்..

இந்தப் படத்தின் இரு பாடல்கள் தற்போது ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். அதில் அப்பாடல்கள் வெற்றி பெறத்தான் ரஹ்மான் வாழத்து தெரிவித்துள்ளார்.

மனசாட்சி: தமிழகத்தில் பெரும் புயலையும், சர்ச்சையையும் கிளப்பிய இப்படத்துக்கு ஆதரவாக இசைப் புயல் கருத்து தெரிவித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாமே...!

விண்ணைத் தொடும் விலைவாசி - தத்தளிக்கிறது கேரளா!



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு கொந்தளித்துப் போயிருப்பதால் மறைமுகப் பொருளாதாரத் தடையில் கேரள மாநிலம் சிக்கியுள்ளது. இதன் விளைவு கேரளாவில் வரலாறு காணாத விலை உயர்வு என்று கூறப்படுகிறது.

காய்கறி விலை விண்ணைத் தொட்டுள்ளதாம். கிலோ தக்காளி ரூ. 300 வரை விற்பதாக கூறப்படுகிறது. மற்ற காய்கறிகளின் நிலையும் கூட அதுதான் என்கிறார்கள். அதேபோல பூக்கள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றின் விலையும் படு உயரத்திற்குப் போயுள்ளதாம். பாலை பெருமளவில் தமிழகத்திலிருந்துதான் கேரளா வாங்குகிறது. பெருமளவிலான பால் கர்நாடகத்திலிருந்தும் போகிறது. தற்சமயம், தமிழகத்திலிருந்து வரும் பாலுக்குத் தடை இல்லை என்று கூறப்படுகிறது.

இப்படி தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட மறைமுகமாக கிளம்பியுள்ள பொருளாதாரத் தடையால் கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்து மக்களை பாதிப்புக்குள்ளாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல தமிழகத்திலிருந்து கேரளாவுக்குப் போகும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் வெகுவாக குறைந்து விட்டதாம். குறிப்பாக தேக்கடிக்கு வரும் தமிழக பயணிகளின் எண்ணிக்கை அடியோடு நின்று விட்டது. இதனால் படகு குழாமில் மயான அமைதி நிலவுகிறது.

கேரளாவில்தான் இந்த நிலை என்றில்லை தமிழகத்திலும் கூட மலையாளிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். தமிழகம் முழுவதும் விரவிப் பரந்துள்ள கேரளக்காரர்களின் கடைகள் தினசரி தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.

டீக்கடை, பேக்கரிக் கடை, நகைக் கடை, நிதி நிறுவனக் கடைகள் என பல வகையான தொழிலில் மலையாள மக்கள் தமிழகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கடைகள் தினசரி ஆங்காங்கு தாக்கப்பட்டு வருகின்றன. இதனால் அவர்களுக்கு பெரும் பொருள் நஷ்டமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. தாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்கு கேரள அரசையும், கேரள அரசியல்வாதிகளையுமே அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் பெருமளவில் மலையாளிகள் வசிக்கிறார்களே என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் கேரள அரசியல்வாதிகள் பொறுப்பின்றி நடந்து கொள்வதாக அவர்கள் புலம்புகின்றனர். பல காலமாக நாங்கள் தமிழகத்தில் வசித்து வருகிறோம். தமிழகத்தில் எங்களுக்கு மிக மிக அதிக சுதந்திரம் உள்ளது. கேரளாவில் கூட நாங்கள் இப்படி இருக்க முடியாது. தமிழர்களைப் போலவே நாங்களும் மாறி விட்டோம். இப்படிப்பட்ட நிலையில் எங்கள் மீது தாக்குதல் நடைபெறும் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை, என்ன செய்வது என்று புரியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இப்படி பல பக்கங்களிலும் தமிழகத்தின் போராட்டத்தால் கேரள அரசுக்கும், அங்குள்ள மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பாதிப்புகள் வெளியே தெரியாத அளவுக்கு 'மேக்கப்' செய்து வருகிறது கேரள அரசு என்கிறார்கள்.